விக்கிப்பீடியா:விக்கி விடுப்பு
இக் கட்டுரை ஒன்று அல்லது பல விக்கிப்பீடியர்களின் அறிவுரை அல்லது கருத்தைக் கொண்டிருக்கலாம். கட்டுரைகளில் உள்ள அனைத்தும் விக்கிப்பீடியாவின் உறுதியான கொள்கைகளும் வழிகாட்டல்களும் அல்ல. |
விக்கி விடுப்பு என்பது விக்கிப்பீடியாவின் தீவிர தொடர் பங்களிப்பாளர் தற்காலிகமாக விக்கிப்பீடியா பணியில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுதல் ஆகும்.
பணி மிகுதி, வேலைப்பளு, புற வாழ்வுச் சிக்கல்கள், தனிப்பட்ட சில வேலைகள் என்பன போன்ற காரணங்களால் விக்கிப்பணியை இடைநிறுத்தம் செய்ய வேண்டி வந்தாலும் சில பயனர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் விக்கிப்பீடியாவிற்குள் வந்து என்ன நடக்கிறது என்றாவது பார்ப்பது உண்டு.
விரும்பும் பயனர்கள் வலிந்து அமலாக்கப்பட்ட விக்கி விடுப்பு எடுக்கலாம். சில ஜாவா நிரல்களின் மூலம் இது சாத்தியமாகிறது. பயனர் தான் விரும்பும் தேதியில் மட்டுமே புகுபதிகை செய்ய இது உதவுகிறது. இடையில் விக்கிப்பணிக்கு திரும்ப விரும்புவோர் நிர்வாகி மூலம் இந்நிரலை செயலிழக்கச் செய்யலாம் அல்லது ஐ.பி. யாக வந்து பங்களிக்கலாம்.
பொதுவான வார்ப்புருக்கள்
[தொகு]விக்கி விடுப்பு எடுப்பதை பிற விக்கி நண்பர்களுக்குத் தெரிவித்தல் நல்லது. உதாரணமாக ஒரு பயனர் சனவரி 1 வரை விடுப்பில் செல்கிறார் என்று கொண்டால் அவர் தனது பேச்சுப்பக்கத்தில் இந்த வார்ப்புருவை இடலாம். {{wikibreak|[[User:Example|உதாரணப்பயனர்]]| on சனவரி 1}} He would get this:
உதாரணப்பயனர் குறுகிய விக்கி விடுப்பில் உள்ளார். மீண்டும் on சனவரி 1 விக்கிப்பணிக்கு திரும்புவார். |
விக்கி விடுப்பு ஒரு மின்சார நிறுத்தத்தை எதிர்கொண்டுள்ளமையால் உடனடியாக இணையத்திற்கான அணுக்கத்தைப் பெற முடியவில்லை. ஆகவே, இவர் ஒரு காலவரையறையற்ற விக்கி விடுப்பை எடுத்துக் கொள்கின்றார். |