சனவரி 7
நாள்
<< | சனவரி 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXV |
சனவரி 7 (January 7) கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார்.
- 1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது.
- 1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.
- 1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார்.
- 1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
- 1785 – பிளான்சார்ட் என்ற பிரான்சியர் வளிம ஊதுபை ஒன்றில் இங்கிலாந்து டோவர் துறையில் இருந்து பிரான்சின் கலே வரை பயணம் செய்தார்.
- 1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
- 1846 – இலங்கையில் தி எக்சாமினர் என்ற ஆங்கில செய்திப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.[2]
- 1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
- 1935 – பெனிட்டோ முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
- 1939 – மார்கெரிட் பெரே என்பவர் பிரான்சியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் பட்டான் மீதான முற்றுகையை யப்பான் ஆரம்பித்தது.
- 1950 – அமெரிக்காவில் அயோவா மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
- 1954 – இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
- 1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
- 1972 – எசுப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் உயிரிழந்தனர்.
- 1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. போல் போட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.
- 1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.
- 1985 – சப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.
- 1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
- 1991 – எயிட்டியின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.
- 1999 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.
- 2005 – இத்தாலியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
- 2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
- 2012 – நியூசிலாந்தில் கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம ஊதுபை ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.
- 2015 – பாரிசு நகரில் சார்லி எப்டோ அலுவலகங்களில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
- 2015 – யெமன், சனா நகரில் வாகனக் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றதில் 38 பேர் கொல்லப்பட்டான்ர்.
பிறப்புகள்
- 1502 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1585)
- 1831 – ஈன்றிக் வொன் இசுட்டீபன், பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தை ஆரம்பித்த செருமானியர் (இ. 1897)
- 1844 – பெர்னதெத் சுபீரு, பிரான்சியப் புனிதர் (இ. 1879)
- 1851 – ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன், பிரித்தானிய மொழியியல் அறிஞர் (இ. 1941)
- 1920 – அலஸ்ட்டயர் பில்கிங்டன், ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (இ. 1995)
- 1925 – தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமய, சமூக செயற்பாட்டாளர் (i. 2008)
- 1938 – பி. சரோஜாதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1943 – சடாகோ சசாகி, அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட சப்பானியப் பெண் பிள்ளை (இ. 1955)
- 1945 – சுலாமித் பயர்சுடோன், கனடிய பெண்ணியவாதி (இ. 2012)
- 1948 – சோபா டே, இந்திய எழுத்தாளர்
- 1948 – இசிரோ மிசுகி, சப்பானியப் பாடகர், நடிகர்
- 1953 – பாக்கியராஜ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்
- 1964 – நிக்கோலஸ் கேஜ், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
- 1967 – இர்பான் கான், இந்திய நடிகர் (இ. 2020)
- 1971 – ஜெரமி ரெனர், அமெரிக்க நடிகர்
- 1972 – எஸ். பி. பி. சரண், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர்
- 1976 – ஹரிஷ் ராகவேந்திரா, தென்னிந்தியத் திரைப்படப் பாடகர், நடிகர்
- 1979 – பிபாசா பாசு, இந்திய நடிகை
இறப்புகள்
- 1943 – நிக்கோலா தெஸ்லா, செருபிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1856)
- 1978 – வெ. சாமிநாத சர்மா, தமிழகத் தமிழறிஞர், பன்மொழி அறிஞர் (பி. 1895)
- 1987 – லட்சுமி, தமிழக எழுத்தாளர் (பி. 1921)
- 1989 – இறோகித்தோ, சப்பானியப் பேரரசர் (பி. 1901)
- 1995 – சம்பந்தன், ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1913)
- 1995 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (பி. 1926)
- 1996 – வி. குமார், தமிழகத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1934)
- 2011 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1941)
- 2015 – பி. எஸ். அப்துர் ரகுமான், இந்தியத் தொழிலதிபர் (பி. 1927)
- 2015 – ஜார்ஸ் போலான்ஸ்கி, துனீசிய-பிரான்சிய கேலிச்சித்திர வரைஞர் (பி. 1934)
- 2016 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (பி. 1936)
சிறப்பு நாள்
- நத்தார் (கிழக்கு மரபுவழி திருச்சபை யூலியன் நாட்காட்டி)
- இனவழிப்பு நாளில் இருந்து விடுதலை (கம்போடியா)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 19
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.