வியட்நாம்

தென்கிழக்கு ஆசிய நாடு

வியட்நாம் (Vietnam)[10] அல்லது அதிகாரபூர்வமாக வியட்நாம் சமவுடைமைக் குடியரசு (Socialist Republic of Vietnam) என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். 2012ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 90.3 மில்லியன் மக்களைக் கொண்டு மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 13ம் இடத்திலும், ஆசியாவில் 8வது இடத்திலும் உள்ளது. வியட்நாம் என்பதன் கருத்து "தெற்கு வியட்" (நாம் வியட் எனும் பண்டைய சொல்லுக்கு ஒத்ததாக உள்ளது.) என்பதாகும். 1802ல் பேரரசர் ஜியா லோங்கினால் இப் பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதோடு பின்னர் 1945ல் ஹோ சி மின்னின் தலைமையில் வியட்நாம் சனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டபோது இப்பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. இந் நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.[11] 1976ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் தலைநகராக ஹனோய் உள்ளது.

வியட்நாம் சோசலிசக் குடியரசு
Socialist Republic of Vietnam
Cộng hòa Xã hội chủ nghĩa Việt Nam
கொடி of வியட்நாம்
கொடி
சின்னம் of வியட்நாம்
சின்னம்
குறிக்கோள்: "சுதந்திரம் - விடுதலை - மகிழ்ச்சி"
நாட்டுப்பண்: "இராணுவ அணிவகுப்பு"
அமைவிடம்: வியட்நாம்  (green)

in ஆசியான்  (dark grey)

தலைநகரம்ஹனோய்
21°2′N 105°51′E / 21.033°N 105.850°E / 21.033; 105.850
பெரிய நகர்ஹோ சி மின் நகரம்
10°48′N 106°39′E / 10.800°N 106.650°E / 10.800; 106.650
அதிகாரபூர்வ மொழிவியட்நாமியம்[1]
இனக் குழுகள்
(2019)
சமயம்
(2019)
[2][3]
மக்கள்வியட்நாமியர்
வியட் (பேச்சுவழக்கு)
அரசாங்கம்ஒற்றை மார்க்சிய-லெனினிய ஒரு-கட்சி சோசலிசக் குடியரசு[4]
• பொதுச் செயலாளர், அரசுத்தலைவர்[a]
தோ லாம்
• பிரதமர்
பாம் மின் சின்
• தேசியப் பேரவைத் தலைவர்
திரான் தான் மான்
சட்டமன்றம்தேசியப் பேரவை
அமைப்பு
• வான் லாங்
கிமு 7-ஆம் நூற்றாண்டு
• ஆவ் லாக்
கிமு 3-ஆம் நூற்றாண்டு
• ஹான் இணைப்பு
கிமு 111
• சீனாவில் இருந்து விடுதலை
939
• மீள் விடுதலை
1428
• நூயென் இணைப்பு
1802
• பாதுகாப்பு ஒப்பந்தம்
25 ஆகத்து 1883
• விடுதலை அறிவிப்பு
2 செப்டம்பர் 1945
• வடக்கு–தெற்கு பிரிவு
21 சூலை 1954
30 ஏப்பிரல் 1975
• மீளிணைவு
2 சூலை 1976
• டோய் மோய்
18 திசம்பர் 1986
• நடப்பு அரசியலமைப்பு
28 நவம்பர் 2013[b]
பரப்பு
• மொத்தம்
331,344.82[5][6] km2 (127,932.95 sq mi) (66-ஆவது)
• நீர் (%)
6.38
மக்கள் தொகை
• 2023 மதிப்பிடு
100,300,000[7] (15-ஆவது)
• 2019 கணக்கெடுப்பு
96,208,984
• அடர்த்தி
298/km2 (771.8/sq mi) (49-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2024 மதிப்பீடு
• மொத்தம்
Increase $1.559 திரில்லியன்[8] (26-ஆவது)
• தலைவிகிதம்
Increase $15,470[8] (106-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2024 மதிப்பீடு
• மொத்தம்
Increase $465.814 பில்லியன்[8] (33-ஆவது)
• தலைவிகிதம்
Increase $4,623[8] (119-ஆவது)
ஜினி (2020)negative increase 36.8
மத்திமம்
மமேசு (2022)Increase 0.726[9]
உயர் · 107-ஆவது
நாணயம்டொங் (₫) (VND)
நேர வலயம்ஒ.அ.நே+07:00 (UTC+07:00)
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி+84
ஐ.எசு.ஓ 3166 குறியீடுVN
இணையக் குறி.vn

