பஞ்சாப்: பொற்கோவில் வாசலில் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு

காணொளிக் குறிப்பு,
பஞ்சாப்: பொற்கோவில் வாசலில் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சரும் ஷிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல், தான் பெற்ற மத தண்டனை காரணமாக பொற்கோவில் வாயிலில் காவல் பணியில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் 2017 வரை பஞ்சாபில் ஷிரோன்மணி அகாலி தல் அரசு எடுத்த சில முடிவுகளுக்காக அகல் தக் சாஹிப் சீக்கிய மதக்குழு அவருக்கு மத தண்டனை வழங்கியது.

அவருடன் சேர்த்து அகால் தல் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. தண்டனைப்படி சுக்பீர் சிங் பொற்கோவிலுக்கு வெளியே இரண்டு நாட்களுக்கு ஒரு மணிநேரம் பணியாட்களின் உடை அணிந்து, வாயிற்காவலராக சேவை செய்ய வேண்டும். தண்டனையின் இரண்டாம் நாளான இன்று இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

அவருக்கு எந்த பாதிப்புமும் இன்றி இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)