விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 27
Appearance
- 1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
- 1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
- 1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் தொடங்கப்பட்டது.
- 1911 – இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் இசைக்கப்பட்டது.
- 1945 – 29 நாடுகளின் ஒப்புதலுடன் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.
- 1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- 1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானைக் கைப்பற்றியது. அரசுத்தலைவர் அபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டார், பப்ராக் கர்மால் தலைவரானார்.
- 2007 – பாக்கித்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ (படம்) ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
விருகம்பாக்கம் அரங்கநாதன் (பி. 1931) · வ. நல்லையா (இ. 1976) · சீனு மோகன் (இ. 2018)
அண்மைய நாட்கள்: திசம்பர் 26 – திசம்பர் 28 – திசம்பர் 29