திருக்குறள் அகரமுதலி
- திருக்குறள் அகரமுதலி - அகரவரிசை
- திருக்குறள்
- திருவள்ளுவமாலை
- திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
- திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி
- திருக்குறள் சொல்லிலக்கண அகரமுதலி
அகரம்
அ
[தொகு]உள் இணைப்பான்கள்
[தொகு]- அ-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-
:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்-:
அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்
அ
[தொகு]- அ
- = அந்த.
- இலக்கணக்குறிப்பு: *சுட்டு இடைச்சொல்*
- குறள்: 225,247, 254, 350, 370, 411, 423, 475, 489, 641, 645, 671, 677, 695, 848, 950, 967, 1091, 1187.
திருவள்ளுவரின் வேறுபெயர்கள்:
|
- ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப் பசியை
- மாற்றுவார் ஆற்றலின் பின்.(225- அதி.23, ஈகை)
- அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
- இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (247- அதி.அருளுடைமை)
- அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்
- பொருளல்லது அவ்வூன் தினல். (254- அதி. புலான் மறுத்தல்)
- பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்≤
- பற்றுக பற்று விடற்கு. (350- அதி. துறவு)
- ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே
- பேரா இயற்கை தரும். (370- அதி. அவாவறுத்தல்)
- செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
- செல்வத்துள் எல்லாம் தலை. (411- அதி. கேள்வி)
- எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
- மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு (423- அதி. அறிவுடைமை)
- பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
- சால மிகுத்துப் பெயின் (475- வலியறிதல்)
- எய்தற்கரியது இயைந்தக்கால் அந்நிலையே
- செய்தற் கரிய செயல் (489- அதி. காலமறிதல்)
- நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
- யாநலத் துள்ளதூஉ மன்று (641-அதி. சொல்வன்மை)
- சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
- வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645- அதி. சொல்வன்மை)
- சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
- தாழ்ச்சியுள் தங்குதல் தீது (671- அதி.வினைசெயல்வகை)
- செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
- உள்ளறிவான் உள்ளம் கொளல் (677- அதி.வினைசெயல்வகை)
- எப்பொருளும் ஓரார் தொடரார்மற்(று) அப்பொருளை
- விட்டக்காற் கேட்க மறை (695- அதி. மன்னரைச் சேர்ந்தொழுகல்)
- ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
- போஒம் அளவுமோர் நோய் (848- அதி. புல்லறிவாண்மை)
- உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்(று)
- அப்பால் நாற்கூற்றே மருந்து (950- அதி. மருந்து)
- ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
- கெட்டான் எனப்படுதல் நன்று (967- அதி. மானம்)
- இருநோக்(கு)இவள்உண்கண் உள்ள(து) ஒருநோக்கு
- நோய்நோக்(கு) ஒன்(று) அந்நோய் மருந்து (1091- அதி. குறிப்பறிதல்)
- புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
- அள்ளிக்கொள் வற்றே பசப்பு (1187- அதி. பசப்புறு பருவரல்)
- = உடைய
இலக்கணக்குறிப்பு:‘அ’ *6-ஆம்வேற்றுமை உருபு, பிறிதின் கிழமைப் பொருள்*
- குறள்: 120, 376.
- வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பிறவும்
- தம போற் செயின் (120- அதி. நடுவுநிலைமை)
- (தம்+அ = தம)
- பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
- சொரியினும் போகா தம (376- அதி. ஊழ்)
அஃகாமை
[தொகு]- அஃகாமை
- = சுருங்காமை. இலக்கணக்குறிப்பு:“அஃகாமை” அஃகு- பகுதி+ ஆ-இடைநிலை+ மை-விகுதி. எதிர்மறை தொழிற் பெயர்.
- குறள்: 178.
- அஃகாமை செல்வத்திற்(கு) யாதெனின் வெஃகாமை
- வேண்டும் பிறன்கைப் பொருள். (178- வெஃகாமை)
- அஃகி
- = நுண்மையாய். இலக்கணக்குறிப்பு:@‘அஃகி’ அஃகு- (பகுதி) +இ (விகுதி). *செய்து எனும் இறந்தகால வினையெச்சம்*:
- குறள் : 175.
- அஃகி அகன்ற அறி(வு)என்னாம் யார்மாட்டும்
- வெஃகி வெறிய செயின். (அதி.18- வெஃகாமை)
- அஃது
- = அது
இலக்கணக்குறிப்பு:இலக்கணம்: அ- பகுதி+ஃ- விகாரம்+ து-விகுதி. *ஒன்றன்பால் சுட்டுப் பெயர்* ஃ-புணர்ச்சி விகாரம், தோன்றல்.
- குறள் 38, 49, 76, 80, 132, 162, 170, 220, 226, 236, 242, 262, 363, 368, 414, 427, 459, 476, 556, 572, 575, 591, 600, 621, 943, 971, 1001, 1014, 1032, 1093, 1166, 1279, 1308.
- வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃ(து)ஒருவன்
- வாழ்நாள் வழியடைக்கும் கல். (அதி.4 அறன்வலியுறுத்தல், கு.38)
- அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
- பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (அதி.5 இல்வாழ்க்கை, கு.49)
- அறத்திற்கே அன்புசார்(பு) என்ப அறியார்
- மறத்திற்கும் அஃதே துணை. (அதி.8 அன்புடைமை, கு.76)
- அஃதே= அஃது+ஏ.
- அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
- என்புதோல் போர்த்த உடம்பு. (அதி.8 அன்புடைமை, கு.80)
அகடு
[தொகு]- அகடு
- = வயிறு. இலக்கணக்குறிப்பு: ‘அகடு’ *சினைப்பெயர்*
- குறள் 936.
- அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் (அகடு+ ஆரார்)
- முகடியால் மூடப்பட் டார். (அதி.94 சூது)
- அகத்தது
- = நெஞ்சத்துள்ளது, மனத்தில்உள்ளது.
- இலக்கணக்குறிப்பு:அகம்+அத்து+அ+து. ‘அகம்’ பகுதி, ‘அத்து’ சாரியை, ‘அ’ சாரியை, ‘து’ விகுதி
- *குறிப்பு வினையாலணையும் பெயர். 2-ஆம் வேற்றுமைத் தொகை*
- குறள் 702.
- ஐயப் படாஅ(து) அகத்த(து) உணர்வானைத்
- தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல். (அதி.71 குறிப்பறிதல்)
- அகத்தார்
- = உள்வாழ்வார், அரணுள் இருப்பவர்.
- இலக்கணக்குறிப்பு:அகம்+அத்து+ஆர்- "அகத்தார்" அகம் பகுதி, அத்து இடைநிலை, ஆர் விகுதி.
- *பலர்பால் உயர்திணைப் படர்க்கைப்பெயர்., இடப்பெயர்., பொருள்,இடம், காலம், சினை, குணம், தொழிலான் வருபெயர்கள்.*
- குறள் 745.
- கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
- நிலைக்கெளிதாம் நீர(து) அரண். (அதி.75 அரண்)
- அகத்தான்
- = மனத்துடனாகிய(பரிமேலழகர்)
- இலக்கணக்குறிப்பு: அகம்+அத்து+ஆன். "அகத்தான்" அகம் பகுதி, அத்து இடைநிலை, ஆன் விகுதி.
- இடப்பெயர்., 3-ஆம் வேற்றுமை.
- குறள் 93.
- முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் (அகத்தான்+ஆம்)
- இன்சொலி னதே அறம். (அதி.10 இனியவை கூறல்)
- அகத்து
- = மனத்தில், உள்ளே (மனத்தின்கண்— பரிமேல்.)
- இலக்கணக்குறிப்பு: அகம்+அத்து. "அகத்து" அகம் பகுதி, அத்து சாரியை *ஒன்றன்பாற் படர்க்கை. பொருட் பெயர். 7-ஆம் வேற்றுமைத் தொகை*.
- குறள் 78, 271, 824, 1020, 1180, 1305.
- அன்புஅகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
- வற்றல் மரந்தளிர்த் தற்று. (அதி.8 அன்புடைமை, 78.) (அன்பு அகத்து இல்லா)
- வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
- ஐந்தும் அகத்தே நகும். (அதி.28 கூடாஒழுக்கம், 271.) (அகத்து+ஏ)
- முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
- வஞ்சரை அஞ்சப் படும். (அதி.83 கூடாநட்பு, 824) அகத்து+இன்னா
- நாண்அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை
- நாணால் உயிர்மருட்டி யற்று. (அதி.102 நாணுடைமை, 1020) அகத்து+இல்லார்
- மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்வார்ப்புரு:Error
- அறைபறை கண்ணார் அகத்து. (அதி.118 கண்விதுப்பழிதல், 1180)
- நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
- பூஅன்ன கண்ணார் அகத்து. (அதி.131 புலவி, 1305)
- =இடையில்.
- குறள் 194, 694, 717, 723, 727, 814, 877,
- 1027, 1055, 1163,1323.
- அகத்துறுப்பு= அன்பு,
- ('யாக்கை அகத்தின் கண்நின்று இல்லறத்திற்குஉறுப்பாகிய'—பரிமேல்.)
- குறள் 79.
- புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
- அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. (அதி.8 அன்புடைமை, 79)
- அகப்பட்டி= தன்னிற் சுருங்கிய பட்டி.
- "அகப்பட்டி—அகமாகியபட்டி"-பரிமேலழகர்.
- குறள் 1074.
- அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
- மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். (அதி.108 கயமை, 1074)
- அகம் = மனம்,
- குறள் 277, 298, 708, 786, 830.
- புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி (அகம்+குன்றி)
- மூக்கிற் கரியார் உடைத்து. (அதி.28 கூடாஒழுக்கம், 277)
- புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை (அகம்+தூய்மை)
- வாய்மையால் காணப் படும். (அதி.30 வாய்மை, 298)
- முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
- உற்ற துணர்வார்ப் பெறின். (அதி.71 குறிப்பறிதல், 708)
- முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
- அகநக நட்பது நட்பு. (அதி.79 நட்பு, 786)
- பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
- அகநட்பு ஒரீஇ விடல். (அதி.83 கூடாநட்பு, 830)
- =இடம் (வையகம், வானகம்)
- குறள் 101, 547.
- செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் (வையகம்)
- வானகமும் ஆற்றல் அரிது. (அதி.11 செய்ந்நன்றிஅறிதல், 101) (வானகம்)
- அகரம்=தமிழ் உயிர்முதலெழுத்து.
திருக்குறளின் வேறுபெயர்கள்:
|
- குறள் 1.
- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி (அகரம்)
- பகவன் முதற்றே உலகு. (அதி.1 கடவுள்வாழ்த்து, 1)
- அகல்= விரிவான.
- குறள் 25.
- ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
- இந்திரனே சாலும் கரி. (அதி.3 நீத்தார்பெருமை, 25)
- அகலம்= அகன்ற தன்மை.
- (அரணின் அடியகலம், தலையகலம்— பரிமேல்.)
- குறள் 743.
- உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்
- அமைவரண் என்றுரைக்கும் நூல். (அதி.75 அரண் 743)
- அகலாக்கடை=பெருகாதாயின், அதிகமாகாதுஇருந்தால்.
- குறள் 478.
- ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
- போகாறு அகலாக் கடை. (அதி.48 வலியறிதல், 478)
- அகலாத= பிரிவதற்கு முன்.
- குறள் 1226.
- மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
- மாலை மலரும்இந் நோய். (அதி.123 பொழுதுகண்டு இரங்கல், 1226)
- அகலாது= நீங்காமல்.
- குறள் 691.
- அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
- இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் (அதி.70 மன்னரைச்சேர்ந்தொழுகல்)
- அகழ்வாரை= தோண்டுவாரை.
- குறள் 151.
- அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
- இகழ்வாரைப் பொறுத்தல் தலை (அதி.16 பொறையுடைமை, 151)
- அகறலின்= நீங்குதலின், ("கூடமுடியப்பெறாத எல்லைக்கண்"— பரிமேல்.)
- குறள் 1325.
- தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
- அகறலின் ஆங்கொன்று உடைத்து (அதி.133 ஊடலுவகை, 1325)
- அகற்றும்= விரிக்கும்.
- குறள் 372.
- பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
- ஆகலூழ் உற்றக் கடை (அதி.38 ஊழ், 372)
- அகன்= மனம், நெஞ்சு. (அகம்>அகன்)
- குறள் 84, 92.
- அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து (அகன்+அமர்ந்து)
- நல்விருந்து ஓம்புவான் இல் (அதி.9 விருந்தோம்பல், 84)
- அகன்ற= விரிந்த. "எல்லாநூல்களினும் சென்ற"— பரிமேல்.
- குறள் 175.
- அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
- வெஃகி வெறிய செயின் (அதி.18 வெஃகாமை, 175)
- அகன்றார்= பெரியவர்களாக ஆனவர்கள்,'பெரியர்ஆயினார்'-பரிமேல்.
- குறள் 170.
- அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
- பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் (அதி.17 அழுக்காறாமை, 170)
அங்கணத்துள்
[தொகு]உள் இணைப்பான்கள்
[தொகு]- அ-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்-:அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்
- அங்கணத்துள்= சாக்கடையின் உள்ளே,
- "தூய்தல்லாத முற்றத்தின்கண்"— பரிமேல்.
- குறள் 720.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
- அங்கவியல்= அதிகாரம் 64 முதல் 95 முடிய.
- இது 'உறுப்பியல்' எனவும் வழங்கப்பெறும்.
- (வேர்: அங்கம், அகை>அங்கம், அகைத்தல்=கிளைத்தல்)
அசாவாமை
[தொகு]- அசாவாமை= தளர்ச்சியடையாமை. (வேர்: அசாவு=தளர்ச்சி).
- குறள் 611,
- இலக்கணக்குறிப்பு: எதிர்மறை தொழிற்பெயர். ‘அசாவு’ பகுதி+ ‘ஆ’ எதிர்மறை இடைநிலை+ ‘மை’ விகுதி
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (அதி 62.ஆள்வினையுடைமை)
- அசை= நுடங்கிய, துவள்கின்ற
- குறள் 1098.
அசையியற்கு உண்டுஓர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். (அதி 110.குறி்ப்பறிதல்)
- அசைஇ= சோம்பி.
- குறள் 1040
இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும். (அதி 104.உழவு)
- அசைவு= சோம்புதல்.
- குறள் 371, 594.
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் (அசைவு+இன்மை= அசைவின்மை.)
போகூழால் தோன்றும் மடி.(371) (அதி. 38.ஊழ்)
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா (அசைவு+இலா=அசைவிலா.)
ஊக்கம் உடையான் உழை. (594) (அதி. 60.ஊக்கமுடைமை)
- அச்சம்= நடுக்கம்.
- குறள் 146,501, 534, 1075.
(தீவினயச்சம்,அதி.107; இரவச்சம், அதி.107).
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.(146) (அதி. 15.பிறனில்விழையாமை)
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். (501) (அதி. 51.தெரிந்துதெளிதல்)
அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. (534) (அதி. 54.பொச்சாவாமை)
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. (1075) (அதி. 108.கயமை)
- அச்சு= வண்டியின்,தேரின் அச்சு, உருள் கோத்த மரம்
- குறள் 475, 667.
பீலிபெய் சாகாடும் அச்(சு)இறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். (475) (அதி. 48.வலியறிதல்)
உருவுகண்(டு) எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்(கு)
அச்சாணி அன்னார் உடைத்து. (667) [அச்சு+ஆணி=அச்சாணி] அதி. 67.வினைத்திட்பம்.
அஞர்
[தொகு]உள் இணைப்பான்கள்
[தொகு]- அ-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-
:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்- - அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்
- அஞர்= கொடுந்துயரம்.
- குறள் 1086, 1179.
- கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்(கு)அஞர்
செய்யலமன் இவள் கண். (1086) (அதி. 109.தகையணங்குறுத்தல்).
- கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்(கு)அஞர்
- வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். (1179) (அதி. 118.கண்விதுப்பழிதல்). (ஆர்+அஞர்=ஆரஞர்).
- வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
- அஞ்சப்படும்=நடுங்கத்தகும்
- குறள் 202, 824.
- தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (202) (அதி. 21.தீவினையச்சம்)
- தீயவை தீய பயத்தலான் தீயவை
- முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். (824) (அதி. 83.கூடாநட்பு).
- முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
- அஞ்சல்= நடுங்கவேண்டா.
- குறள் 1154.
- அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்(கு) உண்டோ தவறு. (1154) அதி. 116.பிரிவாற்றாமை).
அளித்து+அஞ்சல்=அளித்தஞ்சல்)
- அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
- அஞ்சற்க= நடுங்கவேண்டா.
- குறள் 882.
- வாள்போற் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. (882) (அதி. 89.உட்பகை).
- வாள்போற் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
- அஞ்சா= நடுங்காமல்
- குறள் 725.
- ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. (725) (அதி. 73.அவையஞ்சாமை.</br
அவை+அஞ்சா =அவையஞ்சா
- ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
- = நடுங்காத
- குறள் 500, 761, 762, 778.
- காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
வேளாண் முகத்த களிறு. (500) (அதி. 50. இடனறிதல்).
கண்+அஞ்சா=கண்ணஞ்சா.
- காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
- உறுப்பமைந்(து) ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. (761) (அதி. 77.பகைமாட்சி).
ஊறு+அஞ்சா=ஊறஞ்சா. - உலைவிடத்து ஊறஞ்சா வண்கன் தொலைவிடத்துத்
தொல்படைக்(கு) அல்லால் அரிது. 762) (அதி. 77.பகைமாட்சி).
ஊறு+அஞ்சா=ஊறஞ்சா. - உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர். (778) (அதி. 78.படைச்செருக்கு).
- உறுப்பமைந்(து) ஊறஞ்சா வெல்படை வேந்தன்
- அஞ்சாதவர்= நடுங்காதவர்
- குறள் 723.
- பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து) அஞ்சா தவர். (723) (அதி. 73. அவையஞ்சாமை).
- பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
- அஞ்சாது= நடுங்காமல்.
- குறள் 585.
- கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. (585) (அதி. 59.ஒற்றாடல்).
கண்+அஞ்சாது+யாண்டும்= கண்ணஞ்சாதியாண்டும்.
- கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
- அஞ்சாமை= திண்மை
- குறள் 382, 497
- அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு. (382) (அதி. 39. இறைமாட்சி).
- அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
- அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின். (497) (அதி. 50.இடனறிதல்).
- அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
- = எண்ணாது செய்துநிற்றல்.
- குறள் 428.
- அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (428) (அதி. 43.அறிவுடைமை).
- அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
- (அவையஞ்சாமை, அதி. 73)
- அஞ்சார்=நடுங்கமாட்டார்
- குறள் 201.
