உள்ளடக்கத்துக்குச் செல்

என்யோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்யோ (Enyo) என்பவர் பாரம்பரிய கிரேக்கம் புராணங்களில் ஒரு போர் தெய்வமாகக் கருதப்படுகிறார். இவர் அடிக்கடி போர் கடவுளான ஏரெசுடன் தொடர்புடையவர் ஆவார்.

விளக்கம்

[தொகு]

குயின்டஸ் சுமிர்னாயசு என்பவாரால் இவர் "போரின் சகோதரி" என்று அழைக்கப்படுகிறார். [1] இது சச்சரவு மற்றும் சச்சரவின் உருவகமான போர் கடவுளான ஏரெசுடன் ஒத்திருக்கிறது. குறிப்பாக, ஓமர், இவை இரண்டும் ஒரே தெய்வம் போன்றே குறிப்பிடுகிறார். சில புராணங்களில் இவர் யுத்தக் கடவுளான என்யாலியசின் தாயாகவும் அடையாளம் காணப்படுகிறார், [2] இந்த புராணங்களில், ஏரெசு தந்தையாகக் குறிக்கப்படுகிறார். இருப்பினும், ஆண்பால் பெயர் என்யாலியசு அல்லது என்யாலியோசு என்பதும் ஏரெசின் தலைப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

போரின் தெய்வமாக, நகரங்களின் அழிவைத் திட்டமிடுவதற்கு என்யோவே பொறுப்பாவார். பெரும்பாலும் ஏரெசுடன் அடிக்கடி போரில் ஈடுபடுகிறார். [3] இவர் "போரில் உச்சம்" என்று சித்தரிக்கப்படுகிறார். [4] திராய் வீழ்ச்சியின் போது, எரியோ ("சண்டை"), போபோஸ் ("பயம்"), மற்றும் தீமோஸ் ("அச்சம்") ஆகியோருக்கு போரில் பயங்கரத்தை ஏற்படுத்தினார். பிந்தையவர்கள் ஏரிசின் மகன்கள் ஆவர். [5] என்யோ, ஏரெசு மற்றும் ஏரெசின் இரண்டு மகன்கள் அகியோர் அக்கீலியஸின் கேடயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

தீப்சுக்கு எதிரான ஏழு போரிலும், இந்தியர்களுடனான டயோனிசசின் போரிலும் என்யோ ஈடுபட்டிருந்தார். [6] என்யோ போரில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், ஜீயஸ் மற்றும் டைபன் என்ற அசுரனுக்கு இடையிலான ஆதவளிக்க இவர் மறுத்துவிட்டார்: ரோமானியர்கள் என்யோவை பெலோனாவுடன் அடையாளம் காண்கின்றனர். அனதோலியன் தெய்வமான மாவுடனும் இவளுக்கு ஒற்றுமைகள் உள்ளன

தீபசு மற்றும் ஆர்க்கோமெனோசில், ஜீயஸ், டிமிடிர், அதீனா மற்றும் என்யோ ஆகியோரின் நினைவாக கொண்டாடப்பட்ட ஹோமோலியா என்ற திருவிழா, ஹோமோலோயசின் குடும்பப் பெயரை ஹோமோலோசிடமிருந்து என்யோவின் பாதிரியாராகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. [7] பிராக்சிதெல்சின் மகன்களால் செய்யப்பட்ட என்யோ சிலை ஏதென்ஸில் உள்ள ஏரசு கோவிலில் அரயோப்பாகு மேடையில் இருந்தது.. [8]

எசியோடின் தியோகனியில் (270–273), என்யோ கிரேவர்களில் ஒருவரின் பெயராகவும் இருந்தார். மூன்று சகோதரிகள் ஒரு கண் மற்றும் ஒரு பல் ஆகியவற்றை அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்; மற்ற சகோதரிகள் டீனோ ("அச்சம்") மற்றும் பெம்பிரெடோ ("அலாரம்"). [9]

குறிப்புகள்

[தொகு]
  1. Quintus Smyrnaeus, Fall of Troy, 8.424.
  2. Eustathius on ஓமர் 944
  3. Homer, இலியட் 5. 333, 592
  4. Pausanias, Description of Greece 4. 30. 5
  5. Quintus Smyrnaeus, Fall of Troy
  6. Statius, Thebaid, nonnus, Dionysiaca
  7. Suidas s. v.; compare Müller, Orchomen, p.229, 2nd edit. (cited by Schmitz)
  8. Pausanias , Description of Greece, I. 8. § 5. (cited by Schmitz)
  9. Harris, Stephen L., and Gloria Platzner. Classical Mythology: Images and Insights (3rd edition). California State University, Sacramento. Mayfield Publishing Company. 2000, 1998, 1995, pp. 273–274, 1039.

மேற்குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்யோ&oldid=2936574" இலிருந்து மீள்விக்கப்பட்டது