எயுஜேனியோ மொண்டாலே
எயுஜேனியோ மொண்டாலே Eugenio Montale | |
---|---|
மொண்டாலே | |
பிறப்பு | ஜெனோவா, இத்தாலி | அக்டோபர் 12, 1896
இறப்பு | செப்டம்பர் 12, 1981 மிலான், இத்தாலி | (அகவை 84)
தொழில் | கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1975 |
எயுஜேனியோ மொண்டாலே (Eugenio Montale, அக்டோபர் 12, 1896 – செப்டம்பர் 12, 1981) என்பவர் இத்தாலியக் கவிஞரும், 1975 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஆவார்.
இத்தாலியின் ஜெனோவா நகரில் பிரந்தவர் எயுஜேனியோ. 29வது அகவையிலேயே தனது முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டார். பார்மா இராணுவப் பள்ளியில் பயிற்சியில் இருந்த போது முதலாம் உலகப்போரில் கலந்து கொள்ள போர்முனைக்கு அனுப்பப்பட்டார். சிறிது காலம் போரிட்ட பின்பு 1920 ஆம் ஆண்டில் சொந்த ஊர் திரும்பினார்.
அக்காலத்தில் தமது நாட்டில் எழுந்த பாசிச இயக்கத்தை அவர் எதிர்த்தார். பல மாத இதழ்களில் கவிதைகளை எழுதினார். பல ஆங்கிலக் கவிதைகளை இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்தார். 1928 ஆம் ஆண்டில் புளோரன்சு நூல்நிலையத்திற்குத் தலைவரானார். 1938 ஆம் ஆண்டில் பாசிச அரசால் அவரது பதவி பறிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு முதல் 1981 இல் இறக்கும் வரை மிலானில் வசித்து வந்தார். அங்கிருந்து வெளிவந்த நாளிதழ் ஒன்றின் இலக்கியப் பகுதிக்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மிலான், (1961), கேம்பிரிட்ஜ் (1967) ரோம் (1967) பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளன. 1975 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆங்கிலத்தில் சில கவிதைகள்
- Montale at the Nobel E-Museum பரணிடப்பட்டது 2001-12-16 at the வந்தவழி இயந்திரம்