உள்ளடக்கத்துக்குச் செல்

வால்ட் டிஸ்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்ட் டிஸ்னி
Walt Disney

இயற் பெயர் வால்ட்டர் எலியாஸ் டிஸ்னி
பிறப்பு (1901-12-05)திசம்பர் 5, 1901

[2]
சிக்காகோ,  ஐக்கிய அமெரிக்கா

இறப்பு திசம்பர் 15, 1966(1966-12-15) (அகவை 65)

[1]
கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா

தொழில் திரைப்பட இயக்குநர், வால்ட் டிஸ்னி கம்பனியை ஆரம்பித்தவர்.
துணைவர் லில்லியன் பவுண்ட்ஸ் (1925-1966)
பிள்ளைகள் டயான், சரன்
வால்ட் டிஸ்னியின் கையொப்பம்
Newman Laugh-O-Gram (1921)

வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கத்திற்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைவுப்படம் அமைப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மவுஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் ஐம்பத்து ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் விருதுகளும் வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை[4] . இதனால் இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றவர்.[5] ஏழு எம்மி விருதுகள் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து பூங்கா(அனஹெயிம்) மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், டோக்கியோ டிஸ்னி (ஜப்பான்) மற்றும் டிஸ்னிலாந்து ,சீனா (ஹாங்காங்) போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.

புளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.

ஆரம்ப காலம்

[தொகு]

வால்ட் டிஸ்னி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி சிக்காகோவில் உள்ள ஹேர்மோசா சமூகப் பிரதேசத்திலுள்ள 2156 N டிரிப் அவெனியூவில் ஈரானியக் கனேடியரான எலியாஸ் டிஸ்னிக்கும், ஜெர்மனிய மற்றும் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்த புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாகப் பிறந்தார்.[6][7]. 1906 ஆம் ஆண்டு , வால்ட் டிஸ்னிக்கு நான்கு வயதாக இருந்தபோது அவர்களுடைய குடும்பம் மிசோரிக்கு சென்றது. ஏனெனில் அங்குதான் அவர்களுடைய மாமா நிலம் வாங்கியிருந்தார். அங்கு அவருடைய படம் வரையும் திறனை வளர்த்தார். இவர் முதன் முதலாக தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவருக்கு ஒரு குதிரை படம் ஒன்றினை பணத்திற்காக வரைந்து கொடுத்தார். டிஸ்னி வண்ண பென்சில்கள் மற்றும் கிரேயான்ஸ் கொண்டு தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொண்டார். 1909 ஆம் ஆண்டில் இவரும் , அவருடைய சகோதரியும் மர்சலின் என்ற பள்ளியில் படித்தனர். 1911 ஆம் ஆண்டில் கன்சாஸ் நகரத்திற்கு சென்றனர். பின்பு கிரென்டன் இலக்கண பள்ளியில் வால்ட்டர் ஃபெஃப்பியர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னுடைய வீட்டில் இருந்த நேரத்தை விட இவருடன் இருந்த நேரம் தான் அதிகம் செலவிட்டார். வால்ட் டிஸ்னி தினமும் 4.30 மணிக்கு எழுந்து தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்து வந்தார். அதனால் பள்ளிகளில் போதிய நேரம் செலவிட இயலாத காரணத்தினால் மோசமான தரங்களையே (grades) பெற்றார். ஆனாலும் தன்னுடைய தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்வதனை ஆறு வருடங்கள் தொடர்ந்து செய்தார். மேலும் சனிக்கிழமை தோறும் கேலிச்சித்திரம் வரைவதற்காக சிறப்பு வகுப்புகளுக்கும் சென்றார். 1917 ஆம் ஆண்டில் எலியாஸ் ஓ ஷெல் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். எனவே அவர்கள் மறுபடியும் தங்களுடைய இடங்களுக்கு சென்றனர். வால்ட் டிஸ்னி மெக்கின்லே உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் பள்ளி அளவில் செயல்படும் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். அதில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமான கேலிச்சித்திரங்களை வரைந்தார். மேலும் சிகாகோ அகாதமியில் இரவு படிப்பினை மேற்கொண்டார்.

