உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருளாளர் திருத்தந்தை
ஐந்தாம் அர்பன்
ஆட்சி துவக்கம்28 செப்டம்பர் 1362
ஆட்சி முடிவு19 டிசம்பர் 1370
முன்னிருந்தவர்ஆறாம் இன்னசெண்ட்
பின்வந்தவர்பதினொன்றாம் கிரகோரி
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1334
ஆயர்நிலை திருப்பொழிவு6 நவம்பர் 1362
அன்டோயின் அபெர்ட்-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்வில்லியம் தெ க்ரிமோர்த்
பிறப்பு1310
கிரிசாக், லான்குடோக், பிரான்சு அரசு
இறப்பு(1370-12-19)19 திசம்பர் 1370
அவிஞ்ஞோன், திருத்தந்தை நாடுகள்
வகித்த பதவிகள்
  • புனித விக்டர் ஆதீனத்தின் தலைவர் (1361-1362)
  • மோன்தெ கசீனோ ஆதீனத்தின் ஆளுநர்(1366-1369)
  • அவிஞ்ஞோனின் மேலாண்மையர்(1366-1367)
புனிதர் பட்டமளிப்பு
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
பகுப்புஅருளாளர்
முத்திப்பேறு10 மார்ச் 1870
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்-ஆல்
அர்பன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை ஐந்தாம் அர்பன் (இலத்தீன்: Urbanus V; 1310 – 19 டிசம்பர் 1370), இயற்பெயர் வில்லியம் தெ க்ரிமோர்த்,[1] என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 28 செப்டம்பர் 1362 முதல் 1370இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவர் பெனடிக்டன் சபையினர். அவிஞ்ஞோன் ஆட்சிக்காலத்தில் ஆட்சிசெய்த ஆறாம் திருத்தந்தை.

இவர் பேரறிஞராகவும், புனிதராகவும் பலராலும் போற்றப்பட்டவர்.[2] திருத்தந்தையாக தேர்வானப்பின்பும் இவர் பெனடிக்டன் சபை சட்டங்களைப் பின்பற்றி எளிய வாழ்வு வாழ்ந்தார். திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1870இல் இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார். அவிஞ்ஞோன் ஆட்சிக்காலத்தில் ஆட்சிசெய்த திருத்தந்தையருள் முத்திபேறுபட்டம் பெற்ற ஒரே திருத்தந்தை இவர் ஆவார்.

இவர் தனது ஆட்சிக்காலத்தில் திருச்சபையினைச் சீரமைக்க முயன்றார். பல கோயில்களையும் மடங்களையும் புதுப்பித்தார். இவர் தனது ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்போது கொண்ட குறிக்கோளான பெரும் சமயப்பிளவினை முடிவுக்குக் கொணரப் பெரிதும் முயன்றார். ஆயினும் இவரின் முயற்சி பலனளிக்கவில்லை.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Richard P. McBrien, Lives of the Popes, (HarperCollins, 2000), 243.
  2. C. W. Previte-Orton, A History of Europe: From 1198 to 1378, (1951), 242-3.
  3. "திருத்தந்தை ஐந்தாம் அர்பன்". 
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
28 செப்டம்பர் 1362 – 19 டிசம்பர் 1370
பின்னர்