ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி
- சில நேரங்களில் மூன்றாவது அணி என்று வழங்கப்படுகிறது. 1996-98 மூன்றாம் அணிக்கு, ஐக்கிய முன்னணி (இந்தியா) பார்க்கவும் .1989-91ல் ஆட்சி புரிந்த கூட்டணிக்கு, தேசிய முன்னணி (இந்தியா) பார்க்கவும்.
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி 2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. இடதுசாரி கட்சிகளும் மாநில கட்சிகள் சிலவும் இணைந்து இதனை உருவாக்கின. இது மார்ச் 12, 2009 அன்று பத்து வெவ்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணியாக பெங்களூருவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள டொப்பாசு பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உருவானது.[1]. அப்போது வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
செல்வந்தர்களுக்கு துணைநிற்கும் பொருளியல் கொள்கைகளைக் கொண்ட தேசியக் கட்சிகள் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி போன்றவற்றிற்கு எதிராகவும் மதவாத மற்றும் தாராண்மைவாத சக்திகளின் வளர்ச்சிக்கெதிராகவும் விவசாயிகள்,நலிவடைந்தோர்,தொழிலாளர்,பிற பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகள்,பெண்கள்,சிறுபான்மையினர்,இளைஞர்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த மூன்றாம் அணி உருவாகிறது
2009 பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், இக்கூட்டணி சிதறியது. தேர்தலுக்குப் பின்னர் இதில் அங்கம் வகித்த கட்சிகள் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கி விட்டன.ஜூன் 18, 2007ல், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு , உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் , ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோருக்கு, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா விருந்து அளித்தார் . என்று அழைக்கப்படும் மூன்றாவது முன்னணியை உருவாக்குவதாக அறிவித்தார் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி .அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஜெவும் சந்திரபாபு நாயுடு தலைவராகவும் இருந்தார்.
உறுப்பினர் கட்சிகள்
[தொகு]கட்சிகள் | மக்களவை உறுப்பினர்கள் 2009 தேர்தலுக்கு முன் | மக்களவை உறுப்பினர்கள் 2009 தேர்தலுக்கு பின் |
---|---|---|
இடது முன்னணி (இந்தியா) | 53 | 24 |
பகுஜன் சமாஜ் கட்சிக | 19 | 21 |
தெலுங்கு தேசம் கட்சி | 5 | 6 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) | 0 | 9 |
ஜனதா தளம் (மதசார்பற்ற)ச | 4 | 3 |
அரியானா ஜன்கித் காங்கிரசு | 0 | 1 |
பிஜு ஜனதா தளம் (BJD) | 11 | 14 |
பாட்டாளி மக்கள் கட்சி (PMK) | 6 | 0 |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) | 4 | 1 |
மொத்தம் | 102 | 79 |
- க: 2009 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு நல்குபவை
- ச: 2009 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் மூன்றாம் அணியிலிருந்து விலகி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் இணைந்தவை.
மூலம்:[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Left, key regional parties launch the Third Front". http://news.rediff.com/report/2009/mar/12/third-front-is-launched1.htm. பார்த்த நாள்: 2009-03-12.
- ↑ "Third Front is not a threat, say Congress and BJP". The Times Of India. 2009-03-12. http://timesofindia.indiatimes.com/India/Third-Front-is-not-a-threat-say-Congress-and-BJP/rssarticleshow/4256233.cms. பார்த்த நாள்: 2009-03-12.