ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
Appearance
நூலாசிரியர் | சான் பெருக்கின்சு |
---|---|
உண்மையான தலைப்பு | Confessions of an Economic Hit Man |
மொழிபெயர்ப்பாளர் | இரா.முருகவேள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியீட்டாளர் | விடியல் பதிப்பகம்; கோயம்புத்தூர் 641 015 |
வெளியிடப்பட்ட நாள் | திசம்பர் 2006 |
பக்கங்கள் | 318 |
ISBN | 81-89867-11-3 |
"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ’சான் பெருக்கின்சு’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் தோரிசோசு போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது.
வெளியிணைப்புகள்
[தொகு]==மேற்கோள்கள