கி.பி. 938ல் பாதாங் நதிப் போரில் பெற்ற வெற்றியை அடுத்து சீனப் பேரரசிடமிருந்து வியட்நாம் சுதந்திரமடைந்தது. பல்வேறு வியட்நாமிய அரச வம்சங்களும் இங்கு தோன்றி நாட்டை வளப்படுத்தியதோடு வியட்நாம் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தென்கிழக்காசியா நோக்கி விரிவடைந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இந்தோசீனத் தீபகற்பத்தை பிரான்சியர் அடிமைப்படுத்தும்வரை இது தொடர்ந்தது. 1940களில் சப்பானிய ஆதிக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வியட்நாமியர் முதலாவது இந்தோசீனப் போரை நடத்தினர். இதன்மூலம் 1954 பிரான்சியர் வெளியேறினர். அதன்பிறகு வியட்நாம் அரசியல் அடிப்படையில் வட, தென் வியட்நாம்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்தமையினால் வியட்நாம் போர் ஏற்பட்டது. ஐக்கிய அமெரிக்க ஆதரவுடனான தென் வியட்நாமை எதிர்த்து வட வியட்நாமும் வியட்கொங் படைகளும் போர்புரிந்தன. 1975 இல் வட வியட்நாமின் வெற்றியை அடுத்து போர் நிறைவடைந்தது.

வியட்நாம் முழுவதும் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. எனினும் வியட்நாம் ஏழ்மை நாடாகவும் அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும் தொடர்ந்தது. 1986 இல், அரசாங்கம் தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டமையின் விளைவாக உலகப் பொருளாதாரத்துடன் வியட்நாம் ஒன்றிணையத் தொடங்கியது.[12] 2000ம் ஆண்டளவில் பலநாடுகளுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 2000 ஆம் ஆண்டிலிருந்து வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி வீதம் மிக உயர்வாகக் காணப்பட்டதோடு,[12] 2011 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சிச் சுட்டெண்ணில் ஏனைய 11 பாரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளுடன் இடம்பெற்றது.[13] இதன் சிறந்த பொருளியல் சீர்திருத்தங்கள் காரணமாக 2007 இல் உலக வணிக அமைப்பில் இணைந்து கொண்டது. எவ்வாறாயினும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுகாதாரச் சேவைகளில் சமத்துவமின்மை மற்றும் பாலியல் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.[14][15][16][17][18]

வரலாறு

தொகு

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

தொகு

பழங்கற்காலத்திலிருந்தே வியட்நாம் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ளன. கி.மு. 500,000 வருடங்கள் பழமையான ஹோமோ எரெக்டசு மனித எச்சங்கள் வடக்கு வியட்நாமின் லாங் சான் மற்றும் ஙே ஆன் மாகாணங்களிலுள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[19] தென்கிழக்காசியப் பகுதியிலிருந்து பெறப்பட்ட மிகமுந்திய ஹோமோ சேப்பியன் எச்சங்கள் நடுப் பிளைத்தோசீன் காலத்தின் ஆரம்பப் பகுதிக்குரியனவாகும். இவற்றுள் தாங் ஓம் மற்றும் ஹாங் ஹும் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற பற்சிதைவு எச்சங்களும் உள்ளடங்கும்.[20] பின் பிளைத்தோசீன் கால ஹோமோ சேப்பியன் பல் எச்சங்கள் டொங் கான் பகுதியிலும்,[21] முன் ஹோலோசீன் பகுதிக்குரிய பல் எச்சங்கள் மாய் தா தியூ,[21] லாங் காஓ[22] மற்றும் லாங் கௌம் ஆகிய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[23]

வெண்கலக் காலம்

தொகு
 
ஒரு தொங் சோன் வெண்கல மேளம்.