வாழ்க்கை வரலாறு (1920-1928)

[தொகு]

1920 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி , ஐவெர்க்ஸ் ஆகியோர் இணைந்து தொழில் துவங்கினர். ஆனால் அவர்கள் தொடங்கிய தொழிலில் வாடிக்கையாளர்களை கவர இயலவில்லை. எனவே அதனை தற்காலிகமாக விட்டுவிடலாம் என முடிவு செய்து விளம்பர நிறுவனம் ஒன்றினை தொடங்கினர். அதனை ஏ.வி.குகர் எனவரின் தலைமையில் மேற்கொண்டனர். பின் அவர்களுடன் ஐவெர்கஸ் இணைந்தார். அதனை அவர்கள் பிரிவகம் அசைவுப்படம் மூலம் செயல்படுத்தினர். அப்பொழுதுதான் டிஸ்னிக்கு அசைவுப்படத்தின் மீது ஆர்வம் வந்தது. மேலும் அவர் மட் அண்ட் ஜெஃப் (Mutt and Jeff) மற்றும் கோகோ தெ க்ளொவ்ன் (Koko the Clown.) போன்ற அசைவுப்படங்களை வரையத் தொடங்கினார். கல அசைவூட்டம் என்பது இன்னும் சிறப்பான முறையில் இருந்தது. ஆனால் குகரால் இந்த முறையினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் டிஸ்னி தன்னுடைய சக பணியாளருடன் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றினைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெரும் பகுதி நியூமேன் திரையரங்கிற்கு செய்து தந்தனர். எனவே அந்த வெற்றியின் காரணமாக லாஃப் ஓ கிராம் (Laugh-O-Gram Studio) என்ற ஓவிய அறையினை வாங்கினார். அந்த நிறுவனத்தில் பல அசைவுப்பட நிபுணர்களை வேலைக்கு அமர்த்தினார். அதில் ருடால்ஃப் மற்றும் ஐவெர்க்ஸ் போன்ற நிபுணர்களும் அடங்குவர். ஆனால் இந்த நிறுவனமும் போதிய அளவு லாபத்தினை ஈட்டவில்லை. எனவே டிஸ்னி அலைஸின் அற்புத உலகம் (Alice's Wonderland‍) என்பதனை நிறுவினார். அந்நிறுவனமானது அலைஸின் சாகசத்தின் அற்புத உலகம் (Alice's Adventures in Wonderland‍) என்பதனை அடிப்ப்டையாகக் கொண்டது ஆகும். அவற்றில் விர்ஜீனியா, டேவிஸ் போன்ற கதா பாத்திரங்களை அவர்கள் நிகழ்த்திக் காட்டினர். 1923 ல் டிஸ்னி ஹாலிவுட் பக்கம் சென்றார். மேலும் அப்பொழுது அமெரிக்காவில் கேலிச்சித்திரத்திற்கான நிறுவனங்கள் அங்கு அதிகமாக இருந்தன. அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தினை தேர்வு செய்தார். ஏனெனில் அவருடைய தம்பிக்கு காசநோய்க்கான சிகிச்சையினை அங்குதான் எடுத்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அவரும் அவருடைய தம்பியும் இணைந்து தெ வால்ட் டிஸ்னி என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தின் பெயரிலேயே அவர்கள் படங்களைத் தயாரித்தனர்.

மிக்கி மவுஸ் உருவாக்கம்

[தொகு]

ஓஸ்வல்ட் என்பதற்கு பதிலாக டிஸ்னி மற்றும் ஐவெர்க்ஸ் இணைந்து மிக்கி மவுஸ் என்பதனை உருவாக்கினர். ஆனால் அது எவ்வாறு உருவானது என்பது பற்றிய தெளிவான வரலாறு தெரியவில்லை. அதற்கு முதலில் மோர்ட்டிமர் எலி (Mortimer Mouse) அல்லது மிக்கி மவுஸ் என்றும் பெயர் வைக்க நினைத்தனர். ஐவெர்க்ஸ் இதற்கான உருவத்தினை சற்று மேம்படுத்தினார். 1947 ம் ஆண்டு வரையில் மிக்கி மவுஸிற்கு ஒலிவடிவம் கொடுத்து வந்தனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் பின்வருமாறு கூறினார், யுபி (Ub) மிக்கிகு உருவம் கொடுத்தார் ஆனால் டிஸ்னி இதற்கு உயிர் கொடுத்தார்.