- தீவினை அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. (201) (அதி. 21.தீவினையச்சம்).
- தீவினை அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
- அஞ்சான்= நடுங்கமாட்டானாய்
- குறள் 686
- கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க(து) அறிவதாந் தூது. (686) (அதி. 69.தூது)
- கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
- =அஞ்சாதவன்
- குறள் 647.
- சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (647) (அதி.சொல்வன்மை).
- சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைை
|
- அஞ்சி= நடுங்கி.
- குறள் 44, 325, 680, 730, 741, 883.
- பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44). (அதி. 5.இல்வாழ்க்கை).
பழி+அஞ்சி=பழியஞ்சி.
- பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
- நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. (325) (அதி. 33.கொல்லாமை).
நிலை+அஞ்சி=நிலையஞ்சி; கொலை+அஞ்சி=கொலையஞ்சி.
- நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
- உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. (680) (அதி.68.வினைசெயல்வகை).
- உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
- உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். (730) அதி. 73. அவையஞ்சாமை).
களன்+அஞ்சி=களனஞ்சி
- உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
- ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்றுபவர்க்கும் பொருள். (741) (அதி. 75.அரண்)
- ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
- உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். (883) (அதி. 89.உட்பகை).
- உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
- அஞ்சுக=நடுங்குக.
- குறள் 882.
- வாள்போற் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போற் பகைவர் தொடர்பு. (882) (அதி. 89.உட்பகை).
- வாள்போற் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
- அஞ்சுதும்= அஞ்சாநின்றேம்,அஞ்சுகின்றோம்.?
- குறள் 1128.
- நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்(கு) அறிந்து. (1128) அதி. 113.காதற்சிறப்புரைத்தல்).
- நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
- அஞ்சுபவர்= நடுங்குபவர்கள்.
- குறள் 464, 906.
- தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா(டு) அஞ்சு பவர். (464) (அதி. 47.தெரிந்து செயல்வகை).
- தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
- இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார் தோளஞ்சு பவர். (906) (அதி. 91.பெண்வழிச்சேறல்).
தோள்+அஞ்சுபவர்=தோளஞ்சுபவர்.
- இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
- அஞ்சுபவர்க்கு= நடுங்குபவர்களுக்கு
- குறள் 726
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. (726) (அதி. 73.அவையஞ்சாமை).
- அஞ்சும்= நடுஙகும்
- குறள் 451, 863, 905, 1295
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். (451) (அதி. 46.சிற்றினஞ் சேராமை).
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. (863) (அதி. 87.பகைமாட்சி).
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். (905) (அதி. 91.பெண்வழிச்சேறல்).
அஞ்சும்+மற்று+எஞ்ஞான்றும்=அஞ்சுமற்றெஞ்ஞான்றும்.
பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரி(வு) அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் னெஞ்சு. (1295) (அதி.130.நெஞ்சொடு புலத்தல்).
- அஞ்சுமவன்= நடுங்குபவன்
- குறள் 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்(து)
அஞ்சு மவன்கற்ற நூல். (727) (அதி. 73.அவையஞ்சாமை).
- அஞ்சுவது= நடுங்கத்தகுவது?
- குறள் 366, 428.
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரு மவா. (366) (அதி. 37.அவாவறுத்தல்).
அஞ்சுவது+ஓரும்=அஞ்சுவதோரும். ஓரும்-அசைநிலை.
அஞ்சுவ(து) அஞ்சாமை பேதைமை அஞ்சுவ(து)
அஞ்சல் அறிவார் தொழில். (428) (அதி. 43.அறிவுடைமை).
- அஞ்சுவர்= நடுங்குவர்
- குறள் 201.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. (201) (அதி. 21.தீவினையச்சம்).
- அஞ்சுவார்= நடுங்குபவரை
- குறள் 729.
கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லார் அவையஞ்சு வார். (729) (அதி. 73.அவையஞ்சாமை).
அவை+அஞ்சுவார்-அவையஞ்சுவார்.
- அஞ்சுவான்= நடுங்குவான்
- குறள் 905.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். (905) (அதி. 91.பெண்வழிச் சேறல்).
அடக்கத்தை
[தொகு]- அடக்கத்தை= அடக்கிக்கொள்ளுதலை.
- குறள் 122.
- காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங்(கு) இல்லை உயிர்க்கு. (122) (அதி. 13.அடக்கமுடைமை).
- காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
- அடக்கம்= தன்னை அடக்கிக் கொள்ளுதல்
- குறள் 121.
- அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121) (அதி. 13.அடக்கமுடைமை).
- அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
- அடக்கல்= அடங்கச்செய்தல்.
- குறள் 126.
- ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து. (26). அதி. 13.அடக்கமுடைமை).
- ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
- அடங்க= தன்வசமாக.
- குறள் 123.
- செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (123) அதி. 13.அடக்கமுடைமை).
- செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
- அடங்கல்= தன்வசமாதல்.
- குறள் 130.
- கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130) (அதி. 13.அடக்கமுடைமை).
கற்று+அடங்கல்=கற்றடங்கல்.
- கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அடங்கா= அடங்கியொழுகாத.
- குறள் 834.
- ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல். (834) (அதி. 84.பேதைமை).
தான்+அடங்கா=தானடங்கா.
- ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
- அடங்காமை= அடங்கி நடக்காத தன்மை.
- குறள் 121.
- அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121) (அதி. 13.அடக்கமுடைமை).
- அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
- அடங்கியான்= அடங்கினவனது.
- குறள் 124.
- நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (124) (அதி. 13.அடக்குமுடைமை).
- நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
- அடல்= வெல்லுதல்.
- குறள் 893.
- கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. (893) (அதி. 90.பெரியாரைப் பிழையாமை).
- கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
- அடற்றகை= பகைமேற்சென்று தாக்குதல்.
- குறள் 768.
- அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையாற் பாடு பெறும். (768) (அதி.77.படைமாட்சி).
அடல்+தகை=அடற்றகை.
- அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
- அடி= தாள்.
- குறள் 3, 4. 10, 208, 544, 610, 1279.
- மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3) (அதி. 1.கடவுள் வாழ்த்து).மாண்+அடி=மாணடி.
- மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
- வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்(கு)
யாண்டும் இடும்பை இல. (4) (அதி. 1.கடவுள் வாழ்த்து).
இலான்+அடி=இலானடி.
- வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்(கு)
- பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10). (அதி. 1.கடவுள் வாழ்த்து).
- பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
- தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா(து) அடியுறைந் தற்று. (208). (அதி. 21.தீவினையச்சம்).
- தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
- குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (544) (அதி. 55.செங்கோன்மை).
- குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
- மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய(து) எல்லாம் ஒருங்கு. (610) (அதி. 61.மடியின்மை).
- மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
- தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. (1279) (அதி. 128.குறிப்பறிவுறுத்தல்).
- தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
- அடு= வெல்லும்.
- குறள் 567.
- கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். (567) (அதி. 57.வெருவந்தசெய்யாமை).
- கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
- = சமைத்த.
- குறள் 1065.
- தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த(து)
உண்ணலின் ஊங்கினிய(து) இல். (1065) (அதி. 107.இரவச்சம்).
- தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த(து)
- = பதப்படுத்தப்பட்ட
- குறள் 1090.
- உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. (1090) (அதி. 109.தகையணங்குறுத்தல்).
- உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போற்
- அடுக்கி=மேன்மேலாகி.
- குறள் 625.
- அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். (625) (அதி. 63.இடுக்கணழியாமை).
- அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
- அடுக்கிய= தொடர்ந்த.
- குறள் 525, 954, 1005.
- கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சூழப் படும். (525) (அதி. 53.சுற்றந்தழால்).
- கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
- அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். (954) (அதி. 96.குடிமை).
- அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
- கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க்(கு) அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். (1005) (அதி. 101.நன்றியில்செல்வம்).
- கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க்(கு) அடுக்கிய
- அடுங்காலை= கொல்லும்பொழுது
- குறள் 799.
- கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். (799) (அதி. 80.நட்பாராய்தல்).
- கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
- அடுங்கால்= துன்பம் செய்யும்போது.
- குறள் 1166.
- இன்பங் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. (1166) (அதி. 117.படர்மெலிந்திரங்கல்).
அஃது+அடுங்கால்=அஃதடுங்கால்.
- இன்பங் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
- அடுத்த= மடங்குகளில் (பத்தடுத்த)
- குறள் 450, 817.
- பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். (450) (அதி. 45.பெரியாரைத் துணைக்கோடல்).
பத்து+அடுத்த=பத்தடுத்த.
- பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
- நகைவகையர் ஆகிய நட்பிற் பகைவராற்
பத்தடுத்த கோடி யுறும். (817) (அதி. 82.தீநட்பு).
பத்து+அடுத்த=பத்தடுத்த.
- நகைவகையர் ஆகிய நட்பிற் பகைவராற்
- அடுத்தது= நெருங்கிய பொருளின், அருகே உள்ளபொருளினுடைய.
- குறள் 706.
::அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். (706) (அதி. 71.குறிப்பறிதல்).
- அடுத்து=மேன்மேலாகி;
- குறள் 621.
- இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ(து) அஃதொப்ப தில். (621) (அதி. 63.இடுக்கணழியாமை).
(அடுத்து+ஊர்வது=அடுத்தூர்வது).
- இடுக்கண் வருங்கால் நகுக அதனை
- = வினையைத் தொடங்கி, செயலைத்தொடங்கி:
- குறள் 867.
- கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை. (867) (அதி. 87.பகைமாட்சி).
(அடுத்து+இருந்து=அடுத்திருந்து).
- கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
- = பற்றாகக் கொடுத்து;
- குறள் 1030.
- இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. (1030) (அதி. 103.குடிசெயல்வகை).
(அடுத்து+ஊன்றும்=அடுத்தூன்றும்).
- இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
- அடுப=வெல்வர்
- குறள் 493.
- ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்றிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். (493) (அதி. 50.இடன்றிதல்)
- ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்றிந்து
- அடும்= அழிக்கும், தோற்கடிக்கும்.
- குறள் 495.
- நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. (495) (அதி. 50.இடன்றிதல்).
- நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
- அடைக்கும்= மூடுகின்ற
- குறள் 38,71.
- வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். (38) (அதி. 4.அறன்வலியுறுத்தல்.
(வழி+அடைக்கும்=வழியடைக்கும்).
- வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (71) (அதி. 8.அன்புடைமை).
(அடைக்கும்+தாழ்=அடைக்குந்தாழ்).
- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
- அடையாவாம்=சேரமாட்டா, சாரமாட்டா.
- குறள் 939.
- உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயம் கொளின். (939) (அதி. 94.சூது).
- உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென் றைந்தும்
- அட்டிய= வார்த்த
- குறள் 1093.
- நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். (1093) (அதி. 110.குறிப்பறிதல்).
- நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
அணங்கு
[தொகு]- அணங்கு=காமத்தால் உயிர்வாங்கும் தெய்வமகள், மோகினி.
- குறள் 918, 1081, 1082. (தகையணங்குறுத்தல், அதி. 109)
- ஆயும் அறிவினர் அல்லார்க்(கு) அணங்(கு)என்ப
மாய மகளிர் முயக்கு. (918) (அதி. 92.வரைவின்மகளிர்).
- ஆயும் அறிவினர் அல்லார்க்(கு) அணங்(கு)என்ப
- அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. (1081) (அதி. 109.தகையணங்குறுத்தல்).
- அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
- நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. (1082) (அதி. 109.தகையணங்குறுத்தல்).
(தாக்கு+அணங்கு=தாக்கணங்கு).
- நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
அணி= நகை, அணிகலம்
- குறள் 95, 701, 1014.
- பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்(கு)
அணியல்ல மற்றுப் பிற. (95) (அதி. 10.இனியவைகூறல்).
- பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்(கு)
- கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. (701) (அதி. 71.குறிப்பறிதல்).
(வையக்கு+அணி=வையக்கணி).
- கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
- அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்(கு) அஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014) (அதி. 102.நாணுடைமை).
- அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்(கு) அஃதின்றேற்
- =அழகு
- குறள் 115, 118;
- கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (115) (அதி. 12.நடுவுநிலைமை).
(சான்றோர்க்கு+அணி=சான்றோர்க்கணி).
- கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
- சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. (118) (அதி. 12.நடுவுநிலைமை)
(சான்றோர்க்கு+அணி=சான்றோர்க்கணி).
- சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
- =அணிதல்
- குறள் 1089.
- பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்(கு)
அணியெவனோ ஏதில தந்து. (1089) (அதி. 109.தகையணங்குறுத்தல்).
- பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்(கு)
அணியும்= புனையாநிற்கும்
- குறள் 978
- பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. 9978) (அதி. 98.பெருமை).
(அணியும்+ஆம்=அணியுமாம்).
- பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணுகாது= நெருங்காமல்
- குறள் 691.
- அகலா(து) அணுகா(து) தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (691) (அதி. 70.மன்னரைச்சேர்ந்தொழுகல்).
- அகலா(து) அணுகா(து) தீக்காய்வார் போல்க
அண்ணாத்தல்= வாய்திறத்தல், அங்காத்தல்.
- குறள் 255.
- உண்ணாமை உள்ள(து) உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா(து) அளறு. (255) (அதி. 26.புலான்மறுத்தல்).
- உண்ணாமை உள்ள(து) உயிர்நிலை ஊனுண்ண
அதர்
[தொகு]உள் இணைப்பான்கள்
[தொகு]- அ-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்-:அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்
அதர்= வழி- குறள் 594.
அதற்கு= அதனுக்கு
- குறள் 391, 518, 802, 1124, 1330.
- கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391) (அதி. 40.கல்வி).
- கற்க கசடறக் கற்பவை கற்றபின்
- வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். (518) (அதி. 52. தெரிந்துவினையாடல்).
(அதற்கு+உரிய=அதற்குரிய).
- வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
- நட்பிற்(கு) உறுப்பு கெழுதகைமை மற்றதற்(கு)
உப்பாதல் சான்றோர் கடன். (802) (அதி. 81.பழைமை).
(மற்று+அதற்கு=மற்றதற்கு).
- நட்பிற்(கு) உறுப்பு கெழுதகைமை மற்றதற்(கு)
- வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து. (1124) அதி. 113.காதற்சிறப்புரைத்தல்).
அதற்கு+அன்னள்=அதற்கன்னள்)
- வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
- ஊடுதல் காமத்திற்(கு) இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். (1330) (அதி. 133.ஊடலுங்கை).
(அதற்கு+இன்பம்=அதற்கின்பம்).
- ஊடுதல் காமத்திற்(கு) இன்பம் அதற்கின்பம்
அதன்= அதனுடைய
- குறள் 60,490, 773, 1038, 1289.
- மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (60) (அதி. 6.வாழ்க்கைத்துணைநலம்).
(மற்று+அதன்=மற்றதன்).
- மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
- கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து. (490) (அதி. 49.காலமறிதல்).
- கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
- பேராண்மை என்ப தறுகண்ஒன்(று) உற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. (773) (அதி. 78.படைச்செருக்கு).
(மற்று+அதன்=மற்றதன்).
- பேராண்மை என்ப தறுகண்ஒன்(று) உற்றக்கால்
- ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (1038) (அதி. 104.உழவு).
(நன்று+அதன்=நன்றதன்).
- ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
- மலரினும் மெல்லிது காமம்
சிலரதன் செவ்விதலைப்படு வார். (1289) (அதி. 129.புணர்ச்சிவிதும்பல்).
(சிலர்+அதன்=சிலரதன்).
- மலரினும் மெல்லிது காமம்
அதனால்= அதன்காரணமாக
- குறள் 642, 1031.
- ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (642) (அதி. 65.சொல்வன்மை).
- ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
- சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031) (அதி. 104.உழவு).
- சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம் அதனால்
அதனான்= அதனால்
- குறள் 303
- மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். (303) (அதி. 31. 31.வெகுளாமை).
- மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
அதனின்= அதனின்றும்- குறள் 122, 152, 302, 644, 1158, 1166.
- காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு (122) (அதி. 13.அடக்கமுடைமை)
அதனின்+ஊங்கு+இல்லை=அதனினூஉ ங்கில்லை.
- காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
- பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. (152). (அதி. 16.பொறையுடைமை).
(அதனின்+உம்=அதனினும்).
- பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
- செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனிற் றீய பிற. (302) (அதி. 31.வெகுளாமை).
(இல்+அதனின்+தீய=இல்லதனிற்றீய).
- செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
- திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளும் அதனினூஉங் கில். (644) (அதி. 65.சொல்வன்மை).
அதனின்+ஊங்கு+இல்= அதனினூஉங்கில்)
- திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
- இன்னா(து) இனனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா(து) இனியார்ப் பிரிவு. (1158) (அதி.116. பிரிவாற்றாமை).
(அதனின்+உம்).
- இன்னா(து) இனனில்லூர் வாழ்தல் அதனினும்
- இன்பங் கடன்மற்றுக் காமம் அஃதடுங்காற்
துன்பம் அதனின் பெரிது. (1366). (அதி. 117.படர்மெலிந்திரங்கல்).
- இன்பங் கடன்மற்றுக் காமம் அஃதடுங்காற்
அதனை= அதை
- குறள் 32, 152, 262, 495, 517, 621, 1141, 1143.
- அறத்தினூஉங்(கு) ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலி னூஉங்கில்லை கேடு. (32). (அதி. 4.அறன்வலியுறுத்தல்).
- அறத்தினூஉங்(கு) ஆக்கமும் இல்லை அதனை
- பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. (152). (அதி. 16.பொறையுடைமை).
- பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
- தவமும் தவமுடையார்க்(கு) ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது. (262). (அதி. 27.தவம்).
(அவம்+அதனை=அவமதனை).
- தவமும் தவமுடையார்க்(கு) ஆகும் அவமதனை
- நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. (495) (அதி. 50.இடனறிதல்).
- நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
- இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (517) (அதி. 52.தெரிந்துவினையாடல்).
- இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
- இடுக்கண் வருங்கால் நகுக அதனை<br> அடுத்தூர்வ(து) அஃதொப்ப(து) இல். (621) (அதி. 63.இடுக்கணழியாமை).
- இடுக்கண் வருங்கால் நகுக அதனை<br> அடுத்தூர்வ(து) அஃதொப்ப(து) இல். (621) (அதி. 63.இடுக்கணழியாமை).
- அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால். (1141) (அதி. 115.அலரறிவுறுத்தல்).
- அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
- உறாஅதோ ஊரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (1143) (அதி. 115.அலரறிவுறுத்தல்).
(கௌவை+அதனை= கௌவையதனை).
