உள்ளடக்கத்துக்குச் செல்

இடது-கை வழமைச் சுழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் இடதுகை வழமைச் சுழல் வீச்சு.

இடது-கை வழமைச் சுழல் (Left-arm orthodox spin) துடுப்பாட்டத்தில் வீசப்படும் இடது-கை நேர்ச்சுழல் வீச்சு வகைகளில் ஒன்றாகும்.. இடது கை வீச்சாளர் ஒருவர் தனது விரல்களால் பந்தை சுழற்றி வீசுகளத்தின் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எகிறிச் செல்லும் வகையில் வீசுவார்.

இடது-கை வழமைச் சுழலாளர்கள் பொதுவாக பந்தை மட்டையாளருக்கு நேராக வீசி வலது-கை மட்டையாளரை விட்டு (எதிர்-இழப்புக்குச்சியை நோக்கி) விலகிச்செல்லும்படி செய்வார். காற்றில் மிதக்கும்போது ஏற்படும் நகர்வும் திருப்பமும் வீச்சாளரின் ஆயுதங்களாகும். இந்த வகை வீச்சாளரின் முக்கிய மாறுபாடுகள்: மேற்சுழல் (திருப்பம் குறைவாகவும் மேலெழும்பும் உயரம் கூடுதலாகவோ குறைவாகவோ இருத்தல்), திரும்பாச் சுழல் (திருப்பமே இல்லாது வலதுகை மட்டையாளருக்கு வீச்சாளரின் வீசுகையின் திசையிலேயே வருதல்) மற்றும் இடது-கை வீச்சாளரின் பிறழ் எதிர்ச்சுழல் (பந்து திசைமாறிச் செல்லுதல்) .

புகழ்பெற்ற இடது-கை வழமைச் சுழலாளர்கள் சிலர்: நியூசிலாந்து அணித்தலைவர் டேனியல் வெட்டோரி [1] முன்னாள் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆஷ்லே கைல்ஸ் [2],டெரெக் அன்டர்வுட் (இங்கிலாந்து), சர் கேரி சோபர்ஸ் மற்றும் பிசன் சிங் பேடி.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.cricinfo.com/ci/content/player/38710.html
  2. http://www.cricinfo.com/ci/content/player/13368.html