இடை முன் இதழ்குவி உயிர்
Appearance
இடை முன் இதழ்குவி உயிர் | |
---|---|
ø̞ | |
அ.ஒ.அ எண் | 310 430 |
குறியேற்றம் | |
உள்பொருள் (decimal) | ø̞ |
ஒருங்குறி (hex) | U+00F8 U+031E |
ஒலி | |
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
இடை முன் இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. மேல்-இடையுயிருக்கும் [ø], கீழ்-இடையுயிருக்கும் [œ], இடையில் சரியாக இந்த இடை முன் இதழ்குவி உயிர் ஒலியைக் குறிப்பதற்கு அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் தனியான குறியீடு கிடையாது. எந்த ஒரு மொழியிலும் மேற் குறிப்பிட்ட மூன்று ஒலிகளையும் வேறுபடுத்துவது இல்லை என்பதே இதற்கான காரணம். பொதுவாக, மேல் இடையுயிரைக் குறிக்கும் ‹ø› என்னும் குறியீடே இந்த ஒலியைக் குறிக்கவும் பயன்படுகிறது. துல்லியம் தேவைப்படும் இடங்களில், [ø̞], [œ̝] என்பன போல், ஏற்கனவே உள்ள குறிகளுக்குத் துணைக் குறிகளை இட்டு எழுதுவது உண்டு.[1][2]
ஒலிப்பிறப்பு இயல்புகள்
[தொகு]- நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
- கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் முன் பகுதியில் அமையும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.
- இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்குவி நிலையாகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ (Basbøll & Wagner 1985, ப. 40), cited in (Basbøll 2005, ப. 48).
- ↑ (Peterson 2000), cited in (Árnason 2011, ப. 76)