உள்ளடக்கத்துக்குச் செல்

தனிமை

விக்கிமேற்கோள் இலிருந்து
Solitude by Frederic Leighton

தனிமை என்பது தனிமையாதல் அல்லது தனிமைப்படுத்துதல், அதாவது மக்கள் தொடர்பு இல்லாதது. இது மோசமான உறவுகளிலிருந்து, அன்புக்குரியவர்கள் இழப்பு, திட்டமிட்ட தேர்வு, தொற்றுநோய், மனநல குறைபாடுகள், நரம்பியல் சீர்குலைவுகள் போன்றவை.

இது விரும்பத்தக்கதாக இருக்கலாம்.  தனிமைக்கும்  தனிமைப்படுத்துதலுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. அர்த்தத்தில், இந்த இரு வார்த்தைகள் முறையே, மகிழ்ச்சி மற்றும் வலி எனபடும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தன்னித்தவராகார். -ஸ்ர்பிலிப் ஸிட்னி[1]
  • கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது. -அனர்பாஷ்[1]
  • தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது. -இப்ஸன்[1]
  • உயர்ந்த எண்ணங்களின் தோழமை உடையோர் ஒருநாளும் தனிமை காண்பதிலர். -பிலிப்[1]
  • தனிமையாயிருக்கச் சக்தி இல்லாததினாலேயே சகல துன்பங்களும் விளைகின்றன. -லா புரூயர்[1]
  • தனிமையாய் வாழ ஏன் நாம் அஞ்ச வேண்டும்? நாம் தன்னந் தனியாய் இறக்கத்தானே சர்வேச்வரனுடைய திருவுள்ளம்? - கெபிள்[1]
  • தர்ம நெறி தவறியவரே தனியாயிருப்பவர். -டைடெரெட்[1]
  • எந்தக் காலத்திலும் அறிஞர்கள் ஏழைகளினும் அதிகமான எளிய வாழ்க்கையே வாழ்ந்துளர். -தோரோ[1]
  • உலகத்தில் வெகு சிலரே தனியாக வாழத் தகுதியுடையவர். அவர்களுக்கு உலகத்தின் மாயையை அறியப் போதுமான லெளகிக ஞானமும், சகல மாயையையும் வெறுத்துத் தள்ளப்போதுமான அறவொழுக்கமும் இருக்கவேண்டும். -கெளலி[1]
  • மனம் ஏகாந்தத்தை விரும்பினால், அதன் மூலம் அது குணத்தில் மேம்பட்டிருப்பதாகும். அது ஏகாந்தத்தின் ருசியை அனுபவித்த பின், மேலும் பெருமையுடையதாகும. - ஹம்போல்ட்[2]
  • எவருக்கு ஒருவரையும் பிடிக்கவில்லையோ, எவரை ஒருவருக்கும் பிடிக்கவில்லையோ, அவரே ஏகாந்தத்திற்குத் தகுதியுள்ளவர். - ஸிம்மர்மன்[2]
  • பயிரிடப்பெறாத நிலத்திற்கு என்ன ஏற்படுகின்றதோ அதுவே அறிவீனமாகச் சமூகத்தைத் துறந்து ஏகாந்தமாயிருப்பவனுக்கும் ஏற்படும் பாலை போன்ற அவனுடைய இதயத்தில் முட்செடிகள் வளர்ந்துவிடுகின்றன. - ரிவரால்[2]
  • சம்பாஷணை. உலக அறிவை விருத்தி செய்யும். ஆனால், ஏகாந்தம் பேரறிவின் பள்ளிக்கூடம். - கிப்பன்[2]
  • நாம் சமூகத்திலிருந்து வாழ்வதைக் கற்றுக்கொண்டால் எப்படி மரிக்கவேண்டும் என்பதை ஏகாந்தம் நமக்குக் கற்பிக்கவேண்டும். - பைரன்[2]
  • சமூகம் நாம் எப்படி இருக்கின்றோம் என்பதைக் காட்டுகிறது. ஏகாந்தம் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது. -ஸெஸில்[2]
  • நாம் நம்மை தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது. அந்தத் தனி நிலையில் நாம் இருக்க முடியாது. சமூகத்தொடர்பு நம் சொந்த நிலையிலும், மற்றவர்களிடத்தும் சகிப்புத் தன்மையை உண்டாக்குகிறது. -கதே[2]
  • இயன்ற சமயத்தில் கூட்டத்தைவிட்டு வெளியேறி இரு. முயவொரு நாளும். சில மணி நேரமாவது, உனக்கு, நீயே துணையாயிரு. - ஆர்தர் பிரிஸ்பேன்[2]
  • மிகவும் தனிமையாக நிற்பவனே உலகில் தலைசிறந்த வலிமையுள்ள மனிதன். - இப்ஸன்[2]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தனிமை. நூல் 66 - 67. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 137-138. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தனிமை&oldid=20639" இலிருந்து மீள்விக்கப்பட்டது