இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014
இசுக்கொட்லாந்து விடுதலை பெற்ற தனிநாடாக இருக்க வேண்டுமா என்பதைக் கண்டறிவதற்கான பொது வாக்கெடுப்பு 2014 செப்டம்பர் 18 வியாழக்கிழமை நடைபெற்றது.[1] மொத்தம் 55.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.[2] இசுக்கொட்லாந்தில் மொத்தமுள்ள 32 பிரதேசங்களில் டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் ஆதரவாகவும், மீதமுள்ள பிரதேசங்களில் எதிராகவும் வாக்குகள் பதிவாகின.[3]
இசுக்கொட்லாந்து அரசுக்கும், ஐக்கிய இராச்சிய அரசுகளுக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி,[4] ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டமூலம் 2013 மார்ச் 21 இல் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,[5] 2013 நவம்பர் 14 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 டிசம்பர் 17 இல் இச்சட்டம் பிரித்தானிய முடியாட்சியால் அங்கீகாரம் பெற்றது.[6]
ஐக்கிய இராச்சியத்தின் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பொது வாக்கெடுப்பிற்கான கேள்வி "ஸ்காட்லாந்து, விடுதலை பெற்று தனிநாடாவதா?" என்பதாகும். வாக்காளர்கள் ஆம் என்றோ இல்லை என்றோ தெரிவிக்க வேண்டும்.[7] ஸ்காட்லாந்தின் குடியுரிமை உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் (4 மில்லியனுக்கும் அதிகமானோர்) இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விடுதலைக்கான ஆதரவுக்கு சாதாரண பெரும்பான்மை (50% + 1 நபர்) மட்டுமே போதுமானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Scotland to hold independence poll in 2014 – Salmond". பிபிசி (பிபிசி). 10 January 2012. http://www.bbc.co.uk/news/uk-scotland-16478121. பார்த்த நாள்: 15 ஏப்ரல் 2014.
- ↑ "Scottish referendum: Scotland votes no to independence". பிபிசி. 19 செப்டம்பர் 2014. http://www.bbc.com/news/uk-scotland-29270441. பார்த்த நாள்: 19 September 2014.
- ↑ "பிரிவினைக்கு எதிர்ப்பு - ஸ்காட்லாந்து மக்கள் தீர்ப்பு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 20 செப்டம்பர் 2014. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Agreement between the United Kingdom Government and the Scottish Government on a referendum on independence for Scotland" (PDF). 15 October 2012. Archived from the original on 9 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் May 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ "Response to referendum consultation". Scotland.gov.uk. Archived from the original on 3 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 October 2012.
- ↑ "Scottish Independence Referendum Bill". Scottish.parliament.uk. பார்க்கப்பட்ட நாள் 2014-01-31.
- ↑ "Government accepts all Electoral Commission recommendations". Archived from the original on 5 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 September 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)