BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு என்ன நடந்தது?
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் நகரில் உள்ள எம்சிஜி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
மோதியுடன் மோகன் பாகவத் மறைமுக யுத்தமா? கோவில் - மசூதி பற்றிய பாகவத் பேச்சுக்கு துறவிகள் எதிர்ப்பு
நாட்டில் கோவில்கள் மற்றும் மசூதிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள இந்த நேரத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் - மசூதி பற்றி பாகவத் பேசியது என்ன? மோதி - மோகன் பாகவத் இடையே மறைமுக யுத்தமா?
காணொளி, இந்தியாவுக்குள் ஒரு 'பாகிஸ்தான்' - எங்கே உள்ளது? அதனால் மக்களுக்கு என்ன பிரச்னை? , கால அளவு 3,30
பாகிஸ்தான் காலனியில் தஞ்சம் புகுந்த வங்கதேச அகதிகளில் யாரும் இப்பகுதியில் தற்போது வசிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?
நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, ஒரு புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பார்க்கர் சோலார் புரோப் (Parker Solar Probe) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சை தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.
கஜகஸ்தான்: விமானம் பறவை மோதியதால் விபத்தில் சிக்கியதா? பயணிகள் என்ன ஆனார்கள்?
கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் 67 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே பல ஆண்டுகள் தடை இருந்தது ஏன் தெரியுமா?
1644இல் ஆங்கிலேய ப்யூரிடன்கள் (Puritans) கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒழிக்க முடிவு செய்தனர். ப்யூரிடன்கள் என்பவர்கள் கடுமையான மத விதிகளின் மீது நம்பிக்கை கொண்ட புரோடஸ்டன்ட் (Protestant) கிறிஸ்தவர்கள்.
இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. திங்களன்று பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன், 'ஷேக் ஹசீனாவை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக' கூறினார்.
பிரதமராக இருந்த சரண்சிங் அவமதித்த ஆறே மாதங்களில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானது எப்படி?
திஹார் சிறையில் இந்திரா காந்தி, அவசர காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்த அறையிலேயே அடைக்கப்பட்டார். அங்கு தினமும் காலை 5 மணிக்கு அவருடைய நாள் தொடங்கும். புபுல் ஜெயார், "காலை எழுந்தவுடன் அவர் யோகா மற்றும் பிராணயாமா செய்வார். பின்னர், அதற்கு முந்தைய நாள் மாலை சோனியா கொண்டு வந்த குளிர்ந்த பாலை அருந்துவார். அதன்பின், அவர் மீண்டும் தூங்க செல்வார்." என எழுதியுள்ளார்.
இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?
இன்றளவும் இந்த உலகில் கோடிக்கணக்கான நபர்கள் பின்பற்றும் ஒருவராக இயேசு மட்டும் பிரபலமானது எப்படி? மற்ற இறைத்தூதர்கள் பிரபலமாகாதது ஏன்?
"தலையில் எப்போது விழும் என்றே தெரியாது" - சென்னை பட்டினப்பாக்கம் குடியிருப்பின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள வீடுகள் பலவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் தினமும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நிலைக்கு என்ன காரணம்?
தாலிபன் அமைப்பில் விரிசலா? தலைமையை விமர்சிக்கும் இந்த மூத்த அமைச்சர் யார்?
காபூலில் உள்ள ஒரு மதரஸாவில் நடந்த நிகழ்ச்சியில், தாலிபன் அமைச்சரவையின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் மறைமுகமாக ஒருவரை ஒருவர் விமர்சித்தனர். இந்த சம்பவம் தாலிபன் அரசாங்கத்தில் விரிசல் இருப்பதை வெளிப்படுத்தியது. பெண் கல்விக்கு எதிரான தலைமையின் முடிவுகளுக்கு எதிராக மூத்த அமைச்சர் ஒருவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். யார் அவர்? தாலிபன் அமைப்புக்குள் என்ன நடக்கிறது?
சிறப்புப் பார்வை
'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ, சிரியாவால் அச்சுறுத்தல் இல்லை என்றும் சிரியாவின் தற்போதைய இடைக்காலத் தலைவர் அஹ்மத் அல்-ஷாரா, கூறியுள்ளார். டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு
கேரளாவில் மீனவ சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் 404 ஏக்கர் நிலத்திற்கு வக்ஃப் வாரியம் உரிமை கோருகிறது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மூன்று மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்ன நடக்கிறது? இருதரப்பும் சொல்வது என்ன?
கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கிசெல் பெலிகாட் வழக்கு: டொமினிக் தன்னுடைய மனைவிக்கு 10 ஆண்டுகள் மயக்க மருந்து கொடுத்து பிற ஆண்களை வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்சங் இந்தியா: தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - என்ன பிரச்னை? அரசு கூறுவது என்ன?
சாம்சங் இந்தியாவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதாகக் கூறி இன்று மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து சாம்சங் இந்தியா நிறுவனம் கூறுவது என்ன?
சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி
சிரியாவில் பஷர் அல்-அசத் ஆட்சியில் செயல்பட்ட கொடூரமான செட்னயா சிறையில் இருந்த ஒரு 'மர்ம கைதி' விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்பதில் பெரும் மர்மம் நீடிக்கிறது. ஏன்? என்ன நடந்தது?
இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 14 ஆண்டுகளாக திறம்பட விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிஎஸ்கேவில் விளையாடியதால் கவனம் ஈர்த்து, இந்திய அணியில் இடம் பிடித்த அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் என்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று மத்திய அரசு நீண்டகாலமாகக் கூறி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் 'இது ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், அரசியலமைப்பு சட்டம்' மூன்றுக்கும் எதிரானது என்ற குரலை எழுப்பி வருகிறது. இதுகுறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?
சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் சாமர்செட் என்ற இடத்தில் 37 பேர் படுகொலை செய்யப்பட்டு, வெட்டி சாப்பிடப்பட்டனர். மனிதர்களே மனிதர்களைச் சாப்பிடும் அளவுக்கு அங்கு என்ன நடந்தது? நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் பற்றி விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?
இலங்கையில் அதிபராக பதவியேற்ற முதல் இடதுசாரி தலைவரான அநுர குமார திஸாநாயக்க தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். அவரது பயணத்தில் இந்தியாவுக்கு அளித்த உறுதிமொழி என்ன? தமிழர்கள் பற்றி மோதி என்ன சொன்னார்?
பாம்பு போல நாக்கை இரண்டாக வெட்டி டாட்டூ - சிக்கிய இளைஞர் யார்? இதனால் என்ன ஆபத்து?
திருச்சியில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வந்த இளைஞர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் நாக்கை இரண்டாகத் துண்டித்து, டாட்டூ போடுவது, கண்களில் நிறமி பூசுவது போன்றவற்றைச் செய்துள்ளார். மனிதர்களின் நாக்கை பாம்பு போல மாற்றுவதால் என்ன ஆபத்து?
இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன?
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்
காணொளி
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்