பஹாமஸ்: நாடாளுமன்றத்தில் பாரம்பரிய கதாயுதத்தை தூக்கி வெளியே வீசிய எதிர்க்கட்சித் தலைவர்
பஹாமஸ் நாடாளுமன்றத்தில் பாரம்பரிய கதாயுதத்தை தூக்கி எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஜன்னலுக்கு வெளியே வீசும் காட்சி இது. இதனால் ஏற்பட்ட கைக்கலப்பில் துணை சபாநாயகர் தாக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஒரு போலீஸ் அதிகாரிக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் பகாமஸ் போலீஸுக்கு தொடர்புள்ளதாக, அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. இது குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து, இந்த சம்பவம் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
பஹாமஸ் நாடாளுமன்ற சம்பிரதாய நடைமுறைகளில் கதாயுதம் முக்கிய பங்கு வகிக்கிறது. கதாயுத்தை ஜன்னலுக்கு வெளியே வீசும் செயல், பஹாமஸில் இதற்கு முன்பும் ஒருமுறை நடந்திருக்கிறது. 1965-ல் எதிர்க்கட்சித் தலைவர் இதே செயலில் ஈடுபட்டார். அது பஹாமஸில் 'கருப்பு செவ்வாய்' என அழைக்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)