- உறாஅதோ ஊரறிந்த கௌவை யதனைப்
அதன்கண்= அதனிடத்தில்
- குறள் 472.
- ஒல்வ(து) அறிவ(து) அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். (472) (அதி. 48.வலியறிதல்).
அறிந்து+அதன்கண்+தங்கி=அறிந்ததன்கண்தங்கி)
- ஒல்வ(து) அறிவ(து) அறிந்ததன் கண்தங்கிச்
அதி= மிகுதியான
- குறள் 636.
- மதிநுட்பம் நூலோடு உடையார்க்(கு) அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை. (636) (அதி. 64.அமைச்சு).
- மதிநுட்பம் நூலோடு உடையார்க்(கு) அதிநுட்பம்
அதிர= நடுங்கும்படி
- குறள் 429.
- எதிரதாக் காக்கும் அறிவினார்க்(கு) இல்லை
அதிர வருவதோர் நோய். (429) (அதி. 43.அறிவுடைமை).
- எதிரதாக் காக்கும் அறிவினார்க்(கு) இல்லை
- அது= அஃது
- குறள் 36, 45, 74, 165, 231, 332,333, 362, 364, 452,
- 477, 528, 533, 536, 570, 596, 781, 901, 948, 985,
- 996, 1144, 1164, 1284, 1302, 1327.
- =உடைய
- குறள் 1075 (பண்புப்பொருளில்)
- குறள் 1107 (பிறிதின் கிழமைப்பொருளில்)
- குறள் (பண்புப்பொருளில்) 5, 6, 21, 22, 23, 25, 28, 29, 37, 51,
63, 65, 66, 68, 80, 83, 87,
- —105, 106, 107, 114, 117, 124, 130, 134, 150, 158,
- 169, 186, 188, 190, —225, 226, 256, 266,
- 269, 271, 275, 298, —307, 311, 312, 315, 343, 350,
360, 373, 374, —404, 405, 435, 436,
- 441, 450, 452, 455, 457, 458,459,471, 473, 479,
486, 498, —501, 508, 510, 514, 519, 531,
- 535, 539, 567, 572, 595, —600, 612, 614, 615, 637,
641, 646, 651, 656, 657, 661, 662, 665,
- 670, 674, 67, 681, 682, 683, 684, 688, —709, 711,
712, 713, 714, 717, 743, 744, 745, 755,
- 758, 759, 773, 777, 782, 783, 798, 799, —800, 806,
808, 809, 811,812, 814, 815, 816, 818,
- 819, 820, 821, 822, 827, 839, 842, 856, 862, 866,
867, 872, 873, 874, 880, 881, 882, 887,
- 890, 891, —902, 907, 908, 909, 911, 912, 913, 914,
915, 916, 918, 930, 947, 948, 949, 959,
- 970, 971, 972, 975, 982, 985, 994, 997, —1000,
1003, 1010, 1011, 1015, 1020, 1051, 1089,
- 1097, 1107, 1125, 1139, 1142, 1151, 1155, 1169,
1181, 1184, 1186, 1209, 1230, 1232, 1235,
- 1240, 1254, 1258, 1265, 1282, 1285, 1289, —1305.
- குறள் (சினைப்பொருளில்)
- குறள் (ஒன்றன் கூட்டப்பொருளில்)
- குறள் (பிறிதின் கிழமைப் பொருளில்)
அத்தால்= அதால் (அதால்— விகாரம்/ 'பெற்றத்தால்') /அதனால்.
- குறள் 524.
- சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். (574) (அதி. 53.சுற்றந்தழால்).
(பெற்றதால் =பெற்றத்தால்- விரித்தல் விகாரம்)
- சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
அதூஉம்= அதுவுங்கூட
- குறள் 230, 546.
- சாதலின் இன்னாத(து) இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. (230) (அதி. 23.ஈகை).
(இனிது+அதூஉம்).
- சாதலின் இன்னாத(து) இல்லை இனிததூஉம்
- வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா(து) எனின். (546) (அதி. 55.செங்கோன்மை)
கோல்+அதூஉம்=கோலதூஉம்).
- வேலன்று வென்றி தருவது மன்னவன்
அந்தணர்
[தொகு]- அந்தணர்= அழகிய தட்பத்தை உடையவர், துறவிகள்
- குறள் 30.
- =பார்ப்பார்
- குறள் 30.
- அந்தணன்= கடவுள்
- குறள் 8.
அம்
[தொகு]- அம்= அழகு
- குறள் 1107
- அமர்= போர், சமர், சண்டை.
- குறள் 814,1027, 1083, 1125.
- அமரர்= தேவர், சாகாதவர், இறப்பி்ல்லாதவர்,
- மரணமில்லாதவர்.
- குறள்: 121.
- அமராமை= விரும்பாமை, ஆசைப்படாமை.
- குறள் 529.
- அமர்த்தன= மாறுபட்டன.
- குறள் 1084.
- அமர்ந்த== பொருந்திய
- குறள் 75.
- அமர்ந்து= விரும்பி
- குறள் 84, 92, 93.
- அமிழ்தம்= அமுதம், தேவாமிர்தம், சாவாமருந்து
- குறள் 11.
- அமிழ்தின்= அமுதத்தினால்
- குறள் 1106.
- அமிழ்து= அமுதம், சாவாமருந்து
- குறள் 720
- அமை= மூங்கில்
- குறள் 906
- அமைகலா= வருந்துகின்ற
(அமைதல்= மனவருத்தமின்றி இருக்கும்தன்மை)
- குறள் 219
- அமைச்சு= மந்திரி, அமைச்சன், உழையன்,
- அரசனின் ஆறு அங்கங்களுள் ஒன்று,
- அமைச்சனது தன்மை.
- குறள் 381, 631, 632, 633, 634.
- (அமைச்சியல்: அதி.64-73).
- அமைந்த= பொருத்தமான
- குறள் 635
- = மிகுந்த
- குறள் 900
- அமைந்தக்கண்ணும்= அமைந்தாலும்,
- தானே வந்து சேர்ந்தாலும்.
- குறள் 606
- அமைந்தார்= ஏற்புடையார், காதலர்,
- 'ஆளுதற்கு அமைந்தார்'-பரிமேல்.
- குறள் 1155.
- அமைந்தின்று= அமையவி்ல்லை
- குறள் 340
- அமைந்து= பொருந்தி
- குறள் 118, 474
- =நிறைந்து
- குறள் 761, 1302
- அமையல= அமைதியடையமாட்டா,
- தணிவு எய்துகின்றல
- குறள் 1283.
- அமையா== முடியா
- குறள் 961
- அமையாக்கடை== உடன்படாதபோது
- குறள் 803
- அமையாத= முடியாத
- குறள் 682
- அமையாதவரை= பொருந்தாதவரை,
- மேவாதாரை, பகைவரை.
- குறள் 825
- அமையாது= முடியாது
- குறள் 20
- அமையும்= உண்டாகும், உண்டாம்
- குறள் 298
- = போதும்
- குறள் 708.
- = ஏற்புடைத்து
- குறள் 1193
- அமைவர்= மேவுவர்
- குறள் 580
- அமைவு= மேவுதல், நிறைதல்
- குறள் 740
- = மிகுதி
- குறள் 743
- =பொருத்தம்
- குறள் 863
- = போதும் என்றுஅமைதல்
- குறள் 1178
- அம்பின்= அம்பால்
- குறள் 597
- அம்பினில்= அம்பை ஏந்துவதை விட
- குறள் 772.
அயர்கம்
[தொகு]- அயர்கம்=செய்வோம்
- குறள் 1268.
அரங்கு
[தொகு]உள் இணைப்பான்கள்
[தொகு]- அ-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்-:அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்
- அரங்கு=சதுக்கம், சதுரங்க ஆட்டப்பலகை
- குறள் 401.
- அரசருள்=வேந்தர்களுள், மன்னர்களுள்
- குறள் 381.
- அரசு== வேந்தன், மன்னன்
- குறள் 384, 385.
- அரசியல், அதிகாரம் 39- 63.
- அரண்= கோட்டை. அதி. 75.
- குறள் 381,421,492, 534, 741, 742,
- 743, 744, 745, 746,747, 748, 749, 750
- அரம்=அராவும் கருவி
- குறள் 567, 888, 997.
- அரிது=அருமை, உண்டாகாது
- குறள் 7, 8, 16, 29, 101, 177, 213,
- 227, 235, 248, 377, 419, 443, 499,
- 503, 606, 647, 693, 745, 762, 823,
- 843, 886, 1049, 1153, 1155, 1156,
- 1180
- = அருமையானதை
- குறள் 1160
- = அரியதாய்
- குறள் 1276
- அரிந்து=அறுத்து
- குறள் 1304
அரியசெய்திகள்-1"திருக்குறளை முதன்முதலில் ஓலைச்சுவடியிலிருந்து அச்சேற்றியவர்கள் இரண்டுபெரும்பேராசிரியர்கள். முதற்பேராசிரியர் திருத்தணிகை விசாகப்பெருமாளையர். அடுத்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர். இருவரும் இருந்து ஒப்புநோக்கித்தான் எழுத்துவிடாமல் திருக்குறளை அச்சியற்றி நமக்குக் கொடுத்தார்கள். அந்தத் தொண்டினை அவர்கள் செய்திராவிடில், பல தமிழ்ச்சுவடிகள் அழிந்ததுபோல இதுவும் அழிந்திருக்கக்கூடும். அவர்கள் வள்ளுவர் வரலாற்றை ஒப்பவில்லை." கி.ஆ.பெ.விசுவநாதம்
|
- அரிய=அருமையானவை
- குறள் 537, 781.
