விசைத்தறி
Appearance
விசைத்தறி செலுத்தற்றண்டு மூலம் இயங்கும் ஓர் மின் நெசவுக் கருவியாகும். இக் கருவியை 1784ஆம் ஆண்டு எட்மண்டு கார்டுரய்ட் என்பவர் வடிவமைத்தார். பின்னர் 47 வருடங்களுக்கு பிறகு கென்வொர்த்து மற்றும் புல்லாக்கு என்பவர்கள் இதை மேம்படுத்தி தானியங்கி நெசவுதறியாக மாற்றினார்கள். விசைத்தறி தொழில் தமிழ்நாட்டின் ஒர் முக்கியத் தொழில் ஆகும், குறிப்பாக நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்குகின்றன.