உள்ளடக்கத்துக்குச் செல்

உசாப்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்கின் போது கல்லறைக் கோயில்களில் மம்மியின் கல் சவப்பெட்டியில் வைக்கப்படும் வேலைக்காரப் படையின் சிறு சிலைகள்
வண்ணம் தீட்டப்பட்ட சவப்பெட்டியில் மம்மியின் ஏவலர்களாக நான்கு வேலைக்காரப் படையினரின் சிலைகள், காலம் கிமு 1279 – கிமு 1213

உசாப்திகள் (ushabti (also called shabti or shawabti), பழைய எகிப்து இராச்சியத்தில் நரபலி மற்றும் விலங்குகளை பலி இடுவதற்கு பதிலாக, மம்மியின் மறுபிறவி வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் கல்லறையில் வைக்கப்படும் பணியாளர்களின் மண் சிற்பங்கள் ஆகும். இது பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்கின் போது கல்லறையில் வைக்கப்படும் பொருட்களில் ஒன்றாகும். இச்சிற்பங்களின் தோள்பட்டைகளில் ஒரு மண்வெட்டியும், முதுகில் கூடையும் காணப்படும். உசாப்திகளின் கால்களில் எகிப்திய மொழியில் படவெழுத்துகளில் குறிப்புகள் கொண்டிருக்கும்.[1][2][3]

எகிப்திய கல்லறைகளில் மம்மியுடன் வைக்கும் கல்லறைப் பொருட்களில் ஒன்றான உசாப்தி சிற்பங்கள் வைக்கும் நடைமுறை பழைய எகிப்திய இராச்சிய (கிமு 2686 – கிமு 2181) காலத்தில் துவங்கியது.[4]

401 உசாப்தி சிற்பங்களின் குறிப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Taylor, Richard (2000). 2000. ABC-CLIO. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87436-939-8.
  2. Teeter, E (October 1998). "Harry M. Stewart. Egyptian Shabtis". Journal of Near Eastern Studies: 299–300. 
  3. ushabti. (2003). In The Macmillan Encyclopedia.
  4. Taylor, Richard. "SHABTI (USHABTI, SHAWABTI)." Death and the Afterlife: a cultural encyclopedia. California: 2000.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
உசாப்தி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசாப்தி&oldid=3488548" இலிருந்து மீள்விக்கப்பட்டது