இந்திய பொதுத் தேர்தல்களின் பட்டியல்
இந்திய பொதுத் தேர்தல்களின் பட்டியல் (List of Indian general elections) என்பது இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்களின் பட்டியல் ஆகும். இதில் மக்களவை (மக்கள் சபை) அல்லது இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபை உறுப்பினர்கள், இந்திய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்களிலிருந்து இந்தியாவின் அனைத்து வயது வந்த குடிமக்களால் வாக்களிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவின் 18 வயது முடிவடைந்த ஒவ்வொரு குடிமகனும் தான் வசிக்கும் தொகுதியில் மட்டுமே வாக்களிக்க முடியும். மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் 'நாடாளுமன்ற உறுப்பினர்' என்று அழைக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் அல்லது பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவரால் சபை கலைக்கப்படும் வரை பதவியில் இருப்பார்கள். புதிய சட்டங்களை உருவாக்குதல், இந்தியாவின் அனைத்து குடிமக்களையும் பாதிக்கும் தற்போதைய சட்டங்களை நீக்குதல் அல்லது மேம்படுத்துதல் தொடர்பான விஷயங்களில், புது தில்லியில் உள்ள சன்சத் பவனில் உள்ள மக்களவையில் கூட்டம் கூடுகிறது. மக்களவையின் 543 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.[1]
மக்களவைக்கு முதல் தேர்தல் 1951-52ல் நடந்தது.[2][3][4]
இந்தியாவில் மக்களவை பொதுத் தேர்தல்களின் பட்டியல்
[தொகு]மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்தியாவில் தேர்தல்
- இந்திய ஜனாதிபதி தேர்தல்களின் பட்டியல்
- இந்திய துணை ஜனாதிபதி தேர்தல்களின் பட்டியல்
- ராஜ்யசபா தேர்தல்களின் பட்டியல்
- இந்திய மாநில சட்டமன்றத் தேர்தல்களின் பட்டியல்
- இந்திய அரசு
- இந்திய நாடாளுமன்றம்
- மக்களவை
- நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Terms of the Houses". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 February 2020.
- ↑ "Lok Sabha Results 1951-52". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
- ↑ "Statistical Report on Lok Sabha Elections 1951-52" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
- ↑ "Lok Sabha Elections Stats Summary 1951-52" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.