கிமு 1000 ஆம் ஆண்டளவில், மா ஆறு, செவ்வாறு ஆகியவற்றின் படுக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட அரிசிப் பயிர்ச்செய்கையும் வெண்கல வார்ப்புத் தொழிலும் காரணமாக தொங் சோன் பண்பாடு வளர்ச்சி பெற்றது. இப்பண்பாட்டில் உருவாக்கப்பட்ட வெண்கல மேளங்கள் புகழ்பெற்றவை. இக்காலத்தில், முந்தைக்கால வியட்நாமிய அரசுகளான வான் லாங் மற்றும் ஔ லாக் என்பன தோற்றம் பெற்றன. கி.மு. முதலாயிரவாண்டில் இப்பண்பாட்டின் தாக்கம் தென்கிழக்காசியக் கடலோர அரசுகள் உட்பட்ட தென்கிழக்காசியாவெங்கும் பரவியது.[24][25][26]

1946–54: முதல் இந்தோசீனப் போர்

தொகு

1945 செப்டம்பர் 2 ஆம் திகதி வியட்நாம் சுதந்திர நாடாக ஹோசிமின் தலைமையிலான புரட்சிகர அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் பிரெஞ்சு அரசு தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வியட்நாமை தங்கள் காலனியாதிக்கத்திற்குள் தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதற்கெதிராக வியட்நாம் மக்கள் கடுமையான நேரடிப் போரில் ஈடுபட்டனர். சுதந்திர பிரகடனத்திற்குப் பிறகு சுமார் ஒன்பது ஆண்டுகள் நீடித்த இப்போர் 1954 இல் வியட்நாம் மக்களின் விடுதலைப் படை வெற்றி பெற்றதன் மூலம் முடிவிற்கு வந்தது. [27] 1954 மே மாதம் 5ம் நாள் பிரெஞ்சு படைத் தளபதியும் கூட்டாளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 10000 பிரெஞ்சுப் படையினர் சரணடைந்தனர்.[28]1954 ஜூலை 21 ஜெனிவா ஒப்பந்தம் மூலம் வியட்நாம் சுதந்திரத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.ஆனாலும் பிரச்சினை தொடர்ந்தது.[29] வியட்நாம் நாடு தற்காலிகமாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு அவை ஒன்றிணைக்கப்படும் என்பது ஒப்பந்தத்தின் பகுதியாகும் .[30][31]

