எம்மா வாட்சன்
எம்மா வாட்சன் | |
---|---|
2013 கான் திரைப்பட விழாவில் வாட்சன் | |
பிறப்பு | எம்மா சார்லோட் துற்றே வாட்சன்[1][2] 15 ஏப்ரல் 1990 [3] பாரிஸ், பிரான்சு |
தேசியம் | ஐக்கிய இராச்சியம்[4] |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரவுன் பல்கலைக்கழகம்[5] |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1999 முதல் இன்றைக்கும் |
அறியப்படுவது | ஆரி பாட்டர் திரைப்படத் தொடர்கள் மை வீக் வித் மெர்லின் தி பெர்க்ஸ் ஆஃப் பீயிங் எ வால்ஃபிலவர் ஐ.நா. பெண்கள் நல்லெண்ணத் தூதர் |
எம்மா சார்லோட் துற்றே வாட்சன் (Emma Charlotte Duerre Watson) ஒர் ஆங்கில நடிகையும், விளம்பர அழகியும், சமூக ஆர்வலரும் ஆவார். வாட்சன் பாரிஸ் நகரில் பிறந்தார்; ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் வளர்ந்தார்; குழந்தைப் பருவத்தில் டிராகன் பள்ளியில் பயின்றார்; ஸ்டேஜ்கோச் தியேட்டர் ஆர்ட்ஸ் ஆக்சுபோர்டு கிளையில் நடிகைக்கான பயிற்சி மேற்கொண்டார். முன்னர் பள்ளி நாடகங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், ஆரி பாட்டர் திரைப்படத் தொடர்களில் எர்மாயினி கிறேன்செராகத் தான் முதல் தொழிற்முறை நடிப்புப்பாத்திரமாக வந்திறங்கியபின் மேன்மையடைந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை எட்டு ஆரி பாட்டர் படங்களில் நடித்துள்ளார்.[6] உலகளாவிய புகழ், விமர்சனப் பாராட்டுகள், 1 கோடி பவுண்ட்கள் ஆகியவற்றின் உரிமையைப் பெற்றார். இவர் ஆரி பாட்டர் படங்களில் மட்டும் அல்லாமல், தி டேல் ஆஃப் டெஸ்பேரேஸ் என்னும் படத்தில் குரல் கொடுத்தும், பாலே ஷூஸ் என்னும் புதினத்தைத் தழுவிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியும் தன் பணியைத் தொடர்ந்தார். தி பெர்க்ஸ் ஆஃப் பீயிங் எ வால்ஃபிலவர் என்னும் நாடகத் திரைப்படத்திலும், தி பிலிங் ரிங் என்னும் குற்றத் திரைப்படத்திலும் தான் ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ளார். திஸ் இஸ் தி என்ட் என்னும் நகைச்சுவைத் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் தான் ஒரு "மிகைப்படுத்தப்பட்ட" பதிப்பாகத் தோன்றியுள்ளார். நோவா என்னும் காவியத் திரைப்படத்தில் தலைப்புப் பாத்திரத்தின் தத்து மகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.[7]
2011 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை, எம்மா தன்னைப் படத்திட்டபணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும், தனது கல்வியைத் தொடரவும் நேரதை்தைப் பிரித்துக்கொண்டார். பிரவுன் பல்கலைக்கழகத்திலும் வர்செஸ்டர் கல்லூரியிலும் கல்வி பயி்ன்று, பிரவுன் பல்கலைக்கழகத்திலிருந்து மே 2014 ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பர்பெரிக்கும், லான்கோமுக்கும் அவரது விளம்பரத் தோற்றம் காட்டல் பணி பிரச்சாரப் பிரயாணத்தைக் கொண்டிருந்துள்ளது.[8][9] ஒரு புதுப்பாணி கலந்துரைஞராக, மக்களுக்கு ஆடையை உருவாக்க உதவியுள்ளார். 2014 ஆம் ஆண்டு, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைகளின் பிரித்தானிய கலைக்கழகம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய நடிகையாக வென்றதற்காகக் கௌரவித்தது. அதே ஆண்டில், அவர் ஒர் ஐ.நா. பெண்கள் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். ஹிஃபார்ஷி என்ற ஐ.நா. பெண்கள் பிரச்சாரத்தைத் தொடங்க உதவி செய்தார், அது பாலினச் சமனிலையை வாதாட வேண்டி ஆண்களை அழைக்கின்றது.
