உள்ளடக்கத்துக்குச் செல்

அமோலக்கு ரத்தன் கோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமோலக்கு ரத்தன் கோலி (Amolak Rattan Kohli) இந்தியாவிலுள்ள மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக இவர் பணியாற்றினார் [1]

அமலோக்கு ரத்தன் கோலி கொல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மைக் கழ்கத்தின் முன்னாள் மாணவர் ஆவார். அந்நிறுவனத்தின் முதல் முதுநிலை வணிக மேலாண்மை படிப்பின் முதல் மாணவர் தொகுப்பில் இவர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வணிகப் பள்ளியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடமும் பெற்றிருந்தார். மேலும் இவர் குருசேத்ரா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

பல்வேறு துறைகளில் பெற்ற பரந்த நிறுவன அனுபவத்துடன் அமலோக்கு ரத்தன் கோலி இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை நிறுவுவதில் ஈடுபட்டுள்ள ஒரு சிறந்த கல்வியாளராகவும் மனித வள பயிற்சியாளராகவும் மதிக்கப்படுகிறார். இவரது மகன் நளின் கோலி ஒரு வழக்கறிஞராகவும் [2] முதல் பாரதிய சனதா கட்சி செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Governor of Mizoram". பார்க்கப்பட்ட நாள் December 22, 2020.
  2. "BJP appoints Modi aide Amit Shah in charge of Uttar Pradesh". Among the young faces, Nalin Kohli has been given the charge of Mizoram where his father Amolak Rattan Kohli has once served as the Governor

புற இணைப்புகள்

[தொகு]