குறிப்புகள்

தொகு
  1. மிகவும் சக்திவாய்ந்த அரசியல் பதவி வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், அரசுத்தலைவர் அல்ல. பொதுச் செயலாளர் அரசியல்பீடம், செயலகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறார்.
  2. 2014 சனவரி 1 முதல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Vietnam". The World Factbook (in ஆங்கிலம்). Central Intelligence Agency. 18 April 2023. Archived from the original on 10 June 2021. பார்க்கப்பட்ட நாள் 27 April 2023.
  2. 2022 Report on International Religious Freedom: Vietnam (Report). Office of International Religious Freedom, United States Department of State. 2022. Archived from the original on 2024-02-11. பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
  3. Vietnam Government Committee for Religious Affairs, 2018, cited in "2019 Report on International Religious Freedom: Vietnam". United States Department of State. Archived from the original on 26 September 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  4. "Constitution of the Socialist Republic of Vietnam". FAOLEX Database. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு. Archived from the original on 20 January 2024. பார்க்கப்பட்ட நாள் 20 January 2024. The Constitution defines Vietnam as [having] a socialist rule of law, State of the people, by the people, and for the people. Vietnam is a unitary state ruled by [a] one-party system with coordination among State bodies in exercising legislative, executive and judicial rights.
  5. "Vietnam". The World Factbook (in ஆங்கிலம்). Central Intelligence Agency. 2024-01-17. Archived from the original on 10 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2024-01-23.
  6. "Vietnam country profile". BBC News. 24 February 2020. Archived from the original on 28 May 2020. பார்க்கப்பட்ட நாள் 27 January 2021.
  7. Socio-economic situation in the fourth quarter and 2023 (Report). General Statistics Office of Vietnam. 2023-12-29. Archived from the original on 2024-02-12. பார்க்கப்பட்ட நாள் 2024-02-12.
  8. 8.0 8.1 8.2 8.3 "World Economic Outlook Database, April 2024 Edition. (Vietnam)". www.imf.org. அனைத்துலக நாணய நிதியம். 16 April 2024. Archived from the original on 16 April 2024. பார்க்கப்பட்ட நாள் 17 April 2024.
  9. "Human Development Report 2023/24" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 13 March 2024. p. 289. Archived (PDF) from the original on 13 March 2024. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
  10. Vietnam. Dictionary.com. Retrieved 2 February 2013.
  11. The South China Sea is referred to in Vietnam as the East Sea (Biển Đông). "China continues its plot in the East Sea". VietNamNet News. 10 December 2012. Archived from the original on 16 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 16 February 2013.
  12. 12.0 12.1 "Vietnam's new-look economy". BBC News. 18 October 2004. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/3752682.stm. 
  13. Weisenthal, Joe (22 February 2011). "3G Countries". Businessinsider.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2011.
  14. "Vietnam Inequality Report". Mekong Economics. 2005. பார்க்கப்பட்ட நாள் 7 November 2010.
  15. "Distribution of Family Income – Gini Index" பரணிடப்பட்டது 2007-06-13 at the வந்தவழி இயந்திரம். CIA World Factbook, 2008 data. Retrieved 27 November 2011.
  16. எஆசு:10.1016/S0304-4076(02)00161-6
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  17. எஆசு:10.2307/2761129 10.2307/2761129
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  18. Gallup, John Luke (2002). "The wage labor market and inequality in Viet Nam in the 1990s". Ideas.repec.org. பார்க்கப்பட்ட நாள் 7 November 2010.
  19. "The Human Migration: Homo Erectus and the Ice Age" பரணிடப்பட்டது 2012-11-12 at the வந்தவழி இயந்திரம். Yahoo.com. 27 May 2009. Retrieved 24 January 2013.
  20. Kha and Bao, 1967; Kha, 1975; Kha, 1976; Long et al., 1977; Cuong, 1985; Ciochon and Olsen, 1986; Olsen and Ciochon, 1990.
  21. 21.0 21.1 Cuong, 1986.
  22. Colani, 1927.
  23. Demeter, 2000.
  24. Dong Son culture பரணிடப்பட்டது 2013-04-26 at the வந்தவழி இயந்திரம். LittleVietnamTours.com.vn. Retrieved 28 January 2013.
  25. Nola Cooke, Tana Li, James Anderson (2011). The Tongking Gulf Through History. p.46: "Nishimura actually suggested the Đông Sơn phase belonged in the late metal age, and some other Japanese scholars argued that, contrary to the conventional belief that the Han invasion ended Đông Sơn culture, Đông Sơn artifacts, ..."
  26. Vietnam Fine Arts Museum (2000) "... the bronze cylindrical jars, drums, Weapons and tools which were sophistically carved and belonged to the World famous Đông Sơn culture dating from thousands of years; the Sculptures in the round, the ornamental architectural Sculptures ..."
  27. "Vietnam Notebook: First Indochina War, Early Years (1946–1950)". Parallel Narratives. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
  28. Declaration of Independence, Democratic Republic of Vietnam (2 September 1945). Vietnam Documents. Retrieved 15 October 2012.
  29. "Vietnam's 300 Days of Open Borders: Operation Passage to Freedom". Library of Economics and Liberty. 3 July 2012. பார்க்கப்பட்ட நாள் 12 July 2013.
  30. Moïse, Edwin (4 November 1998). "The Geneva Accords". Clemson University. பார்க்கப்பட்ட நாள் 12 July 2013.
  31. சி.பி. கிருஷ்ணன். "சோசலிசப் பாதையில் பீடு நடைபோடும் வியட்நாம்". பார்க்கப்பட்ட நாள் 20 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாம்&oldid=4082759" இலிருந்து மீள்விக்கப்பட்டது