உள்ளடக்கத்துக்குச் செல்

தாமஸ் ஆல்வா எடிசன்

விக்கிமேற்கோள் இலிருந்து
Edison (1914)

தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர்.

இவரது கருத்துகள்

[தொகு]
  • வாழ்க்கையில் முன்னேற,குன்றாத உழைப்பு,குறையாத முயற்சி,வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும்
  • அடுத்தவர் விட்ட இடமே எனது தொடக்கம்
  • பள்ளிக்கூடத்தில் என்னால் படிக்க முடியவில்லை. தெரிந்த காரணம் ஏதுமின்றியே நான் எப்பொழுதும் வகுப்பில் கடைசியாகவே இருந்தேன். ஆசிரியர்கள் ஒரு போதும் என்னிடம் இரக்கம் காட்டியதில்லை. என் தகப்பனாரும் என்னை முட்டாள் என்றே நினைத்தார் என உணர்ந்தேன்.[1]
  • நான் எந்த மேடையிலும், எந்தச் சமயத்திலும் மனச் சோர்வடைவதில்லை; ஒரு காரியத்தைச் சாதிக்க முதலாவது வேண்டப்படுவது கடினமான உழைப்பு; இரண்டாவது தொடர்ந்து படித்தல்; மூன்றாவது பகுத்தறிவு.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: