உள்ளடக்கத்துக்குச் செல்

1955 சூன் 20 கதிரவ மறைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூன் 20, 1955-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புமுழு மறைப்பு
காம்மா-0.1528
அளவு1.0776
அதியுயர் மறைப்பு
காலம்428 வி (7 நி 8 வி)
ஆள் கூறுகள்14°48′N 117°00′E / 14.8°N 117°E / 14.8; 117
பட்டையின் அதியுயர் அகலம்254 km (158 mi)
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு4:10:42
மேற்கோள்கள்
சாரோசு136 (34 of 71)
அட்டவணை # (SE5000)9410

முழுமையான கதிரவ மறைப்பு ஒன்று 1955 சூன் 20 அன்று இடம்பெற்றது. புவிக்கும் ஞாயிறுக்கும் இடையே நிலா வரும் போது கதிரவ மறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெறுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் கதிரவனை விட அதிகமாக இருக்கும் போது முழுமையான மறைப்பு ஏற்படுகிறது. இதன்போது, கதிரவனின் நேர்க் கதிர்கள் அனைத்தும் புவிக்கு வருவது தடுக்கப்பட்டு புவி இரவாகிறது.

1955 கதிரவ மறைப்பு மொத்தம் 7 நிமிடங்கள் 7.74 செக்கன்களுக்கு நீடித்திருந்தது. இதுவே சாரோசு தொடர் 136 இல் இடம்பெற்ற மிக நீண்ட கதிரவ மறைப்பும், 11-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இடம்பெற்ற மிக நீண்ட மறைப்பும், அத்துடன் 2150 சூன் 25 இற்கு முன்னர் இடம்பெற்ற மிக நீண்ட கதிரவ மறைப்பும் ஆகும்.[1] முழுமையான மறைப்பு இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மேலாக சீசெல்சு, மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளில் ஆரம்பித்து இலங்கை (கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட), அந்தமான் தீவுகள், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோசு, தென் வியட்நாம், பராசெல் தீவுகள், அதன் பின்னர் பிலிப்பீன்சு (மணிலா உட்பட), பசிபிக் தீவுகளான பலாவு, நுக்குமானு தீவுகள், ஆகியவற்றைக் கடந்து பின்னர் பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள் வழியாக தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் முடிவடைந்தது.

தொடர்பான மறைப்புகள்

[தொகு]

சாரோசு 136

[தொகு]

சாரோசு தொடர் 136 என்பது 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் 71 கதிரவ மறைப்புகளின் நிகழ்வுகளாகும். சாரோசு தொடர் 1360 சூன் 14 இல் பகுதி மறைப்பாக ஆரம்பமானது. 1504 செப்டம்பர் 8 இல் முதலாவது வலயக் கதிரவ மறைப்பு நிகழ்ந்தது. இது ஒரு கலப்பு நிகழ்வாக 1612 நவம்பர் 22 முதல் 1703 சனவரி 17 வரை நிகழ்ந்து, முழுமையான கதிரவ மறைப்பாக 1721 சனவரி 27 இல் ஆரம்பித்தது. முழுமையான மறைப்பு 2496 மே 13 வரை தொடரும் இத்தொடர் 2622 சூலை 30 இல் பகுதி மறைப்பாக 71-ஆவது நிகழ்வாக முடிவடையும். இதன்மூலம் 1360 இல் ஆரம்பித்த இத்தொடர் 1262 ஆண்டுகளின் பின்னர் 2496 ஆம் ஆண்டில் நிறைவடையும். இத்தொடரின் மிக நீண்ட முழு மறைப்பு 1955 சூன் 20 இல் நிகழ்ந்தது. மொத்தம் 7 நிமிடங்கள், 7.74 செக்கன்கள் இது நீடித்தது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் சந்திரனின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. Fred Espenak. "Catalog of Solar Eclipses: 1001 to 1100". NASA.
  2. SEsaros136 at NASA.gov

உசாத்துணைகள்

[தொகு]