தொடக்ககால வாழ்க்கை
[தொகு]ஆங்கில வழக்குரைஞர்களாகிய ஜாக்குலின் லியூஸ்பய், கிறிஸ் வாட்சன் ஆகியோருக்கு மகளாக வாட்சன் பாரிஸ் நகரம், பிரான்ஸில் பிறந்தார்;[10][11][12] ஐந்து அகவை வரை பாரிஸில் வாழ்ந்தார். தான் சிறுமியாக இருந்த போதே அவரின் பெற்றோர் மணமுறிவு பெற்று பிரிந்தனர். பின்னர் அவர் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையருக்குத் தன் தாயுடன் சேர்ந்து வாழ இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார். அதே வேளையில், லண்டனில் தன் தந்தையின் வீட்டில் வார இறுதிகளைச் செலவழித்தார்.[10][13] பிரஞ்சு மொழியையும் சிறிதளவு பேசுகின்றார்.[14] தன் தாயுடனும், உடன்பிற்பாளனுடனும் ஆக்ஸ்போர்டிற்கு இடம்பெயர்ந்த பிறகு, அங்கிருந்த டிராகன் பள்ளியில் 2003 [10] வரை கல்வி பயின்றார். தான் ஒரு நடிகை ஆக வேண்டுமென்று ஆறு அகவை முதல் பற்று கொண்டார்.[15] அதற்காக ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றை ஆக்ஸ்போர்டு கிளை, ஸ்டேஜ்கோச் தியேட்டர் ஆர்ட்ஸ் என்னும் ஒரு பகுதி நேர நாடகப்பள்ளியில் கற்றுப் பயின்றார்.[16]
தனது பத்தாம் அகவையில், ஆர்தர்: தி யங் இயர்ஸ், தி ஹேப்பி பிரின்ஸ் [17] ஆகியவை உட்பட பல்வேறு ஸ்டேஜ்கோச் தயாரிப்புகளிலும் பள்ளி நாடகங்களிலும் செயலாக்கம் செய்தார். அவர் ஹாரி பாட்டர் தொடகள் முன்னதாக ஒருபோதும் வாழ்க்கைத் தொழிலாக நடிக்கவில்லை. வாட்சன் டிராகன் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, ஹேட்டிங்டன் பள்ளியில் [10] பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். ஒரு நாளில் ஐந்து மணி நேரம் வரை படப்பிடிப்புகளில் போது அவரும் அவரின் நண்பர்களும் பயிற்றுவிக்கப்படுவர்.[18] சூன் 2006 இல், அவர் பத்துப்பாடங்களில் பள்ளித் தேர்வுகளை எழுதி, எட்டுப்பாடங்களில் A* தரத்தையும் இரண்டு பாடங்களில் A தரத்தையும் முயன்றடைந்தார்.[10][19]
வாழ்க்கைத்தொழில்
[தொகு]1999–2003: தொடக்கங்களும் ஊடுவழியும்
[தொகு]வாட்சன் ஹரி பாட்டர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு புர்பெர்ரி நிறுவனத்தின் மூலமாக, வடிவழகு துறையிலும் அறிமுகமானார்.
