மெக்சிகோ: சில நொடிகளில் சரிந்த பிரமாண்ட மேடை - 9 பேர் பலி, உயிர் தப்பிய அதிபர் வேட்பாளர்
மெக்சிகோவில் அரசியல் பிரசார கூட்டத்தின் போது மேடை சரிந்தது. குடிமக்கள் இயக்க கட்சி வேட்பாளர் கோர்கே அல்வாரிஸ் மைனேஸ், மான்ட்டெரெ பகுதி அருகே பேசிக்கொண்டிருந்த போது இது நடந்தது.
ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர்; 50 பேர்வரை காயம் அடைந்தனர். மேடை லேசாக ஆடத் தொடங்கியதும் பின்பக்கம் குதித்து தான் காயமின்றி தப்பியதாக வேட்பாளர் மைனேஸ் கூறினார். திடீரென வீசிய பலத்த காற்றால் மேடை சரிந்ததாகவும் அவர் கூறுகிறார்.
இதுகுறித்துப் பேசிய குடிமக்கள் இயக்க கட்சியின் வேட்பாளர் கோர்கே அல்வாரிஸ் மைனேஸ் "மிகவும் சோகமாக இருக்கிறது. மிகவும் கவலையாக இருக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் இருப்பதாக என்னிடம் கூறினார்கள்."
"குறுகிய நேரத்திலேயே நிறைய மரங்கள் விழுந்து கிடப்பதைப் பார்த்தேன். அதன் பிறகு புயல் அல்லது மழை கூட இல்லை. நகரமே எப்படி இருக்கிறது பாருங்கள். உண்மையிலேயே நடந்த சம்பவம் வித்தியாசமாக இருந்தது," என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)