உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்டி டோனிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்டி டோனிகர்
வெண்டி டோனிகர்-சைமர் கல்லூரி (Shimer College), 2012
பிறப்புவெண்டி டோனிகர்
நவம்பர் 20, 1940 (1940-11-20) (அகவை 83)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்சிகாகோ
குடியுரிமைஐக்கிய அமெரிக்கர்
துறைசமசுகிருத இலக்கியம்,
இந்து சமயம்,
தொன்மவியல்,
மதங்களின் வரலாறு
பணியிடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ரேட்கிலிஃப் கல்லூரி (BA),
ஹார்வர்டு பல்கலைக்கழகம் (PhD),
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (DPhill)
ஆய்வு நெறியாளர்டேனியல் H. H. இங்கால்ஸ், Sr. (Harvard)
ராபர்ட் சார்ல்ஸ் ஜாக்னெர் (Oxford)
முனைவர் பட்ட 
மாணவர்கள்
62,[1] including ஜெஃப்ரி க்ரிபால் and அலெக்ஸாண்டெர் ஆர்குயேல்ஸ்[2]

வெண்டி டோனிகர் (Wendy Doniger, நவம்பர் 20, 1940) என்பவர் அமெரிக்க ஆய்வறிஞர் ஆவார். சமற்கிருத மொழியில் புலமை பெற்றவர். இந்து சமய ஆய்வாளர், சமயங்கள் பற்றியும் தொன்மங்கள் பற்றியும் ஆய்வு செய்து பல நூல்களை எழுதியுள்ளார். அமெரிக்க நாட்டு சிக்காகோ பல்கலைக் கழகத்தில் சமய வரலாற்றுத் துறையில் 1978 ஆம் ஆண்டு முதல் பேராசிரியராகப் பணி புரியும் பெண்மணி ஆவார்.

இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு (The Hindus: An Alternative History) என்னும் இவருடைய நூலை 2009 ஆம் ஆண்டில் பெங்குயின் பதிப்பகம் வெளியிட்டது. இந்து மதத்தையும் பழக்க வழக்கங்களையும் இழிவு படுத்தி இந்நூலில் கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன என்று கண்டித்து சிக்சா பச்சாவோ அந்தோலன் சமிதி என்னும் ஓர் அமைப்பு வெண்டி டோனிகர் மீதும் பெங்குயின் பதிப்பகத்தின் மீதும் வழக்குப் போட்டது. அதன் விளைவாக பெங்குயின் அந்தப் புத்தகத்தை விற்பனையிலிருந்து விலக்கிக் கொண்டது. எனவே இந் நிகழ்வு தொடர்பாக அறிவுலக மட்டத்தில் பெரும் விவாதமும் கருத்து மோதல்களும் ஏற்பட்டன.

பிறப்பும் படிப்பும்

[தொகு]

நியூயார்க் நகரில் யூதப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். 1962 இல் சமற்கிருத மொழியையும் இந்தியா பற்றிய கல்வியையும் படித்துப் பட்டம் பெற்றார். 1963–64 காலப் பகுதியில் இந்தியாவில் தங்கி இந்தியாவைப் பற்றிய கல்வியையும் ஆராய்ச்சியையும் தொடர்ந்தார்.

1968 இல் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார். 1973 இல் ஆக்சுபோர்டில் பயின்று கீழைத்தேயக் கல்வியில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.

பணிகள்

[தொகு]
  • சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மதங்களின் வரலாறு என்பது பற்றிய துறையின் பொறுப்பில் பணியாற்றினார்.
  • மதங்களின் வரலாறு என்னும் ஓர் இதழை நடத்தி அதில் பதிப்பு ஆசிரியராக இருந்து பணியாற்றினார்.
  • 1985 ஆம் ஆண்டில் சமயங்களின் அமெரிக்க அகாதமியில் தலைவர் ஆனார்.
  • 1997 இல் ஆசியவியல் கல்விக் கழகத்தில் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
  • என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிகா பன்னாட்டுப் பதிப்பில் பணியாற்றினார்.
  • 16 நூல்கள் அளவுக்கு எழுதியுள்ளார்.
  • நியூயார்க் டைம்சு வாசிங்க்டன் போஸ்ட் போன்ற உலகப் புகழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

எழுதியவற்றுள் சில நூல்கள்

[தொகு]
  • Asceticism and Eroticism in the Mythology of Siva
  • Vatsyayana Kamasutra
  • The Hindus: An Alternative History on Hinduism
  • The Origins of Evil in Hindu Mythology
  • The Ganges
  • Women, Androgynes and other Mythical Beasts
  • On Hinduism

உசாத்துணை

[தொகு]
  1. Taylor 2011, ப. 149.
  2. Curriculum Vitae, uchicago.edu; accessed February 14, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்டி_டோனிகர்&oldid=2601087" இலிருந்து மீள்விக்கப்பட்டது