எல்லென் சுவாலோவ் ரிச்சர்ட்ஸ்
எல்லென் சுவாலோவ் ரிச்சர்ட்ஸ் | |
---|---|
எல்லென் ஹெச் ரிச்சர்ட்ஸ் From The Life of Ellen H. Richards by Caroline L. Hunt, 1912 | |
பிறப்பு | எல்லென் ஹென்ரியேட்டா சுவாலோவ் திசம்பர் 3, 1842 மாசாச்சூசெட்ஸ் ,டன்ஸ்டபில் |
இறப்பு | மார்ச்சு 30, 1911 பாஸ்டன், மாச்சாசூசெட்ஸ் | (அகவை 68)
கல்லறை | கிறிஸ்து தேவாலய இடுகாடு கார்டினர் மெயின் |
இருப்பிடம் | 32 எலியாட் தெரு, ஜமைக்கா சமவெளி,மாசாச்சூசெட்ஸ் |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வெஸ்ட்ஃபோர்ட் அகாதமி வாசர் கல்லூரி மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் |
பணி | வேதியியலாளர் பேராசிரியர் |
அறியப்படுவது | மனையியல் மனித சூழ்நிலையியல் சத்துணவு |
பெற்றோர் | ஃபென்னி கோல்ட் டெய்லர் பீட்டர் சுவாலோவ் |
வாழ்க்கைத் துணை | ராபர்ட் ஹாலோவெல் ரிச்சர்ட்ஸ் (1844–1945) m.1875 |
கையொப்பம் |
எல்லென் ஹென்ரியெட்டா சுலோவ் ரிச்சர்ட்ஸ் (Ellen Swallow Richards, டிசம்பர் 3, 1842 – மார்ச் 30, 1911) 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பொறியியலாளர் ஆவார். இவர் சுற்றுச்சூழல் வேதியியலாளராகவும்,. ஐக்கிய அமெரிக்காவின் பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினராகவும் இருந்தார். சுகாதாரப் பொறியியல் துறையில் முன்னோடிப் பணியாற்றியவர், உள்நாட்டு அறிவியல் துறையில் பல பரிசோதனை ஆய்வுகளைச் செய்தவர்; புதிய மனையியலுக்கான அடித்தளத்தை அமைத்தவர்ர்.[1][2] வீடுகளில் அறிவியலைப் பயன்படுத்துதலை வகைப்படுத்தும் மனைப் பொருளாதர இயக்கத்தினை நிறுவியவர்ர் ஆவார். மேலும் ஊட்டச்சத்து ஆய்வுகளுக்கு வேதியலைப் பயன்படுத்திய முதல் நபரும் ஆவார்.[3]
ரிச்சர்ட்ஸ் 1862 ஆம் ஆண்டில் வெஸ்ட்போர்டு அகாடமியில் (மாசச்சூசெட்ஸின் இரண்டாவது பழமையானமேல்நிலைப் பள்ளி) பட்டம் பெற்றார். இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார் . இங்கு 1873 இல் பட்டம் பெற்றார், பின்னர் அதன் முதல் பெண் பயிற்றுவிப்பாளர் ஆனார்.[1][4] திருமதி. ரிச்சர்ட்ஸ் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் பெண் ஆவார். மேலும் 870 ஆம் ஆண்டு வாசர் கல்லூரியில் சேர்ந்து வேதியியலில் பட்டம் பெற முதல் அமெரிக்க பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.[5][6][7]
ரிச்சர்ட்ஸ் ஒரு நடைமுறைவாதப் பெண்ணியவாதி , அத்துடன் ஒரு பெண்ணிய அணுகுமுறைச் சூழலியல் நிறுவனர் ஆவார். வீட்டிற்குள் பணியாற்றும் பெண்களின் வேலைகள் பொருளாதாரத்தின்ஒரு முக்கியமான அம்சமாகும் என்று நம்பியவர்.[8]
வரலாறு
[தொகு]இளமை
[தொகு]ரிச்சர்ட்ஸ் மாசச்சூசெட்ஸில் உள்ள டன்ஸ்டபில் என்ற இடத்தில் பிறந்தார். பீட்டர் ஸ்வாலோவின் ஒரே மகளாவார். இவரது தாயார் ஃபென்னி கோல்ட் டெய்லர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]சுவாலோ தொடக்கக் காலத்தில் அவரது வீட்டிலேயே கல்வி கற்றார். 1859 இல் அவரது குடும்பம் வெஸ்ட்போர்டுக்கு குடிபெயர்ந்தது. அங்கு அவர் வெஸ்ட்ஃபோர்ட் அகாடமியில் இணைந்து கல்வி கற்றார் [9] அக்காலத்தின் புதிய இங்கிலாந்து கல்விக்கூடங்களைப் போலவே அதேக் கல்விமுறையைப் பின்பற்றிய வெஸ்ட்ஃபோர்ட் அகாடமியில் கணிதம், இசை மற்ரும் இலத்தீன் ஆகியவற்றைக் கற்றார். சுவாலோவின் லத்தீன் கற்ற அனுபவம் நியூயார்க்கின் வடக்கே ஒரு அரிய மொழியாக பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியைப் படிக்க அனுமதித்தது.[10] அவளது மொழி திறமை காரணமாக, இவரது மொழி ஆசிரியப் பணிக்கு தேவை அதிகமிருந்தது. மேலும் இதில் ஈட்டிய வருமானம் சுவாலோவ் தனது மேற்படிப்பைத் தொடர சாத்தியமானது.
