பாஜகவுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் - தேர்தல் முடிவுகளை புரிந்துகொள்வது எப்படி?
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அடுத்த ஆட்சி அமைவது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இந்திய அரசியல் அரங்கில் நடைபெற்றுவருகின்றன.
இன்று பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடைபெற்றுவரும் 17வது மக்களவையை கலைக்க மோதி பரிந்துரைத்ததாக, ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த மக்களவை, ஜூன் 16 அன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வழங்கிய இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் புரிந்துகொள்வது எப்படி? விரிவாக அலசியுள்ளார் பிபிசி தமிழ் சேவையின் ஆசிரியரும் 25 ஆண்டுகளாக டெல்லி அரசியலை உற்றுநோக்குபவருமான தங்கவேல் அப்பாச்சி. விரிவாக காணொளியில்...
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)