உள்ளடக்கத்துக்குச் செல்

ஒகினவா சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒகினவா சண்டை
2ஆம் உலகப்போர் (பசிபிக் போரின்) பகுதி

மார்ச் 26, 1945: ஐக்கிய அமெரிக்க ஈருடகப் படையினர் தரையிரக்கம்
நாள் மார்ச் 18 1945ஜூன் 23 1945
இடம் ஒகினவா, யப்பான்
நேச நாடுகள் வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா

 ஐக்கிய இராச்சியம்
 கனடா
 ஆத்திரேலியா
 நியூசிலாந்து

 சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா சிமொன் பொலிவர் பக்னோர் 

ஐக்கிய அமெரிக்கா யோசப் W. ஃச்டில்வெல்
ஐக்கிய அமெரிக்கா ரேமொன்ட் A. ஃச்பொரன்ச்

சப்பானியப் பேரரசு மிட்சுரு உசிஜிமா 

சப்பானியப் பேரரசு இசமு சோ 

பலம்
548,000 வீரர்,
1,300 கப்பல்கள்,
 ? விமானங்கள்
100,000 விரர் மற்றும் துணைப்படைகள்,
 ? கப்பல்கள்,
 ? விமானங்கள்
இழப்புகள்
12,513 கொலை அல்லது காணவில்லை,
38,916 காயம்,
33,096 படைத்துறை அல்லாத,
79 கப்பல்கள்,
763 விமானங்கள் அழிப்பு
66,000 கொலை அல்லது காணவில்லை,
17,000 காயம்,
7,455 கைது,
16 கப்பல்கள்,
3,130 விமானங்கள் அழிப்பு,
75,000-140,000 பொதுமக்கள் கொலை அல்லது காணவில்லை

ஐஸ்பெர்க் நடவடிக்கை (Operation Iceberg) என்று குறிப்பெயரிடப்பட்ட ஒகினவா சண்டை (Battle of Okinawa) யப்பானிய ஒகினவா தீவுகளில் இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போரின் ஒரு அங்கமாக நடைபெற்ற மிகப்பெரிய ஈருடகச் சண்டையாகும்.[1] 1945 ஆம் ஆண்டின் மார்ச் கடைசி முதல் யூன் மாதம் வரை நடைபெற்றது.

இச்சண்டையில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளின் செறிவு, கப்பல்களின் எண்ணிகை, கவச வண்டிகள் போன்றவை காரணமாக இச்சண்டை ஆங்கிலத்தில் டைப்பூன் ஃச்டீல் (Typhoon of Steel; இரும்பு சுறாவளி) யப்பானிய மொழியில் தெற்சுனோ அமே (இரும்பு மழை) என அழைக்கப்பட்டது. சண்டையின் முன்னர் ஒகினவாவில் 435,000 பேர் வசித்தனர் இவர்களில் 75,000 முதல் 140,000 இச்சண்டைகளின் போது கொல்லப்பட்டனர்.[2]

நேச நாடுகள் யப்பான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையான டவுன்ஃபோல் நடவடிக்கையின் (Operation Downfall) தொடக்கப்புள்ளியாக ஒகினவாவை பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. இருப்பினும் டவுன்ஃபோல் நடவடிக்கையில் முன்னராக ஒகினவா சண்டையை தொடர்ந்து இரோசிமா, நாகசாகி நகரங்கள் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல், இரசியா யப்பான் மீது போர் பிரகடனப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் காரணமாக யப்பான் சரணடைந்ததன் காரணமாக இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The planning for the amphibious assault and ensuing battle was codenamed Operation Iceberg by the Allies.
  2. Astor. pp 508


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகினவா_சண்டை&oldid=2758023" இலிருந்து மீள்விக்கப்பட்டது