ஸூரத்துல் ஃபலக்
Appearance
சூரத்துல் ஃபலக் (Sūratu l-Falaq, Sura al-Falaq, அரபு மொழி: سورة الفلق, "அதிகாலை", Dawn, Daybreak) என்பது திருக்குர்ஆனின் 113வது அத்தியாயம் ஆகும்.
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.[1][2][3]
திருக்குர்ஆனின் 113 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
பெயர்
[தொகு]ஸூரத்துல் ஃபலக் என்ற அரபுச் சொல்லுக்கு அதிகாலை எனப் பொருள்.
அதிகாலை
[தொகு]இல | அரபு | ஆங்கிலம் | தமிழாக்கம் |
---|---|---|---|
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ | Bismillāhi r-Raḥmāni r-Raḥīm | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
113.1 | قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ | Qul aʿuzu bi-Rabbi l-falaq | (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். |
113.2 | مِن شَرِّ مَا خَلَقَ | Min sharri ma khalaq | அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- |
113.3 | وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ | Wa min'sharri ġasiqin iḏa waqab | இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- |
113.4 | وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ | Wa min'sharri n-naffaṯati fi l-u'qad | இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், |
113.5 | وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ | Wa min'sharri hasidin iḏa hasad | பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Arabic script in Unicode symbol for a Quran verse, U+06DD, page 3, Proposal for additional Unicode characters
- ↑ Sahih International translation
- ↑ George Sale amended by T. B. Irving's translation which has mischief and evil as interchangeable