ஆஸ்கார் விருதுகள்

[தொகு]

மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம் மற்றும் ஆஸ்கார் விருது வாங்கிய முறைக்காக வால்ட் டிஸ்னி செய்த சாதனை. இவர் வாங்கிய நான்கு ஆஸ்கார்கள் சிறப்பு விருதுகள் மற்றும் ஒன்று அவர் மறைவுக்கு பின் வழங்கப்பட்டது.

  • 1932: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக : ப்லோவேர்ஸ் அண்ட் ட்ரீஸ் (1932)
  • 1932: மதிப்பியலான விருது: மிக்கி மௌஸ் உருவாக்கியதற்காக.
  • 1934: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: திரீ லிட்டில் பிக்ஸ் (1933)
  • 1935: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி டோர்டிசே அண்ட் தி ஹேர் (1934)
  • 1936: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: திரீ ஒர்ப்பன் கிட்டேன்ஸ் (1935)
  • 1937: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி கன்ட்ரி கசின் (1936)
  • 1938: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி ஓல்ட் மில் (1937)
  • 1939: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாகr:பெர்டினன்ட் தி புல் (1938)
  • 1939: மதிப்பியலான விருது for ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937)(ஒரு பெண் சிலை மற்றும் ஏழு குட்டி சிலைகள் இவ்விருதாக வழங்கப்பட்டது)[4]
  • 1940: சிறந்த சிறிய கரு,கேலிச்சித்திரத்துகாக: தி அக்லி டக்க்ளிங் (1939)
  • 1941: மதிப்பியலான விருது for: பாண்டசிய (திரைப்படம்)|பாண்டசிய (1941), வில்லியம் எ. காரிடி மற்றும் ஜே.என்.ஏ.ஹாகின்சுடன் பங்கிட்டு கொண்டனர் [4]
  • 1942: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: லேந்து எ பா (1941)
  • 1943: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தேர் பூறேர் பேஸ் (1942)
  • 1949: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: சீல் ஐலன்ட் (1948)
  • 1949: இர்விங்.ஜி.தால்பேர்க் நினைவு விருது
  • 1951: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: பீவர் வால்லி (1950)
  • 1952: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: நேச்சர் ஹால்ப் எக்கர் (1951)
  • 1953: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: வாட்டர் பேர்ட்ஸ் (1952)
  • 1954: சிறந்த விளக்கப்படம், திரைப்படத்துக்காக: தி லிவிங் தேசெர்ட் (1953)
  • 1954: சிறந்த விளக்கப்படம், சிறிய கதைக்கருகாக: அலாச்கன் எஸ்கிமோ (1953)
  • 1954: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: டாட் விசில் ப்ளுன்க் மற்றும் பூம்.(1953)
  • 1954: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: பியர் கன்ட்ரி (1953)
  • 1955: சிறந்த விளக்கப்படம், திரைப்படத்துக்காக: வாநிஷிங் ப்ரியரி (1954)
  • 1956: சிறந்த விளக்கப்படம், சிறிய கதைக்கருகாக: மென் அகைன்ச்ட் ஆர்க்டிக்
  • 1959: சிறந்த சிறிய கதைக்கரு, நேரடி நடிக்கும் பாத்திரங்களுக்காக : கிரான்ட் கான்யான்
  • 1969: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: வின்னி தி பூ அண்ட் புல்தேரி டே.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Walt Disney". ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் May 21, 2008.
  2. "Walt Disney". ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 2008-05-21.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-30.
  4. 4.0 4.1 4.2 "Walt Disney Academy awards". Academy of Motion Picture Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 2008-05-21.
  5. "Results Page – Academy Awards Database". பார்க்கப்பட்ட நாள் February 16, 2012.
  6. Lori Rackl (September 27, 2009). "Walt Disney, the man behind the mouse". Chicago Sun-Times இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 3, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091003001653/http://www.suntimes.com/lifestyles/1790811,disney-walt-museum-san-francisco-092709.article. பார்த்த நாள்: October 21, 2010. 
  7. "Walt Disney biography". Just Disney. Archived from the original on ஜூன் 5, 2008. பார்க்கப்பட்ட நாள் May 21, 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

மேலதிக வாசிப்பிற்கு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்_டிஸ்னி&oldid=3931619" இலிருந்து மீள்விக்கப்பட்டது