உள்ளடக்கத்துக்குச் செல்

பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூக்கள்
செயற்கையான பூக்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பூ (பெ)

  • மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு.

{{மொழிபெயர்ப்பு}ராமர்

அரபி

விளக்கம்
  • பூ என்பது பொதுப் பெயர்! அதன் பல நிலைகள்:
அரும்பும் போது - அரும்பு
அரும்பிப் பனியில் நனையும் போது - நனை
நனைந்து முத்தாகும் போது - முகை
வெடிக்கத் தயாராக இருக்கும் போது - மொக்குள்
அரும்பி, விரிந்து கொண்டே இருக்கும் போது - போது
மணம் வீசத் தொடங்கும் போது - முகிழ்
மலர்ந்த பின் - மலர்
இன்னும் நன்றாக மலர்ந்து, மகரந்தம் அலரும் (பரவும்) போது - அலர்
கூட்டமாக மலர்ந்தால் - பொதும்பர்
வீழும் போது - வீ
உதிர்ந்து கிடக்கும் பூக்கள் - பொம்மல்
பழுப்பாய் வாடிய பின் - செம்மலர் (செம்மல்) (தினம் ஒரு பா)
  • புஷ்பம் என்ற வட மொழிச்சொல்லின் தழுவல் புட்பம் என்று மாறிப் பின்பு பூ என்று மாறிவிட்டது. இதற்கு இணையான தமிழ்ச் சொல் 'மலர்' ஆகும்.(ஆதாரம் தேவை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூ&oldid=1701847" இலிருந்து மீள்விக்கப்பட்டது