இலங்கை: அநுர குமாரவின் கட்சிக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வாக்களித்தது ஏன்?

காணொளிக் குறிப்பு, அநுர குமாரவின் கட்சிக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வாக்களித்தது ஏன்?
இலங்கை: அநுர குமாரவின் கட்சிக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வாக்களித்தது ஏன்?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியொன்று தமிழர் பகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றியது இதுவே முதல்முறை.

மேலும், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தருணமாக இது கருதப்படுகிறது.

குறிப்பாக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய தமிழர் தேர்தல் மாவட்டங்கள் அனைத்திலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் இந்த முடிவை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? மக்கள் அநுர குமாரவுக்கு வாக்களித்தது ஏன்?

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)