- = அருமையானவைகளை
- குறள் 26, 489, 503.
- = அரியவாயின
- குறள் 664.
- அரியது=பெறமுடியாதது
- குறள் 489, 747.
- அரியர்=சிலராவார்
- குறள் 723.
- =மீதூரமுடியாதவர்
- குறள் 1138.
- அரியவற்றுள்=அருமையானவைகளுள்
- குறள் 443
- அரியவை=அருமையானவற்றை
- குறள் 693.
- அரிவை=அழகிய மடந்தை
- குறள் 1107.
- அரு=அரியதான
- குறள் 483, 631, 847.
- அருந்தியது=உண்டதை, சாப்பிட்டதை
- குறள் 942
- அருப்பு=கிளைத்தல்
- குறள் 522.
- அரும்=அருமையான, முடியாத
- குறள் 198, 210, 462, 565, 732.
- அருமை=கிடைக்காததன்மை
- குறள் 611, 743, 975, 1142.
- அரும்பி=தோன்றி
- குறள் 1223
- =மொட்டாகி
- குறள் 1227.
- அருள்=இரக்கம், கருணை
- குறள் 176, 241, 242,243, 244, 245, 246,
247, 248, 251, 252, 254, 285, 757, 914, 938.
- அருளுடைமை அதி. 25
- அருளொடு=இரக்கத்தோடு
- குறள் 755.
- அருளாதான்=இரங்காதவன்
- குறள் 249.
- அரோ=ஈற்றசை
- குறள் 1153, 1256.
அல்
[தொகு]- அல்=அல்லாததாகிய
- குறள் 301.
அரியசெய்திகள்-2வள்ளுவர் வரலாறு எது?என்று அறிய புலவர்கள் அனைவரும் கூடினார்கள். கூடியநகரம் சென்னை; கூடிய இடம் பச்சையப்பன் கல்லூரி; கூடியநாள் 1929, மார்ச் 11. தலைமை வகித்தவர் மகாமகோபத்தியாய உ.வே.சாமிநாதய்யர். வந்திருந்த புலவர்கள் 530-க்கு மேற்பட்டவர்கள். பேசியவர்கள் 11 பேர். பத்துப்பேர் பேசியுங்கூட எவரும் சரி என்று ஒப்பவில்லை. பதினொன்றாவதாகப் பேசியவருடைய பேச்சுத்தான் வள்ளுவருடைய உண்மையான வரலாறாக இருக்கவேண்டுமென்று கூட்டத்தினர் ஒப்பினர். கூட்டத்தினர் என்ன? தலைமை வகித்திருந்த உ.வே.சாமிநாதய்யர் அவர்களே எழுந்திருந்து இதுதான் சரி என்று பேசியவரை நெஞ்சோடு நெஞ்சம் இறுகத் தழுவிக்கட்டிக்கொண்டு மக்களுக்கு அறிவித்தார். அப்புறம், வசிஷ்டரே இராஜரிஷி என்று ஒப்புக்கொண்ட பிறகு, உங்களுக்கும் நமக்கும் அதிலே கருத்துவேறுபாடு இருக்கமுடியுமா? ஒப்பவேண்டியதுதான். அப்படிப்பேசிய பெருமகன் பசுமலைப் பேராசிரியர் சோமசுந்தரபாரதி." கி.ஆ.பெ.விசுவநாதம்
|
- அலகு= கதிர், நெற்கதிர்
- குறள் 1034.
- அலகை= பேய்
- குறள் 850
- அலந்தாரை= துன்புற்றாரை
- குறள் 1303.
- அலர்= கௌவை, வதந்தி
- குறள் 1141, 1142, 1146, 1149.
- அதி. 115, அலரறிவுறுத்தல்.
- அலை= வருத்தல்
- குறள் 551.
- அலைக்கும்= வருத்தும்
- குறள் 735.
- அல்ல= அவையல்லன
- குறள் 95, 115, 299, 400, 739, 1012.
- = அவையல்லாதவைகளை
- குறள் 116, 150, 157, 173, 181, 466, 700, 944, 962;
- = அல்லாதவை
- குறள் 376
- = அல்லாதவையாகிய
- குறள் 337.
- அல்லதன்கண்=அல்லாத்தனிடத்தில்
- குறள் 832
- அல்லது= அஃதல்லாதது
- குறள் 254
- = அல்லாத்தை
- குறள் 108, 795.
- = அல்லாமல்
- குறள் 231, 491, 570, 710, 751, 951, 1090, 1131, 1159, 1168.
- அல்லம்= அல்லாதவராவோம்
- குறள் 1209.
- அல்லர்= அவரில்லை
- குறள் 143, 880, 926, 973, 1300.
- அல்லல்= துன்பம்
- குறள் 245, 379, 555, 626, 787, 936, 938, 1160, 1301, 1303.
- அல்லவர்= அல்லாதவர்
- குறள் 973
- அல்லவரை= அல்லாதவரை
- குறள் 751
- அல்லவர்கண்= அல்லாதவரிடத்தில்
- குறள் 977
- அல்லவற்றை= அல்லாதவைகளை
- குறள் 351.
- அல்லவை= அல்லாத பொருள்கள்
- குறள் 96
- = தீவினைகளை
- குறள் 164, 182, 246, 274, 384, 551;
- = பிறவற்றை
- குறள் 1286
- அல்லற்கண்= துன்பத்தில்
- குறள் 798
- அல்லற்படுப்பதூஉம்=துன்பப்படுத்துவதும்
- குறள் 460
- அல்லனேல்= அல்லாதவனாயின்
- குறள் 386
- அல்லாதவர்க்கு= அல்லாதவரோடு
- குறள் 882.
- அல்லார்= அல்லாதவர்
- குறள் 266, 419, 973
- = அல்லாதவரோடு
- குறள் 822
- அல்லார்க்கு= அல்லாதவர்க்கு
- குறள் 726, 918, 999.
- அல்லார்கண்= அல்லாதவரிடத்தில்
- குறள் 986
- அல்லார்முன்= அல்லாதவர் முன்னே
- குறள் 720
- அல்லால்= அன்றி
- குறள் 7, 8, 16, 233, 235, 377, 406, 497, 515, 752, 1095, 1188.
- அல்லாவார்= அமைதியிழக்கமாட்டார்
- குறள் 593
- அல்லை= நீஇல்லை
- குறள் 1221
- அல்வழி= ஆகாதபோது
- குறள் 1299, 1300.
அவம்
[தொகு]- அவம்=
- பயனில்லாத முயற்சி
- குறள் 262;
- = கேடு
- குறள் 266
- அவர்= அந்தமனிதர்
- குறள் 63, 65, 109, 314, 506, 1051, 1071, 1073,
- 1152, 1155, 1156, 1177, 1178, 1182, 1183, 1184,
- 1188, 1204, 1244, 1261, 1291, 1293, 1297, 1298,
- 1301.
- அவரவர்= அவரவருடைய
- குறள் 114, 469.
- அவர்வயின் விதும்பல்.அதி. 127
- அவரின்= அவரைக்காட்டிலும்
- குறள் 1074
- அவருள்= அவர்களுக்குள்ளே
- குறள் 125.
- அவரை= அவரை, அவர்தம்மை.
- குறள் 1236, 1292.
- அவரொடு= அவருடன்
- குறள் 1206.
- அவர்க்கு= அவருக்கு
- குறள் 1291, 1321.
- அவர்மாட்டு= அவரிடத்தில், அவர்திறத்தில்.
- குறள் 1199
- அவலம்= கவலை, துன்பம்
- குறள் 1072
- அவள்= அந்தப்பெண்
- குறள் 1093, 1279
- அவற்றின்= அவைகளின்
- குறள் 875
- அவற்றுள்= அவைகளுள்
- குறள் 61, 504
- அவனை= அம்மனிதனை
- குறள் 518, 547, 647, 958
- அவனின்= அவனைக்காட்டிலும்
- குறள் 526
- அவன்கண்= அவனிடத்தில்
- குறள் 517
- அவா= ஆசை, விருப்பம்
- குறள் 35, 361, 364, 365, 366, 368, 369,
- 370, 513, 1075, 1310.
- அதிகாரம், 37. அவாவறுத்தல்.
- அவாம்= விரும்புகின்ற, விழைகின்ற
- குறள் 215, 681.
- அவாய்= விரும்பி
- குறள் 643
- அவாவறுத்தல்,அதிகாரம், 37.
- அவாவினை= விருப்பத்தை
- குறள் 367
- அவி= வேள்வி, வேள்வித்தீயி்ல் சொரியப்படுவது.
- குறள் 259.
- அவித்தான்= அடக்கியவன், அறுத்தவன்.
- குறள் 6, 25.
- அவித்து= தவிர்ந்து
- குறள் 694.
- அவியின்= இறந்தாலும்
- குறள் 420
- அவிர்= விளங்குகின்ற
- குறள் 1117
- அவை= அவைகள்
- குறள் 658, 787, 1105
- =கழகம், மன்றம்
- குறள் 711, 713, 723, 725, 726, 727, 729.
- நாடகமேடை
- குறள் 332
- அவையறிதல், அதி.73
- அவையஞ்சாமை, அதி.74
- அவையத்து= அவையில், சபையில்
- குறள் 67
- அவையவை=அடுக்குத்தொடர்
- குறள் 1105.
- அவையறியார்=
- குறள் 713.
