உள்ளடக்கத்துக்குச் செல்

ஹும்லா மாவட்டம்

ஆள்கூறுகள்: 29°58′N 81°50′E / 29.967°N 81.833°E / 29.967; 81.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹும்லா மாவட்டம்
ஹும்லாவின் சாட்போக்கரி ஏரி
ஹும்லாவின் சாட்போக்கரி ஏரி
அடைபெயர்(கள்): हुम्ला
நேபாளத்தின் வடமேற்கில் கர்ணாலி பிரதேசத்தில் ஹும்லா மாவட்டம் (மஞ்சள் நிறத்தில்)
நேபாளத்தின் வடமேற்கில் கர்ணாலி பிரதேசத்தில் ஹும்லா மாவட்டம் (மஞ்சள் நிறத்தில்)
நாடு நேபாளம்
மாநிலம்கர்ணாலி பிரதேசம்
தலைமையகம்சிமிகோட்
பரப்பளவு
 • மொத்தம்5,655 km2 (2,183 sq mi)
 • பரப்பளவு தரவரிசை2nd
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்50,858
 • அடர்த்தி9.0/km2 (23/sq mi)
நேர வலயம்ஒசநே+05:45 (நேபாள சீர் நேரம்)
இணையதளம்www.ddchumla.gov.np
நேபாளத்தில் ஹும்லா மாவட்டத்தின் அமைவிடம்

ஹும்லா மாவட்டம் (Humla District) (நேபாளி: हुम्ला जिल्लाHumla.ogg, மத்திய மேற்கு நேபாளத்தின் மாநில எண் 6–இல் அமைந்த, நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சிமிகோட் நகரம் ஆகும். இம்மாவட்டம் 7 சிமிகோட், நம்கா, கர்புநாத், சர்கேகத், சான்கேலி, அதன்சுலி, தஜாகோட் எனும் 7 கிராமிய நகராட்சிக்களை கொண்டது. இம்மாவட்டம் நேபாள-திபெத் எல்லைப்புறத்தில் உள்ளது. இதனருகே திபெத் பகுதியில் கயிலை மலை உள்ளது.

5,655 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹும்லா மாவட்டத்தின் மக்கள் தொகை 50,858 ஆகும்.[1] ஹும்லா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் திபெத்திய பௌத்தர்களும், தெற்குப் பகுதியில் இந்துக்களும் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

[தொகு]
ஹும்லா மாவட்டத் தலைமையிடம் சிமிகோட்

இமயமலையில் அமைந்த இம்மாவட்டத்தின் வடக்கில் அமைந்த திபெத் தன்னாட்சிப் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத் தலைமையிடமான சிமிகோட்டிலிருந்து, கயிலை மலைக்கு நடைபாதையாக செல்வதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும்.

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடிகள்
2.3%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடிகள்
8.9%
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் தட்ப வெப்பம் 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடிகள்
19.4%
மான்ட்டேன்#ஆல்பைன் புல்வெளிகள் மற்றும் தூந்திரப் பகுதிகள் 4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 16,400 அடிகள்
58.7%
பனிப்பொழிவு 5,000 மீட்டர்களுக்கும் மேல் 10.7%

மருத்துவ நலம்

[தொகு]
  • மாவட்ட மருத்துவ மனை : 1
  • ஆரம்ப சுகாதார மையங்கள் : 0
  • மருத்துவ மையங்கள் : 10
  • துணை மருத்துவ மையங்கள் : 16
  • மருத்துவர்களின் எண்ணிக்கை: 3
  • செவிலியர்களின் எண்ணிக்கை: 35

இம்மாவட்ட மக்கள் அலோபதி மருத்து முறையை விட உள்ளூர் மருத்துவ சிகிச்சைகளையே பெரிதும் நாடுகின்றனர்.

சுற்றுலா

[தொகு]

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம், மலையேற்ற பயிற்சிக்கு உகந்ததாக உள்ளது. சிமிகோட் வானூர்தி நிலையம், வெளி நாட்டு மலை ஏற்ற வீரர்களுக்கு உதவியாக உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து April 18, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள்

[தொகு]

ஹும்லா