மார்ச் 1862 ல், அவர் அகாதமியை விட்டு விலகினார். அதற்குப் பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மே மாதம், அவர் தீவிர தட்டம்மை நோய்க்கு ஆளானார். இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கற்பித்தல் பணிக்கான அவரது தயாரிப்பு ஏற்பாடுகளுக்குத் தடையாக இருந்தது.
1863 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், குடும்பம் , மாசசூசெட்சில் லிட்டில்டன் நகருக்குக் குடிபெயர்ந்தது. அங்கு 1864 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இவரது தந்தை திரு. சுவாலோவ் ஒரு பெரிய கடையை வாங்கி, தனது வியாபாரத்தை விரிவாக்கினார். அங்கு சுவாலோவ் தனது இருபத்டோராம் வயதில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.[9]
1865-ல் அவர் மறுபடியும் கற்பிக்கவில்லை, ஆனால் அந்த ஆண்டு முழுவதும் அந்தக் குடும்பத்தின் சொந்தக் கடையையும், அவருடைய உடல்நலக்குறைவுற்ற தாயைக் கவனித்தும் கொண்டார். 1865-66 சுலோவ் வர்செஸ்டரில் இணைந்து படித்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Mrs. Ellen H. Richards Dead. Head of Social Economics in Massachusetts Institute of Technology". March 31, 1911. https://timesmachine.nytimes.com/timesmachine/1911/03/31/105024677.pdf. பார்த்த நாள்: 2014-03-08.
- ↑ "Richards, Ellen Swallow, Residence". National Historic Landmarks Program. April 7, 1991. Archived from the original on October 11, 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-09-04.
- ↑ Woman in science. London: University of Notre Dame Press. 1913.
- ↑ "Campus Life: M.I.T.; Salute to Women At a School Once 99.6% Male". https://www.nytimes.com/1991/04/07/nyregion/campus-life-mit-salute-to-women-at-a-school-once-99.6-male.html. பார்த்த நாள்: 2014-03-08.
- ↑ "Ellen Swallow Richards". Encyclopedia of Women and American Politics.
- ↑ Chemical achievers : the human face of the chemical sciences.
- ↑ "Ellen H. Swallow Richards". பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.
- ↑ Richardson, Barbara (2002). "Ellen Swallow Richards: 'Humanistic Oekologist,' 'Applied Sociologist,' and the Founding of Sociology". American Sociologist 33 (3): 21–58. doi:10.1007/s12108-002-1010-6. https://archive.org/details/sim_american-sociologist_fall-2002_33_3/page/21.
- ↑ 9.0 9.1 9.2 Hunt, Caroline Louisa (1912). The life of Ellen H. Richards (1st ed.). Boston: Whitcomb & Barrows.
- ↑ Kennedy, June W. (2006). Westford Recollections of Days Gone By: Recorded Interviews 1974-1975 A Millennium Update (1st ed.). Bloomington, IN: Author House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4259-2388-7.