- அவையுள்= மன்றத்தில்
- குறள் 719, 728
- அவ்வது= அப்படியே
- குறள் 426
- அவ்வித்து= பொறாமல், பொறுக்கமுடியாமல்
- குறள் 167
- அவ்விய= பொறாமையுடைய
- குறள் 169
அழ
[தொகு]உள் இணைப்பான்கள்
[தொகு]- அ-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்-:அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்
- அழ= பிறர் அழும்படியாக, இரங்கும்படி
- குறள் 659. 795
- அழல்= தணல், நெருப்பு
- குறள் 1228
- அழி= கெடுக்கும் (அழிபசி)
- குறள் 226
- = கேடுகள் (அழிவந்த)
- குறள் 807
- அழிக்கல்= கெடுத்தல்
- குறள் 934
- அழிக்கும்= கெடுக்கும்
- குறள் 934
- அழிதல்= கெடுதல்
- கண்விதுப்பழிதல், அதி.118
- உறுப்புநலனழிதல், அதி.124
- நிறையழிதல், அதி.126
- குறள்
- அழித்து= கெடுத்து
- குறள் 359, 775, 1317
- அழிந்துவிடும்= கெட்டுப்போகும், அழிந்தேபோய்விடும்
- குறள் 498
- அழிப்பது= அழிவைச்செய்வது
- குறள் 744
- அழிய= கெட
- குறள் 968
- அழியாமை= இடுக்கண்அழியாமை, அதி.63
- அழிவது= கெடுவது (அழிவதூஉம்)
- குறள் 461
- அழிவினவை= கேட்டினைத்தருவன
- குறள் 787
- அழிவின்= கேட்டினையுடைய
- குறள் 787
- அழிவின்கண்= கேடுவந்தபொழுது
- குறள் 787, 876
- அழிவு= கேடு
- குறள் 625, 764
- அழீஇ= அழித்து
- குறள் 182
- அழுக்கறுப்பான்= பொறாமைப்படுபவன்
- குறள் 163, 166
- அழுக்கற்று=பிறர்மேல்பொறாமைப்பட்டு?
- குறள் 170
- அழுக்காறாமை=அதி. 17
- (=பொறா8மையில்லாமை)
- அழுக்காறு= பொறாமை
- குறள் 35, 135, 161, 165, 167, 168
- அழுக்காற்றின்=பொறாமையினின்றும்
- குறள் 162
- = பொறாமையால்
- குறள் 164
- அழுத= அழுத, புலம்பிய
- குறள் 555, 828
- அழுதாள்=புலம்பினாள், அழுதாள்
- குறள் 1317, 1318
- அழுந்தும்= ஆழ்ந்துபோவதற்கான, அமிழ்ந்துபோகும்?
- குறள் 835
அளக்கும்
[தொகு]- அளக்கும்= அளக்கின்ற
- குறள் 710
- அளந்தான்= அளந்தவன், கடவுள்/திருமால்
- குறள் 610
- அளப்பது= அளக்கும் கருவி
- குறள் 796
- அளவளாவு= அளவளாவுதல்? மனம்விட்டுப்பேசல்
- குறள் 523
- அளவறிந்தார்= அளவறிந்து வாழ்கின்றவர் <களவறிந்தார் 288>
- குறள் 288
- அளவில்= எல்லைக்கண்
- குறள் 1187
- அளவினான்= அளவுகடக்காத, வரையறையோடு கூடிய
- குறள் 574
- அளவின்கண்= அளத்தலாகிய நெறியின்கண்
- குறள் 286
- அளவு= வரையறை
- குறள் 224, 474, 848, 943, 947, 949;
- = எல்லை
- குறள் 283, 477, 478, 479;
- = அளத்தல்
- குறள் 287, 288, 289;
- = அளவைநூல், தருக்கசாத்திரம்
- குறள் 725.
- அளறு= நரகம், நிரயம்
- குறள் 255, 835, 919.
- அளாவிய துழாவிய
- குறள் 64
- அளாவு= கேட்டல், உசாவுதல்
- குறள் 523.
- அளி= முகமலர்ச்சி, கருணை, தலையளி
- குறள் 390, 1192, 1322.
- அளிக்க= நலிவுவராமல் காக்க
- குறள் 387.
- அளிக்கும்= அன்புடன் காட்டுகின்ற
- குறள் 1192
- = தலையளிசெய்கின்ற
- குறள் 1321
- அளித்து= அன்புகாட்டி
- குறள் 1154
- = இரக்கத்தையுடையது
- குறள் 1168, 1256
- அளியர்= அன்புமிக்கவர்
- குறள் 1138.
- அளைஇ= கலந்து
- குறள் 91.
- அள்ளி= அள்ளிக்கொண்டு, கைந்நிறைய முகந்து
- குறள் 1187
- அள்ளிக்கொள்வற்று= அள்ளிக்கொள்வதுபோன்றது
- குறள் 1187.
அற
[தொகு]உள் இணைப்பான்கள்
[தொகு]- அ-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்-:அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்
- அற= நீங்க
- குறள் 184, 391, 717, 845;
- = உரித்தாக
- குறள் 268
- =முழுக்க முழுக்க, முற்றிலும், முழுவதும்
- குறள் 465
- அறத்தான்=நல்வினையால், நற்செயலால்
- குறள் 39
- அறத்திற்கு=நல்வினைக்கு
- குறள் 76, 543
- அறத்தின்=நல்வினையைக்காட்டிலும்
- குறள் 31, 32
- அறத்தாறு=நல்வினை
- குறள் 37
- அறத்தாற்றின்= அறவழியில், நல்லவழியில்
- குறள் 46
- அறத்து= அறத்தினது, அறத்தினுடைய
- குறள் 37, 46.
- அறம்= = நல்வினை, நற்செயல்
- குறள் 23, 35, 36, 77, 93, 96, 130, 141, 181, 183,
185, 204, 249, 288, 296, 501, 1009, 1018, 1047.
- அறத்துப்பால், 1-38.
- இல்லறவியல், 5-24.
- துறவறவியல், 25-38.
- அறல்= செரித்தல்
- குறள் 1326
- அறவாழி= அறமாகிய கடல்
- குறள் 8
- அறவினை= அறமாகிய நற்செயல்
- குறள் 33, 321, 909.
- அறவோர்= துறவிகள்
- குறள் 30
- அறன்== நல்வினை, நற்செயல்
- குறள் 34, 40, 45, 48, 49, 142, 147, 148, 150, 157,
- 163, 173, 179, 182, 189, 366, 384, 441, 635, 644, 754.
- அறன்வலியுறுத்தல், அதி. 4
- அறா= நீங்காத, அற்றுப்போகாத
- குறள் 522
- அறாஅ=எப்பொழுதும் நீங்காத, எஞ்ஞான்றும் நீங்காத
- குறள் 1295
- அறாது= நீங்காது
- குறள் 369
- அறார்= அன்பு ஒழியார்
- குறள் 807
- அறி= அறிதல்
- குறள் 638, 110, 218, 272.
- அறிக= தெரிந்துகொள்க
- குறள் 116, 210
- அறிகல்லாதவர்= அறியமாட்டாதார்
- குறள் 427
- அறிகாட்சியவர்= கடமையை அறிந்தவர்
- குறள் 218
- அறிகிலார்= அறியமாட்டார்
- குறள் 1139
- அறிகுற்றம்= அறிந்தகுற்றம்
- குறள் 272
- அறிகொன்று= அறிதலைக் கொன்று
- குறள் 638
- அறிதல்= தெரிந்துகொள்ளல்
- குறள் 582, 632
- செய்ந்நன்றியறிதல், அதி. 11
- ஒப்புரவறிதல், அதி. 22
- வலியறிதல், அதி.48
- காலமறிதல், அதி.49
- இடனறிதல், அதி.50
- குறிப்பறிதல், அதி.71,110
- அவையறிதல், அதி.72
- அறிதோறும்= அறியுந்தோறும்
- குறள் 1110
- அறிந்த= தெரிந்த
- குறள் 61, 711, 721, 1143
- அறிந்தக்கடைத்தும்= அறிந்தபோதும்
- குறள் 637
- அறிந்தது= அறியப்பெற்றது
- குறள் 226
- அறிந்தவை= கேட்டறிந்த செயல்
- குறள் 587
- அறிந்தார்= பயனைத்தெரிந்தார்
- குறள் 288, 717
- அறிந்தான்= தெரிந்தவன்
- குறள் 635
- அறிந்து= தெரிந்து
- குறள் 123, 136, 164, 179, 441, 469, 472, 477, 479,
- 483, 493, 494, 515, 618, 635, 637, 644, 645, 687,
- 696, 711, 721, 725, 729, 754, 767, 793, 878, 943,
- 944, 946, 981, 1127, 1128, 1287, 1312.
- அறிந்தேன்= தெரிந்துகொண்டேன்
- குறள்1083
- அறிய= தெரிய
- குறள் 590, 795.
- அறியலம்= அறியாதிருந்தோம்
- குறள் 1257.
- அறியா= அறியமாட்டாத
- குறள் 736, 836.
- = அறியாமல்
- குறள் 1116.
- அறியாது= அறியாமல்
- குறள் 1142.
- அறியாமை= தெரியாமல்
- குறள் 440.
- = தெரியாதிருத்தல்
- குறள் 925, 1110.
- அறியார்= அறியாதவர்
- குறள் 76, 337
- = அறியாதவரை
- குறள் 507
- = தெரியமாட்டார்
- குறள் 228, 713, 1141.
- = தெரியமாட்டாராக
- குறள் 473.
- (அவையறியார், 713).
- அறியார்க்கு== தெரியாதவர்க்கு
- குறள் 877
- அறியான்= தெரியாதவன்
- குறள் 638
- =அறியமாட்டான்
- குறள் 863.
