உள்ளடக்கத்துக்குச் செல்

எசுன் தெமுர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுன் தெமுர் கான்
யுவானின் டைடிங் பேரரசர்
மங்கோலியப் பேரரசின் 10வது ககான்
(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே)
யுவான் வம்சத்தின் 6வது பேரரசர்
சீனாவின் பேரரசர்
யுவான் வம்சத்தின் பேரரசர்
ஆட்சிக்காலம்அக்டோபர் 4, 1323 – ஆகஸ்ட் 15, 1328
முடிசூட்டுதல்அக்டோபர் 4, 1323
முன்னையவர்ஜெஜீன் கான்
பின்னையவர்ரகிபக் கான்
பிறப்புநவம்பர் 28, 1293
இறப்புஆகத்து 15, 1328(1328-08-15) (அகவை 34)
சங்டு
மனைவிபபுகன் கதுன்
பெயர்கள்
மொங்கோலியம்: ᠶᠡᠰᠦᠨ ᠲᠡᠮᠦᠷ
சீனம்: 也孫鐵木兒
எசுன் தெமுர் கான்
சகாப்த காலங்கள்
டைடிங் (泰定) 1324–1328
சிஹே (致和) 1328
மரபுபோர்சிசின்
அரசமரபுயுவான்
தந்தைகம்மலா
தாய்கொங்கிராட்டின் புயன் கெல்மிஸ்

எசுன் தெமுர் (மொங்கோலியம்: Есөн Төмөр; சீன கோயில் பெயர்: டைடிங்டி; சீனம்: 元泰定帝, நவம்பர் 28, 1293 – ஆகஸ்ட் 15, 1328) குப்லாய் கானின் ஒரு கொள்ளுப் பேரனும் மற்றும் யுவான் வம்சத்தின் பேரரசராக 1323 முதல் 1328 வரை ஆட்சி செய்தவரும் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் 10வது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. இவர் மங்கோலியப் பாரம்பரியத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார்.[1] இவருடைய பெயருக்கு மங்கோலிய மொழியில் "ஒன்பது இரும்பு கான்" என்று பொருளாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. B. Shirėndėv, Sh Luvsanvandan, A. Luvsandėndėv – Olon Ulsyn Mongolch Ėrdėmtniĭ III Ikh Khural, p.347