அர்த் கவுர்
அர்த் கௌர் | |
---|---|
2014 இல் கௌர் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | தரன் கௌர் தில்லான் |
பிறப்பு | 29 சூலை 1979 கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
இசை வடிவங்கள் | சொல்லிசை, ஹிப் ஹாப், பாலிவுட் இசை |
இசைத்துறையில் | 1995–தற்போது வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | சோனி மியூசிக் |
இணைந்த செயற்பாடுகள் | ஹிப்ஹாப் தமிழா, கவுன்டி சிக்கன் |
இணையதளம் | hardkaurworld |
அர்த் கௌர் (Hard Kaur) (பிறப்பு: தரன் கவுர் தில்லான், 1979 ஆம் ஆண்டு ஜூலை 29) ஓர் இந்திய சொல்லிசை மற்றும் ஹிப் ஹாப் பாடகருமாவார். இவர் பாலிவுட்டில் பின்னணி பாடகி மற்றும் நடிகையாக அறியப்படுகிறார்.[1][2][3][4][5]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர், உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் பிறந்தார். அங்கு இவரது தாயார் வீட்டிலேயே ஒரு சிறிய அழகு நிலையத்தை நடத்தி வந்தார்.[6] இவர் இளமையாக இருந்தபோது தந்தையை இழந்தார். தந்தை இறந்த சில நாட்களுக்குப் பிறகு இவருடைய தாயின் அழகு நிலையம் எரிக்கப்பட்டது. பிறகு இவருடைய தந்தைவழி தாத்தா பாட்டி தனது தாயை மற்றும் இவரையும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இவரின் சகோதரனை மட்டும் அவர்கள் வைத்திருக்க விரும்பினார். இதைத் தொடர்ந்து, கவுர் மற்றும் இவரது தாய் மற்றும் சகோதரன் ஹோஷியார்பூருக்கு தனது தாய்வழி தாத்தா பாட்டி வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு இவர்கள் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தனர்.
1991 ஆம் ஆண்டில், இவருடைய தாயார் ஒரு பிரித்தானிய குடிமகனை மறுமணம் செய்து கொண்டார். பிறகு இவரது குடும்பம் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு இவரது தாயார் ஒரு அழகு நிலையத்தைத் திறந்து வியாபரத்தையும் படிப்பையும் நடத்தி வந்தார். இதற்கிடையில், ஹார்ட் கவுர் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.[6] ஹிப்-ஹாப்பில் ஆர்வம் கொண்ட கவுர் ஒரு சொல்லிசை பாடகராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.[7][8][9][10]
தொழில்
[தொகு]இவரது முதல் தனி ஆல்பம் சூப்பவுமன் 2007 இல் வெளியிடப்பட்டது.[11][12]
2008 ஆம் ஆண்டில், இங்கிலாந்து ஆசிய இசை விருதுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[13] மேலும் "சிறந்த பெண் நடிகர்" என்ற விருதையும் வென்றார்.[14]
2013 ஆம் ஆண்டில் கோக் ஸ்டுடியோ இந்தியாவுக்காக இசையமைப்பாளர் ராம் சம்பத் மற்றும் ராஜஸ்தானி நாட்டுப்புற பாடகி பன்வாரி தேவி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். தேர்தல் நேரத்தில் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக "கார்லே து வோட்டிங்" என்ற பாடலை இயற்றினார். சமீபத்தில், ஹார்ட் கவுர் ஃபிஃபா உலகக் கோப்பைக்கான "கோல் மார் கோல் மார்" என்ற பாடலை இயற்றினார். இந்த பாடல் ரசிகர்களின் உணர்ச்சிகளை விவரிக்கும் பாடலாகும். மேலும் இவர் இந்தி, பஞ்சாபி, பெங்காலி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் பாடியுள்ளார்.
சர்ச்சை
[தொகு]யோகி ஆதித்யநாத் மற்றும் மோகன் பகவத் பற்றிய கருத்துகளுக்காக 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.[15][16] 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியை கேலி செய்யும் வீடியோவை வெளியிட்டதால் இவரது டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "An interview with rapper Hard Kaur". MiD DAY. 1 March 2009. http://www.mid-day.com/specials/2009/mar/010309-Hard-Kaur-interview-rapper-female-rapper-London-Uk-Punjabi.htm.
- ↑ "I don't want typical 'ladki' roles: Hard Kaur". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. 5 October 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131006161423/http://articles.timesofindia.indiatimes.com/2013-10-05/news-and-interviews/42719266_1_hard-kaur-rebel-mother.
- ↑ Jaspreet Nijher (26 May 2013). "I did not abuse anyone: Hard Kaur". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-06-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130608212520/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-26/news-and-interviews/39521780_1_honey-singh-kinng-high-performance.
- ↑ Shaheen Parkar (25 September 2013). "Hard Kaur in a verbal tussle at a Bandra nightspot". Mid Day.
- ↑ "Hard Kaur turns composer, keen to work with". Indo-Asian News Service. NDTV. 27 June 2013 இம் மூலத்தில் இருந்து 7 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150707085033/http://movies.ndtv.com/music/hard-kaur-turns-composer-keen-to-work-with-new-talent-384988.
- ↑ 6.0 6.1 Rajiv Vijayakar (18 July 2008). "Kaur competency". Screen இம் மூலத்தில் இருந்து 2 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100302170332/http://www.screenindia.com/news/kaur-competency/335923/.
- ↑ "Reality shows a tough act: Rapper Hard Kaur". தி இந்து. 29 May 2009 இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604182111/http://www.hindu.com/thehindu/holnus/009200905291432.htm.
- ↑ "NRIs are preferred in India: Hard Kaur". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 March 2009 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811050652/http://articles.timesofindia.indiatimes.com/2009-03-27/tv/27999687_1_hard-kaur-rap-taran-kaur-dhillon.
- ↑ Sassy singer Hard Kaur eyes Bollywood By ApunKaChoice, 24 January 2008.
- ↑ "It's a wrap". தி இந்து. 30 August 2008 இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604182352/http://www.hindu.com/mp/2008/08/30/stories/2008083053360800.htm.
- ↑ "Rapper Hard Kaur eyeing acting career in Bollywood". The Financial Express. 10 March 2010. http://www.financialexpress.com/news/rapper-hard-kaur-eyeing-acting-career-in-bollywood/589168/.
- ↑ BBC Review: "Britain's premier female Asian rapper finally releases her debut album..." பிபிசி, 17 January 2008.
- ↑ "UK Asian Music Awards nominees announced – The Asian News". menmedia.co.uk. 18 January 2008. Archived from the original on 12 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 August 2010.
- ↑ Nazhat (8 March 2008). "The UK Asian Music Awards 2008". desiblitz.com. பார்க்கப்பட்ட நாள் 24 August 2010.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "The Hard Line". The Indian Express (in Indian English). 2019-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.