உள்ளடக்கத்துக்குச் செல்

இராசா சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசா சாரி

இராசா சாரி (Raja Jon Vurputoor Chari) என்பவர் நாசா என்ற  விண்வெளி மையத்தால் 2017 விண்வெளி வீரர் வகுப்புக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க விண்வெளி வீரர் ஆவார். [1][2] இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

அமெரிக்காவில் விஸ்கான்ஸினில் மில்வாவ்கியில் பிறந்து, அயோவா, சிடார் பால்ஸில் வளர்ந்த ராஜா சாரி 1999ஆம் ஆண்டில் வான்படை அகாடமியில் விண்வெளிப் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் மாசச்சூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து விண்வெளியியலில் முதுவர் பட்டமும் பெற்றார். வான் படையில் கர்னலாகப் பணியாற்றும்போது 2017 விண்வெளி வீரர் வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட 12 வீரர்களில் இவரும் ஒருவர். 2017 ஆகத்து மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சி பெறுவார். பின்னர் பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார். கல்பனா சாவ்லாவுக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் இராசா சாரி ஆவார். [3]

பதக்கங்கள்

[தொகு]
  • டிபென்சு மெரிடோரியசு செர்வீசு பதக்கம்
  • ஈராக் கேம்பயின் பதக்கம்
  • கொரியன் டிபென்சு செர்வீசு பதக்கம்
  • வான்படை சாதனைப் பதக்கம்

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசா_சாரி&oldid=3095055" இலிருந்து மீள்விக்கப்பட்டது