இலியுகார்ட்டு விதி
இலியுகார்ட்டு விதி (Leuckart's law) விலங்கின் கண்ணின் அளவு அதன் இயக்கத்தின் அதிகபட்ச வேகத்துடன் தொடர்புடையது என்று கூறும் ஓர் அனுபவ விலங்கியல் விதியாகும். 1876 ஆம் ஆண்டு முதல் இலியுகார்ட்டு விதி கூறப்பட்டு வருகிறது. [1] உடல் நிறை விளைவுகளை அனுமதித்த பின்னர் வேகமாக நகரும் விலங்குகள் பெரிய கண்களைக் கொண்டுள்ளன என்பது இவ்விதியின் மையக் கொள்கையாகும். பழைய நூல்களில் பொதுவாக இலியுகார்ட்டின் விகிதம் [2] என இவ்விதி குறிப்பிடப்படுகிறது. 1876 ஆம் ஆண்டில் உருடால்ப் இலியுகார்ட்டு இவ்விதியை முன்மொழிந்தார். [3] இக்கொள்கை ஆரம்பத்தில் பறவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது; பின்னர் அதைத் தொடர்ர்ந்து இது பாலூட்டிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. [4]
சர்ச்சை
[தொகு]2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 88 பறவை இனங்கள் பற்றிய ஓர் ஆய்வில், பறவைகளின் பறக்கும் வேகத்திற்கும் கண்களின் அளவுக்கும் பயனுள்ள தொடர்பு எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hugh Davson, Lewis Texada Graham (1974). The Eye: Comparative physiology, Volume 2. New York: Academic Press. p. 274.
- ↑ Stewart Duke-Elder (1958). System of Ophthalmology: The eye in evolution, Volume 1 of System of Ophthalmology. London: Henry Kimpton. p. 401.
- ↑ Leuckart, R. (1876). "Organologie des Auges. Vergleichende Anatomie". In Graefe, Alfred; Saemisch, Theodor (eds.). Handbuch der gesamten Augenheilkunde. Leipzig: Engelmann. pp. 145–301.
- ↑ A.N. Heard-Booth, E.C. Kirk (2012). The influence of maximum running speed on eye size: a test of Leuckart's Law in mammals. Anatomical Record 295 (6): 1053-1062. doi: 10.1002/ar.22480 PubMed.
- ↑ M.I. Hall, C.P. Heesy (2011). Eye size, flight speed and Leuckart's Law in birds. Journal of Zoology 283: 291–297. எஆசு:10.1111/j.1469-7998.2010.00771.x