விளம்பரத் தோற்றமும் நாகரிக நடையும்
[தொகு]2005 ஆம் ஆண்டில், வாட்சன் தனது விளம்பரத் தோற்றத்தை டீன் வோக் இற்கான ஒரு புகைப்படம் மூலம் தொடங்கினார். அதன் அட்டையில் பெருமைபடுத்திய இளம் நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.[3]
கல்வி
[தொகு]தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் படத்திற்காக 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி திங்கள் தொடக்கத்திலிருந்து கல்வியில் இடைவெளி[20] எடுத்துக்கொண்டார், இருப்பினும் அவர் தன் படிப்பைத் தொடர விரும்பி,[21] பிராவிடென்ஸ், ரோட் தீவிலுள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தைத் [22] தேர்ந்தெடுத்தார். பல்கலைக்கழகத்தில் 18 திங்கள் கழிந்த பிறகு மார்ச்சு 2011 இல் தன் கல்விப்பருவத்தைத் தள்ளிப்போடுவதாக அறிவித்தார்.[23] இருந்த போதிலும் 2011 முதல் 2012 வரையுள்ள கல்வி ஆண்டில் அவர் வர்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு இல் வருகை புரிந்தார்.[24]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]நோவா எனும் படத்தில் வேலை செய்யும் போது, அவரின் நம்பிக்கை பற்றி கேள்விக்குள்ளாக்கப்பட்டார். அதற்கு அவர் ஒரு திருநிலை சர்வமயவாதியர் எனத் தன்னைப் பற்றி விவரித்தார்.[25]
திரைப்பட வரலாறு
[தொகு]ஆண்டு | தலைப்பு | நாடகப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2001 | ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்) | எர்மாயினி கிறேன்செர் | ஆரி பாட்டர் அண்டு சார்சரசு இசுடோன் எனவும் அழைக்கப்படுகின்றது |
2002 | ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு | எர்மாயினி கிறேன்செர் | |
2004 | ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் | எர்மாயினி கிறேன்செர் | |
2005 | ஆரி பாட்டர் அண்டு த கோப்லெட் ஆஃப் ஃபயர் | எர்மாயினி கிறேன்செர் | |
2007 | ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு | எர்மாயினி கிறேன்செர் | |
பாலெட் சூஸ் | பவுலின் புதைபடிவம் | தொலைக்காட்சித் திரைப்படம் | |
2008 | தி டேல் ஆஃப் டெஸ்பெராக்ஸ் | இளவரசி பீ | குரல் |
2009 | ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு | எர்மாயினி கிறேன்செர் | |
2010 | ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 | எர்மாயினி கிறேன்செர் | |
2011 | ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 | எர்மாயினி கிறேன்செர் | |
மை வீக் வித் மெர்லின் | லூசி | ||
2012 | தி பெர்க்ஸ் ஆஃப் பீயிங் எ வால்ஃபிலவர் | சாம் | |
2013 | திஸ் இஸ் த என்ட் | அவரே | |
தி பிலிங் ரிங் | நிக்கி மூர் | ||
2014 | நோவா | இலா | |
2015 | தி வைசர் ஆஃப் டிப்லே | போற்றுதலுக்குரிய ஐரிஸ் | தொலைக்காட்டி நிகழ்ச்சி: "தி பிசப் ஆஃப் டிப்லே"[26] |
தி காலனி | லீனா | ||
ரெக்ரசன் | அங்கேலா கிரே | ||
2017 | பியூட்டி ஆண்ட் த பீஸ்ட் | பெல்லி | பிந்தைய தயாரிப்பு |
தி சர்க்கல் | மே ஹாலந்து | பிந்தைய தயாரிப்பு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Emma Watson". Late Show with David Letterman. CBS. 8 July 2009. No. 3145.
- ↑ http://www.imdb.com/name/nm0914612/
- ↑ 3.0 3.1 Walker, Tim (29 September 2012). "Emma Watson: Is there Life After Hermione?". The Independent. http://www.independent.co.uk/news/people/profiles/emma-watson-is-there-life-after-hermione-8190401.html. பார்த்த நாள்: 12 January 2008.
- ↑ "Check If You're a British Citizen". United Kingdoms Government. UK Government Digital Service. பார்க்கப்பட்ட நாள் 23 April 2014.
(If you were born on or after 1 January 1983 and before 1 January 2006 to parents married and British 'not by descent') [i]n most cases you'll be a British citizen 'by descent'.
