உள்ளடக்கத்துக்குச் செல்

பண்ணுறவாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: kk:Дипломатия
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: new:कूटनीति
வரிசை 60: வரிசை 60:
[[mwl:Diplomacie]]
[[mwl:Diplomacie]]
[[nap:Dipromazzia]]
[[nap:Dipromazzia]]
[[new:कूटनीति]]
[[nl:Diplomatie]]
[[nl:Diplomatie]]
[[nn:Diplomati]]
[[nn:Diplomati]]

15:51, 25 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

நியூ யார்க் நகரில் தலைமையகத்தைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையே உலகின் மிகப் பெரிய இராசதந்திர அமைப்பு ஆகும்.

பண்ணுறவாண்மை (Diplomacy) என்பது குழுக்களின் அல்லது நாடுகளின் பேராளர்களுடன் பேரப் பேச்சுக்களை நடத்தும் நடைமுறையும் கலையும் ஆகும். நாடுகளிடையே விவகாரங்களைப் பகைமை இன்றிக் கையாளும் உத்தியே இது என்றும் பொருள் கொள்ளப்படுவது உண்டு. பொதுவாக இது, அமைதி, வணிகம், போர், பொருளாதாரம், பண்பாடு ஆகியவை தொடர்பான விடயங்களில் நாடுகளிடையேயான உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவே இச் சொல் பயன்படுகிறது. இவ் விடயங்களை தொழில் அடிப்படையிலான பண்ணுறவாளர்களே கையாள்வர். நாடுகளிடையேயான ஒப்பந்தங்களை நாடுகளின் அரசியலாளர்கள் ஏற்றுக் கொண்டு கைச்சாத்திடுமுன், பண்ணுறவாளர்களே இவற்றுக்கான பேச்சுக்களை நடத்துவர்.

வரலாறு

பண்ணுறவாண்மையைக் கையாளுவது ஒரு நாட்டுக்கு இருக்கவேண்டிய முக்கிய தகுதிகளுள் ஒன்று. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் முதல் நகர அரசுகள் உருவான போதே பண்ணுறவாண்மை நடைமுறைகள் தொடங்கி விட்டன. வரலாற்றுக் காலத்தின் பெரும் பகுதியில், குறிப்பிட்ட சில பேச்சுக்களுக்காக பண்ணுறவாளர் வேற்று நாடுகளுக்கு அனுப்பப்படுவர். பணி முடிந்ததும் உடனடியாகவே அவர்கள் திரும்பிவிடுவர். இன்னொரு நாட்டுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக வலுவைக் கொடுப்பதற்காக, அனுப்பப்படும் பண்ணுறவாளர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அவர்களது நெருங்கிய உறவினராகவோ அல்லது மிகவும் உயர்ந்த பதவி வகிப்பவர்களாகவோ இருப்பர்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Diplomacy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணுறவாண்மை&oldid=1071675" இலிருந்து மீள்விக்கப்பட்டது