வெள்ளை சர்க்கரை
வெள்ளை சர்க்கரை (White sugar) என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் சர்க்கரை வகையாகும். மேசை சர்க்கரை, மணியுரு சர்க்கரை அல்லது சர்க்கரை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. பீட்ரூட் அல்லது கரும்பில் இருந்து இச்சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கப்படும் சர்க்கரை சுத்திகரிப்பு செயல்முறைக்கும் உட்பட்டுள்ளது.
விளக்கம்
[தொகு]சர்க்கரைப் பாகை சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுத்தி அழுக்கு நீக்கி சுக்ரோசு எனப்படும் வெள்ளை சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இது 99.7% சதவீதத்திற்கும் அதிகமான தூய்மையைக் கொண்டுள்ளது. [1] சுக்ரோசின் மூலக்கூற்று வாய்ப்பாடு C 12 H 22 O 11 ஆகும். கரும்பு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை சர்க்கரைகள் வேதியியல் ரீதியாக வேறுபடுத்த முடியாதவை: இருப்பினும், கார்பன்-13 பகுப்பாய்வு மூலம் அதன் தோற்றத்தை அடையாளம் காண முடியும். [1]
கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை ( சில பழுப்பு சர்க்கரை) சில சுத்திகரிப்பாளர்களால் எலும்புக் கரியைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்படுகிறது. [2] இந்த காரணத்திற்காக கரும்பிலிருந்து வரும் வெள்ளை சர்க்கரை சைவமாகக் கருதப்படுவதில்லை. பீட் ரூட் சர்க்கரை ஒருபோதும் எலும்பு கரியுடன் சேர்க்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவதில்லை. எனவே இதை சைவ உணவு என்பர். [3]
இரசாயன மற்றும் ஊட்டச்சத்துக் கண்ணோட்டத்தில், பழுப்பு சர்க்கரையுடன் ஒப்பிடுகையில், வெள்ளை சர்க்கரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற சில தாதுக்கள் இருப்பதில்லை. சர்க்கரைப்பாகுவில் இவை சிறிய அளவில் உள்ளன. [4] [5] [6] எனவே வெள்ளை நிறமும் குறைந்த சுவையும் மட்டுமே சில கண்டறியக்கூடிய வேறுபாடுகள் ஆகும். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Dario Bressanini (3 June 2009). "Miti culinari 6: lo zucchero veleno bianco" (in it). Le Scienze Blog. http://bressanini-lescienze.blogautore.espresso.repubblica.it/2009/06/03/miti-culinari-6-lo-zucchero-veleno-bianco/.
- ↑ "Animal Bones". www.sucrose.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-19.
- ↑ "A List of Bone Char Free Vegan Sugar Companies". ordinaryvegan.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-19.
- ↑ Raffaella Procenzano (28 January 2014). "Lo zucchero bianco fa male più dello zucchero grezzo?" (in it). https://www.focus.it/scienza/scienze/lo-zucchero-bianco-fa-male-piu-dello-zucchero-grezzo.
- ↑ Anahad O'Connor (12 June 2007). "The Claim: Brown Sugar Is Healthier Than White Sugar" (in en). https://www.nytimes.com/2007/06/12/health/nutrition/12real.html?ei=5070&en=2c7b0deda8710630&ex=1186632000&adxnnl=1&adxnnlx=1186592818-8CJn9xUUuK6+4WQViP11tA&_r=0..
- ↑ 6.0 6.1 Dario Bressanini (6 April 2009). "Miti culinari 5: le virtù dello zucchero di canna" (in it). http://bressanini-lescienze.blogautore.espresso.repubblica.it/2009/04/06/miti-culinari-5-le-virtu-dello-zucchero-di-canna/.