உலக தடகள போட்டிகள்
Appearance
உலக தடகள சாம்பியன்ஷிப் | |
---|---|
காலப்பகுதி | இரண்டாண்டுக்கு ஒரு முறை |
துவக்கம் | 1983 |
முந்தைய நிகழ்வு | 2019 |
அடுத்த நிகழ்வு | 2022 |
அமைப்பாளர் | உலக தடகள அமைப்பு |
வலைத்தளம் | |
worldathletics.org |
உலக தடகள வாகையாளர் போட்டிகள் (World Athletics Championships) இரண்டாண்டுக்கு ஒரு முறை உலக தடகள அமைப்பால் நடத்தப்படும் தடகள போட்டிகளாகும். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியலிருந்து 50 கி.மீ நடை போட்டியை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த உலக தடகள அமைப்பு, தடகள போட்டிகளுக்கு என்றே தனியாக வாகையாளர் போட்டிகளை நடத்தத் துவங்கியது.[1].
1980ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் வெற்றி பெற்றவரே உலக வாகையாளராக அறியப்பட்டார். உலக வாகையாளர் போட்டிகளின் அறிமுகத்தால் அந்த நடைமுறை மாற்றம் பெற்று தற்பொழுது உலக வாகையாளர் போட்டியில் வெற்றி பெறுபவரே உலக வாகையாளராக அறியப்படுகிறார்.
போட்டிகள்
[தொகு]பதிப்பு | ஆண்டு | நகரம் | நாடு | தேதி | இருக்கைகள் | போட்டிகள் | பங்கேற்ற நாடுகள் | பங்கேற்ற வீரர்கள் | விருது பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு |
---|---|---|---|---|---|---|---|---|---|
– | 1976 | மால்மோ | சுவீடன் | 18 செப்டம்பர் | 30,000 | 1 | 20 | 42 | சோவியத் ஒன்றியம் |
– | 1980 | சித்தர்டு | நெதர்லாந்து | 14 – 16 ஆகஸ்ட் | 22,000 | 2 | 22 | 42 | கிழக்கு ஜேர்மனி |
1 | 1983 | எல்சிங்கி | பின்லாந்து | 7 – 14 ஆகஸ்ட் | 50,000 | 41 | 153 | 1,333 | கிழக்கு ஜேர்மனி |
2 | 1987 | உரோம் | இத்தாலி | 28 ஆகஸ்ட் – 6 18 செப்டம்பர் | 60,000 | 43 | 156 | 1,419 | கிழக்கு ஜேர்மனி |
3 | 1991 | தோக்கியோ | சப்பான் | 23 ஆகஸ்ட் – 1 18 செப்டம்பர் | 48,000 | 43 | 162 | 1,491 | ஐக்கிய அமெரிக்கா |
4 | 1993 | இசுடுட்கார்ட் | செருமனி | 13 – 22 ஆகஸ்ட் | 70,000 | 44 | 187 | 1,630 | ஐக்கிய அமெரிக்கா |
5 | 1995 | கோதென்பெர்க் | சுவீடன் | 5 – 13 ஆகஸ்ட் | 42,000 | 44 | 190 | 1,755 | ஐக்கிய அமெரிக்கா |
6 | 1997 | ஏதென்ஸ் | கிரேக்க நாடு | 1 – 10 ஆகஸ்ட் | 75,000 | 44 | 197 | 1,785 | ஐக்கிய அமெரிக்கா |
7 | 1999 | செவீயா | எசுப்பானியா | 20 – 29 ஆகஸ்ட் | 70,000 | 46 | 200 | 1,750 | ஐக்கிய அமெரிக்கா |
8 | 2001 | எட்மன்டன் | கனடா | 3 – 12 ஆகஸ்ட் | 60,000 | 46 | 189 | 1,602 | உருசியா |
9 | 2003 | பாரிஸ் | பிரான்சு | 23 – 31 ஆகஸ்ட் | 78,000 | 46 | 198 | 1,679 | ஐக்கிய அமெரிக்கா |
10 | 2005 | எல்சிங்கி | பின்லாந்து | 6 – 14 ஆகஸ்ட் | 45,000 | 47 | 191 | 1,687 | ஐக்கிய அமெரிக்கா |
11 | 2007 | ஒசாக்கா | சப்பான் | 24 ஆகஸ்ட் – 2 செப்டம்பர் | 45,000 | 47 | 197 | 1,800 | ஐக்கிய அமெரிக்கா |
12 | 2009 | பெர்லின் | செருமனி | 15 – 23 ஆகஸ்ட் | 74,000 | 47 | 200 | 1,895 | ஐக்கிய அமெரிக்கா |
13 | 2011 | தேகு | தென் கொரியா | 27 ஆகஸ்ட் – 4 செப்டம்பர் | 65,000 | 47 | 199 | 1,742 | ஐக்கிய அமெரிக்கா |
14 | 2013 | மாஸ்கோ | உருசியா | 10 – 18 ஆகஸ்ட் | 78,000 | 47 | 203 | 1,784 | ஐக்கிய அமெரிக்கா |
15 | 2015 | பெய்ஜிங் | சீனா | 22 – 30 ஆகஸ்ட் | 80,000 | 47 | 205 | 1,761 | கென்யா |
16 | 2017 | இலண்டன் | ஐக்கிய இராச்சியம் | 4 – 13 ஆகஸ்ட் | 60,000 | 48 | 199 | 1,857 | ஐக்கிய அமெரிக்கா |
17 | 2019 | தோகா | கத்தார் | 27 செப்டம்பர் – 6 அக்டோபர் | 48,000 | 49 | 206 | 1,775 | ஐக்கிய அமெரிக்கா |
18 | 2022 | யூஜின் | ஐக்கிய அமெரிக்கா | 15 – 24 ஜூலை[2][3] | 30,000 | 49 | 192 | 1,972 | |
19 | 2023 | புடாபெசுட்டு | அங்கேரி | 18 – 27 ஆகஸ்ட் | 40,000 | ||||
20 | 2025 | தோக்கியோ | சப்பான் | 68,000 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peter Matthews. Historical Dictionary of Track and Field. p. 217.
- ↑ Dates confirmed for World Athletics Championships Oregon 2022
- ↑ World Athletics Championships in Oregon moved to July in 2022