- ↑ "Why Emma Watson Became a Certified Yoga Instructor". ABC News. Archived from the original on 7 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Warner Bros.(23 March 2007). "Daniel Radcliffe, Rupert Grint and Emma Watson to Reprise Roles in the Final Two Instalments of Warner Bros. Pictures' Harry Potter Film Franchise". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 23 March 2007. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-02-14.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Emma Watson Gets Biblical With Darren Aronofsky's 'Noah'". indiewire.com. 7 June 2012. Archived from the original on 16 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Go Behind the Scenes with Emma Watson On the Burberry Shoot". Vogue News. June 2009. Archived from the original on 3 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Oliver, Dana (14 March 2011). "Emma Watson Named New Face of Lancome". Huffington Post. http://www.huffingtonpost.com/2011/03/14/emma-watson-lancome_n_835388.html. பார்த்த நாள்: 2 September 2011.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 "Life & Emma". Official website. Archived from the original on 21 April 2010. பார்க்கப்பட்ட நாள் 16 April 2010.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Warner Bros. Official site". Adobe Flash. harrypotter.warnerbros.co.uk. பார்க்கப்பட்ட நாள் 28 March 2006(click appropriate actor's image, click "Actor Bio")
{{cite web}}
: CS1 maint: postscript (link) - ↑ Barlow, Helen. "A life after Harry Potter". The Sydney Morning Herald. http://www.smh.com.au/news/film/a-life-after-harry-potter/2007/07/01/1183228944244.html. பார்த்த நாள்: 16 March 2006.
- ↑ Self, Will (17 August 2012). "Emma Watson, The Graduate". The New York Times. http://www.nytimes.com/2012/08/17/t-magazine/emma-watson-the-graduate.html?pagewanted=2&_r=2&ref=t-magazine.
- ↑ "Q&A with Emma Watson – The Hour Publishing Company: Entertainment News". Thehour.com. 18 December 2008. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
- ↑ Watson, Emma. "Emma". Emma Watson's Official Website. Archived from the original on 2 August 2007. பார்க்கப்பட்ட நாள் 3 August 2007.
- ↑ Reece, Damian (4 November 2001). "Harry Potter drama school to float". The Daily Telegraph (UK). http://www.telegraph.co.uk/finance/2740527/Harry-Potter-drama-school-to-float.html. பார்த்த நாள்: 8 March 2010.
- ↑ Watson, Emma. "Emma & Screen". Official Website. Archived from the original on 7 May 2010. பார்க்கப்பட்ட நாள் 16 April 2010.
- ↑ Muir, Kate (15 May 2004). "Cast Interviews". The Times (UK). http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/film/article423860.ece. பார்த்த நாள்: 12 January 2008.
- ↑ "Pupils 'sitting too many GCSEs'". BBC News. 24 August 2006. http://news.bbc.co.uk/1/hi/education/5280906.stm. பார்த்த நாள்: 27 May 2007.
- ↑ Tibbetts, Graham (14 August 2008). "A-levels: Harry Potter actress Emma Watson gets straight As". The Daily Telegraph (UK) இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121205093953/http://www.telegraph.co.uk/education/article2559694.ece. பார்த்த நாள்: 10 December 2008.
- ↑ Long, Camilla (7 December 2008). "What next in life for Emma Watson". The Times (UK) இம் மூலத்தில் இருந்து 15 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110615193631/http://women.timesonline.co.uk/tol/life_and_style/women/celebrity/article5279807.ece. பார்த்த நாள்: 10 December 2008.
- ↑ Ford, James (14 July 2009). "Catching up with Emma Watson". Paste (magazine) இம் மூலத்தில் இருந்து 16 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090716020527/http://www.pastemagazine.com/articles/2009/07/catching-up-with-emma-watson.html. பார்த்த நாள்: 15 July 2009.
- ↑ "Message from Emma". Emma Watson Official. 7 March 2011. Archived from the original on 8 March 2011. பார்க்கப்பட்ட நாள் 15 September 2013.
- ↑ "Harry Potter Star Emma Watson begins her year at Oxford University!". Oxford Royale Academy. Archived from the original on 3 October 2012. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.
- ↑ "Emma Watson is a spiritual Universalist who believes in a higher power | Huffington Post". huffingtonpost.com. 24 March 2014. பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
I already, before I did [Noah], had a sense that I was someone that was more spiritual, than specifically religious. I had a sense that I believed in a higher power, but that I was more of a Universalist, I see that there are these unifying tenets between so many religions.
- ↑ "The Vicar of Dibley – Comic Relief Special: The Bishop of Dibley". British Comedy Guide. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ வலைதளம் பரணிடப்பட்டது 2010-04-24 at the வந்தவழி இயந்திரம்
- Guides: Harry Potter Actors at the BBC