உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளீயம்(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளீயம்(II) புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வெள்ளீயம் டைபுரோமைடு, வெள்ளீய புரோமைடு
இனங்காட்டிகள்
10031-24-0 Y
ChemSpider 59609 N
EC number 233-087-0
InChI
  • InChI=1S/2BrH.Sn/h2*1H;/q;;+2/p-2 N
    Key: ZSUXOVNWDZTCFN-UHFFFAOYSA-L N
  • InChI=1/2BrH.Sn/h2*1H;/q;;+2/p-2
    Key: ZSUXOVNWDZTCFN-NUQVWONBAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66224
  • Br[Sn]Br
UNII 55F23H2K96 N
பண்புகள்
SnBr2
வாய்ப்பாட்டு எடை 278.518 கி/மோல்
தோற்றம் மஞ்சள் தூள்
அடர்த்தி 5.12 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 215 °C (419 °F; 488 K)
கொதிநிலை 639 °C (1,182 °F; 912 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு PbCl2 உடன் தொடர்புடையது
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வெள்ளீயம்(II) புரோமைடு (Tin(II) bromide) என்பது SnBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் வெள்ளீயம் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. இந்த ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் வெள்ளீயச் சேர்மங்களுக்கு மந்த இணை விளைவு|மந்த இணை விளைவைக் கொடுக்கிறது.

கட்டமைப்பு

[தொகு]

வாயு நிலையில் வெள்ளீய(II) குளோரைடு நேரியல் அல்லாத வளைந்த எலக்ட்ரான் அமைப்பை கொண்டிருப்பது போலவே வாயு நிலையில் வெள்ளீயம்(II) புரோமைடும் பெற்றுள்ளது. Br-Sn-Br பிணைப்புக் கோணம் 95° ஆகவும் Sn-Br பிணைப்பின் நீளம் 255 பைக்கோ மீட்டர்களாகவும் உள்ளது[1]. வாயு நிலையில் இருபடியாக்கம் நிகழ்வதற்கும் சில சான்றுகள் உள்ளன[2]. திண்மநிலைக் கட்டமைப்பு SnCl2 மற்றும் PbCl2 சேர்மங்களின் கட்டமைப்புடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. வெள்ளீய அணுக்கள் கிட்டத்தட்ட முக்கோண இரு பட்டைக்கூம்பு அமைப்பில் ஐந்து அருகாமை புரோமின் அணுக்களைப் பெற்றுள்ளன[3].

தயாரிப்பு

[தொகு]

உலோக வெள்ளீயத்தை ஐதரோ புரோமிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து தண்ணீர்/ஐதரோபுரோமிக் அமிலத்தைப் பயன்படுத்தி வடிகட்டி குளிரிவித்தால் வெள்ளீயம்(II) புரோமைடு உருவாகிறது:[4].

Sn + 2HBr→ SnBr2 + H2

இதே வினை ஆக்சிசன் முன்னிலையில் நிகழுமெனில் வெள்ளீய(IV) புரோமைடு உருவாகிறது.

வினைகள்

[தொகு]

அசிட்டோன், பிரிடின், டைமெத்தில்சல்பாக்சைடு போன்ற தனி இணை எலக்ட்ரான்கள் வழங்கும் கரைப்பான்களில் இது கரைகிறது. பிரமிடு வடிவ கூட்டுவிளைபொருள்கள் இதன் விளைவாக உருவாகின்றன[4]
. 2SnBr2•H2O, 3SnBr2•H2O & 6SnBr2•5H2O போன்ற நீரேற்றுகள் அறியப்படுகின்றன. இவை திண்ம நிலையில் ஒன்று அல்லது இரண்டு முகங்களின் உச்சியில் புரோமின் அல்லது நீர் மூலக்கூறுகள் கொண்ட உருக்குலைந்த 6 புரோமின் அணு முக்கோணப் பட்டகத்துடன் வெள்ளீயம் ஒருங்கிணைந்து ஆக்கப்பட்டுள்ளன[5]. ஐதரசன் புரோமைடில் இது கரையும்போது பிரமிடு கட்டமைப்புள்ள SnBr3− அயனி உருவாகிறது[5]. SnCl2 போல இதுவோர் ஒடுக்கும் முகவராகும். பல்வேறு வகையான ஆல்க்கைல் புரோமைடுகளின் ஆக்சிசனேற்ற கூட்டு வினைகள் மூலம் ஆல்க்கைல் வெள்ளீய டிரைபுரோமைடு உருவாக முடியும்[6]. உதாரணம்:

SnBr2 + RBr→ RSnBr3

வெள்ளீயம்(II) புரோமைடால் ஒரு லூயிசு அமிலமாகச் செயல்பட முடியும். தனி இணை எலக்ட்ரான் வழங்கும் மூலக்கூறுகளுடன் சேர்ந்து கூட்டு விளைபொருள்களாக இது உருவாகிறது. எடுத்துக்காட்டு: டிரைமெத்திலமீன் NMe3.SnBr2 மற்றும் 2NMe3.SnBr2 விளைபொருள்களாக உருவாகிறது[7]

ஒரே சேர்மத்தில் வழங்கியாகவும் ஏற்பியாகவும் கூட இதனால் செயற்பட முடியும். F3B.SnBr2.NMe3 என்ற அணைவுச் சேர்மத்தில் போரான் டிரைபுளோரைடுக்கு வழங்கியாகவும் டிரைமெத்திலமீனுக்கு ஏற்பியாகவும் SnBr2 செயற்படுகிறது[8].

மேற்கோள்கள்

[தொகு]
  1. J.L Wardell "Tin:Inorganic Chemistry" Encyclopedia of Inorganic Chemistry Ed: R Bruce King John Wiley & Sons (1994) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
  2. K. Hilpert; M. Miller; F. Ramondo (1991). "Thermochemistry of tetrabromoditin and bromoiodotin gaseous". J. Phys. Chem. 95 (19): 7261–7266. doi:10.1021/j100172a031. 
  3. Abrahams I.; Demetriou D.Z. (2000). "Inert Pair Effects in Tin and Lead Dihalides: Crystal Structure of Tin(II) Bromide". Journal of Solid State Chemistry 149 (1): 28–32. doi:10.1006/jssc.1999.8489. Bibcode: 2000JSSCh.149...28A. 
  4. 4.0 4.1 எஃப். ஆல்பர்ட் காட்டன்; சாப்ரி வில்கின்சன்; கார்லோசு முரில்லோ; மேன்பிரட் பாக்மன் (1999), Advanced Inorganic Chemistry (6வது ed.), நியூ யார்க்கு: வைலி-இன்டசயின்சு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-19957-5
  5. 5.0 5.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  6. Bulten E.J. (1975). "A convenient synthesis of (C1-C18) alkyltin tribromides". Journal of Organometallic Chemistry 97 (1): 167–172. doi:10.1016/S0022-328X(00)89463-2. 
  7. Chung Chun Hsu; R. A. Geanangel (1977). "Synthesis and studies of trimethylamine adducts with tin(II) halides". Inorg. Chem. 16 (1): 2529–2534. doi:10.1021/ic50176a022. 
  8. Chung Chun Hsu; R. A. Geanangel (1980). "Donor and acceptor behavior of divalent tin compounds". Inorg. Chem. 19 (1): 110–119. doi:10.1021/ic50203a024.