இடைக்காடர்
இடைக்காடர் திருவள்ளுவ மாலையின் 54-ஆவது பாடலை இயற்றியுள்ளார்.[1] இவர் சங்ககாலப் புலவர் இடைக்காடனார் அல்லர். காலத்தால் பிற்பட்டவர்.
வாழ்க்கை
[தொகு]மதுரைக்கு அருகிலுள்ள இடைக்காடு என்ற ஊாிலிருந்து வந்த சித்தர் இடைக்காடர்.[1][2] இடைக்கலி நாட்டைச் சேர்ந்தவர்.[3] சிறந்த உதாரணங்களோடு பாடல் பாடுவதில் வல்லவர். சோழ மன்னன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பற்றி (புறநானுாறு பாடல் 42) போற்றிப் பாடியுள்ளார்.[3] "ஊசிமுறி" என்ற இலக்கண நுாலையும் பாடியுள்ளார்.[3]
தமிழ்நாட்டுச் சித்தரான இடைக்காட்டுச் சித்தர் என்பவர் வேறு, சங்க காலப் புலவரான இடைக்காடர் வேறு. இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன.
இவா் திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது.[1] ஒருமுறை, பஞசத்தின் பொழுது, நவக்கிரகங்களை இவா் வேண்டி வணங்கினார். அது இடைக்காட்டூரில் சிறிய நவக்கிரக கோவிலாக இன்றும் இருக்கிறது.
இலக்கியப் படைப்புகள்
[தொகு]திருவள்ளுவ மாலையின் 54-ஆவது பாடலை இவர் இயற்றியுள்ளார்.[4] அது பின்வருமாறு:
- கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
- குறுகத் தறித்த குறள்
இதையே ஒளவையார் "கடுகு' என்ற சொல்லிற்குப் பதிலாக "அணு"[5] என்று சொல்லை மாற்றி
- அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
- குறுகத் தறித்த குறள்
- என்று திருவள்ளுவ மாலையை நிறைவு செய்கிறார்.
ஒளவையாரும் இடைக்காடரும் மட்டுமே, குறள் வெண்பாவில் திருவள்ளுவ மாலை பாடியுள்ளனர்.[1]
திருவள்ளுவா் மற்றும் திருக்குறளைப் பற்றிய கருத்து
[தொகு]வள்ளுவர் ஏழு சீராலான குறள் வெண்பாக்களால், வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தந்துள்ளார். இது ஏழு கடல்களைக் கடுகில் துளையிட்டு அதில் புகுத்துவதற்குச் சமமானது என்று புகழ்ந்து பாடியுள்ளார். திருவள்ளுவாின் அறிவை இவ்வாறாகப் போற்றுகிறார்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Vedanayagam, Rama (2017). Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum (in Tamil) (1st ed.). Chennai: Manimekalai Prasuram. pp. 72–73.
- ↑ Kowmareeshwari, S., ed. (August 2012). Agananuru, Purananuru. Sanga Ilakkiyam (in Tamil). 3 (1st ed.). Chennai: Saradha Pathippagam. p. 384
- ↑ 3.0 3.1 3.2 Gopalan, P. V. (1957). புலவர் அகராதி [Dictionary of Poets] (in Tamil) (1 ed.). Chennai: M. Duraisami Mudaliyar and Company. p. 20.
- ↑ Thamilarasu, Ve (2014). Kuralamildham (in Tamil) (1st ed.). Chennai: Arutchudar Anbarkulu. pp. 42–43.
- ↑ Jagannadhan, Ki Va (1963). Tirukkural: Aaraaycchi Padhippu (in Tamil) (3rd ed.). Coimbatore: Ramakrishna Mission Vidhyalayam. p. 711.