உரையாடல்கள் வெளிப்பாடாகவும், வேடிக்கையாகவும், நீங்கள் நீங்களாக முற்றிலும் இருக்கக்கூடிய இடம்.
நீங்கள் மெதுவான இணைய இணைப்பில் இருந்தாலும், அன்றாடத் தருணங்களைப் பதிவுசெய்து திருத்தலாம், அவற்றை நிலையான அல்லது உயர்தர தெளிவுத்திறனுடன் அனுப்பலாம்.
உரையாடலில் ஒரு நிமிடம் வரையிலான வீடியோ மெசேஜ்களை உடனடியாகப் பதிவுசெய்து பகிர்வதன் மூலம் அந்தத் தருணத்தின் உணர்வைப் பதிவுச் செய்யலாம்.
தேடக்கூடிய மற்றும் விருப்பப்படி அமைக்கக்கூடிய ஸ்டிக்கர்கள், அவதார்கள் மற்றும் GIFகள் மூலம் படைப்பாற்றலைப் பெறலாம்.
மெசேஜ்களுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் உங்கள் எண்ணங்களை எளிதாகவும் உடனடியாகவும் பகிரவும் ஏதேனும் ஈமோஜியைப் பயன்படுத்தலாம்.
வார்த்தைகளுக்கும் அப்பால் செல்லுங்கள்: உங்கள் தொடர்பு நபர்களுடன் படங்கள், வீடியோக்கள், குரல் மெசேஜ்கள் அல்லது உரையைப் பகிருங்கள். GIFகள், ஸ்டிக்கர்கள் மற்றும் பலவற்றின் மூலம் உங்களது ஸ்டேட்டஸை நபருக்கேற்றபடியாக்குங்கள்.
இணைப்பில் இருங்கள்: எந்தத் தருணத்தையும் தவறவிடாதீர்கள் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நம்பிக்கையுடன் பகிருங்கள்: நீங்கள் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே உங்கள் ஸ்டேட்டஸ் தெரியும், 24 மணிநேரத்திற்குப் பிறகு அது மறைந்துவிடும்.