- அறியாதவனாக
- குறள் 474
- அறியும்=அறிகின்ற
- குறள் 1101, 1308.
- அறியேன்= அறியமாட்டேன்
- குறள் 928, 1083, 1125, 1207.
- அறிவதாம்=
- குறள் 686.
- அறிவது= மதிப்பது
- குறள்61,
- = தெரிவது
- 293, 472, 686, 1255
- அறிவல்= அறிவேன்
- குறள் 1129
- அறிவன்= மெய்யுணர்வினையுடையவன், கடவுள்
- குறள் 2.
- அறிவாம்= நாம் அறிவோம்
- குறள் 36.
- அறிவார்= தெரிவார்
- குறள் 427
- = தெரிபவரது
- குறள் 428
- = தெரிபவர்க்கு
- குறள் 1053
- அறிவாரின்= தெரிவாரைக்காட்டிலும்
- குறள் 1072
- அறிவார்மாட்டு= தெரிவார்இடத்து
- குறள் 995.
- அறிவாளன்== அறிவையுடையவனது
- குறள் 215.
- அறிவான்=தெரிபவன்
- குறள் 214, 318, 701.
- = தெரிபவனது
- குறள் 677
- அறிவிப்ப= உணர்த்துவனவாய்
- குறள் 1233
- அறிவினர்= அறிவுடையவர்
- குறள் 918
- அறிவினவர்= அறிவுடையவர்கள்
- குறள் 857, 914, 915
- அறிவினார்=அறிவுடையவர்
- குறள் 198
- அறிவினார்க்கு= அறிவினையுடையவர்க்கு
- குறள் 429
- அறிவினான்= அறிவினால்
- குறள் 315.
- அறிவினுள்= அறிவுகளுள்
- குறள் 203.
- அறிவினை= அறிவை
- குறள் 532.
- அறிவு==உணர்வு
- குறள் 61, 68, 123, 140, 175, 179, 287, 331, 355, 358,
- 372, 373, 382, 396, 404, 421, 422, 423, 424, 425, 426,
- 427, 430, 441, 452, 454, 463, 507, 513, 618, 622, 682,
- 684, 816, 841, 842, 843, 846, 847, 869, 1022, 1140, 1153.
- அறிவுடைமை, அதி.43;
- புல்லறிவாண்மை, அதி.85,
- அலரறிவுறுத்தல், அதி.115,
- குறிப்பறிவுறுத்தல், அதி.128.
- அறின்= அற்றுப்போனால்
- குறள் 812.
- அறு=நீங்கிய, குறைந்த.
- குறள் 199, 352, 1117.
- அறுதொழிலோர்=அந்தணர்
- குறள் 560.
- அறுக=இல்லாமற்போவதாக
- குறள் 1177.
- அறுக்கல்=அறுத்தல், நீக்குதல்
- குறள் 345.
- அறுக்கும்=கெடுக்கும், ஒழிக்கும்
- குறள் 349, 753, 759.
- =தள்ளிவிட்டுப்போகும்
- குறள் 814
- அறுத்தல்=நீக்குதல்
- அவாவறுத்தல், அதி.37
- அறுப்பார்=கைவிடுகின்றவர்
- குறள் 798
- அறுப்பான்= நீக்குபவன்
- குறள் 346.
- அறுப்பின்= கெடுத்தால்
- குறள் 367.
- அறை=வீட்டின் அறை
- குறள் 913.
- =கீழறுத்தல்
- குறள் 747, 764;
- =அடிக்கப்படுகின்ற
- குறள் 1076, 1180.
- அறைந்தான்= கையால் அறைந்தவன்
- குறள் 307.
- அற்கா= நிலைபெறாத, நில்லாத
- குறள் 333.
- அற்குப= நிலைபெறுகின்ற
- குறள் 333.
- அற்ற= நீங்கிய
- குறள் 649, 654, 699, 956.
- அற்றகண்ணும்=நீங்கியகாலத்தும்
- குறள் 521.
- அற்றகண்ணே= நீங்கியபொழுதே
- குறள் 349
- அற்றது=சமித்தது, செரித்தது
- குறள் 942, 944.
- =நீங்கியது
- குறள் 365.
- அற்றம்= இறுதி
- குறள் 421, 434.
- =மறைக்கத்தக்கபகுதி
- குறள் 846, 980.
- =மெலிவு
- குறள் 1186.
- அற்றவர்=பிறவியற்றவர், இல்லாதவர்
- குறள் 365.
- அற்றார்= நீங்கியவர்
- குறள் 106, 311, 312, 365, 646, 800.
- =வறியவரது
- குறள் 226.
::=நீங்கினார்
- குறள் 248.
- அற்றாரை=நீங்கியவரை
- குறள்506.
- அற்றார்கண்=நீங்கியவரிடத்து
- குறள் 503.
- அற்றார்க்கு= ஒருபொருளும் இல்லாதவர்க்கு
- குறள் 1007.
- அற்றால்= சமித்தால், செரித்தால்
- குறள் 943.
- அற்றான்= அற்றவனது
- குறள் 350.== ==
- அற்று=அத்தன்மைத்து.
- குறள் 557.
- =
- குறள்
- =
- குறள்
- அற்றேம்= இழந்தேம்
- குறள் 88, 275, 626,
அனிச்ச
[தொகு]- அனிச்சப்பூ= அனிச்சமலர்
- குறள் 1115.
- அனிச்சம்=அனிச்சப்பூ
- குறள் 90, 1120.
- அனிச்சமே= அனி்ச்சப்பூவே
- குறள் 1111.
- அனைத்தானும்= அத்துணையாயினும்
- குறள் 416.
- அனைத்திற்கு= அவ்வளவிற்கு
- குறள் 1129.
- அனைத்து=அவ்வாறானது, அவ்வளவுதான்.
- குறள் 34, 387, 394, 396, 828, 1208, 1320.
- அனைய= =அவ்வளவின, அவ்வாறுள்ளன
- குறள் 595;
- =அளவற்றதாய், அவ்வாறாய
- குறள் 622;
- =அளவு, அவ்வாறாயதை
- குறள் 965.
- அனையது=அவ்வாறானது
- குறள் 595, 1010.
- அனையர்== போன்றவர், அவ்வாறாயவர், அவ்வாறானவர்
- குறள் 310, 406, 410, 576, 650, 704, 964, 1073.
- அனையரேனும்= அவ்வாறானவரானாலும்
- குறள் 277.
- அனையார்= அதைப்போன்றவர், அப்படிப்பட்டவர், அவ்வாறானவர்
- குறள் 965.
- அனைவரை= எல்லோரையும்
- குறள் 584.
- அன்பிற்கும்= அன்புக்கும்
- குறள் 71.
- அன்பின்= அன்புடைய, அன்புடன்
- குறள் 80, 807;
- = அன்பினால்
- குறள் 911.
- அன்பு= தொடர்புடையார் மாட்டு உளதாகும் உள்ளநெகிழ்ச்சி
- குறள் 45, 72, 74, 75, 76, 77, 78, 79, 285, 513,
- 681, 682, 757, 862, 983, 992, 1009, 1276.
- அன்புடைமை, அதி.8
- அன்பொடு= அன்புடன்
- குறள் 755.
- அன்போடு= அன்புடன்
- குறள் 755.
- அன்மை= இல்லாதிருத்தல், அல்லாமை
- குறள் 162, 172, 185.
- அன்றி= அல்லாமல்
- குறள் 437, 947.
- அன்று= இல்லை
- குறள் 2, 105, 108, 379, 438, 515, 546, 549,
555, 618, 641, 775, 784, 786, 825, 871, 982, 988, 993, 1014, 1051, 1092, 1180, 1208 1255, 1258, 1307;
- =அந்தநாளில்
- குறள் 36, 108, 113.
- அன்ன= போன்ற
- குறள் 109, 279, 296, 308, 363, 527, 889, 1071,
- 1119, 1137, 1142, 1143, 1260, 1267, 1305;
- =அவ்வாறாயின்
- குறள் 1122;
- = அத்தகையவற்றை
- குறள் 655, 1294.
- அன்னது= அவ்வாறாயது
- குறள் 565, 1082.
- அன்னத்தின்= அன்னப்பறவையினுடைய
- குறள் 1120.
- அன்னர்= ஒத்திருப்பர்
- குறள் 1076.
- அன்னள்= அத்தன்மையள்
- குறள் 1124.
- அன்னார்= ஒத்தவர்
- குறள் 898, 969;
- =ஒத்தவரை
- குறள் 667;
- =ஒத்தவரது
- குறள் 814.
- அன்னாரகத்து= அத்தகையவர்மாட்டு
- குறள் 1061.
- அன்னார்கண்= அத்தகையவரிடத்து
- குறள் 1061.
- அன்னான்= ஒத்தவன்
- குறள் 624.
- அன்னை= தாய்
- குறள் 1147.
உள் இணைப்பான்கள்
[தொகு]- அ-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்-:அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்
திருக்குறள்அகரமுதலி அகரவரிசை முற்றும்
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
க- கா,கி,கீ - கு, கூ- கெ, கே, கை கொ, கோ, கௌ- ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே, சொ, சோ- ஞா த-தா, தி, தீ- து, தூ, தெ, தே- தொ, தோ;ந-| நா,நி-| நீ,நு,நூ நெ,நே,நொ,நோ.|| நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை- | பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-| வா- | வி,வீ|-|வெ,வே,வை. || [[|]]
திருக்குறள் பரிமேலழகர் உரை [[]] [[]] [[]] [[]] [[]]