இமாலய மேய்ப்பு நாய் (Himalayan sheep Dog) இது ஒரு மலைப்பகுதியில் வாழும் மேய்ப்பு வகையைச் சார்ந்த நாயாகும். இவை இந்தியாவை ஒட்டியுள்ள திபெத் நாட்டின் ஆடுமேய்க்கும் நாடோடிகளால் பழக்கப்பட்டு ஆடுகளைப் பாதுகாக்க வளர்க்கப்படுகிறது.[1]மேலும் இந்தியா பகுதியில் ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள குர்சார் இன மக்களும் இவ்வகையான நாய்களை வளர்க்கிறார்கள். இவ்வகை நாய்கள் அரியவகை நாய் இனத்தைச் சார்ந்ததாகும்.[2]