உள்ளடக்கத்துக்குச் செல்

வலை தேடு பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலை தேடு பொறி (web search engine) என்பது உலகளாவிய வலையில் ஒரு குறிப்பிட்ட தகவலைப் பற்றி தேடுவதற்கு பயன்படுகிறது. தேடல் முடிவுகள் வலைப்பக்கங்கள், படங்கள், ஒலி, ஒளி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கிடைக்கும். இந்த தேடலில் கிடைக்காத முடிவுகளை நாம் ஆழமான வலை (Deep Web) என்கிறோம்.

வரலாறு

[தொகு]

முதல் தேடு பொறி இணையத்தில் 10 செப் 1990-ல் கோப்புகளைத் தேடுவதற்காக பயன்பட்டது. அதனை நாம் ஆர்ச்சி என அழைக்கலாம்[1]. 2000-ஆம் ஆண்டில் யாஹூ தனது தேடல் சேவையைத் தொடங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 1998-ல் தனது MSN தேடல் சேவையைத் தொடங்கியது. பின்பு 2009-ல் Bing-ற்கு மாறியது.

தேடு பொறி சேவைகள்

[தொகு]
  • கூகுல்
  • யாஹூ
  • பிங்
  • டக் டக் கோ
  • ஸ்டார்ட் பேஜ்

சந்தை பங்குகள்

[தொகு]

கூகுல் தான் தற்போது மிக பிரபலமான தேடல் பொறி ஆகும். அதனுடைய சந்தை பங்கு பிப்ரவரி 2018-ன் படி 74.52% ஆகும்.

தேடல் பொறிகள் பங்குகள்
கூகுல் 74.06% 74.06
 
பிங் 8.06% 8.06
 
பாய்டு 10.94% 10.94
 
யாஹூ 5.32% 5.32
 

சார்புடைமை

[தொகு]

தேடு பொறிகள் நடுநிலையாக புரோக்ராம் செய்ய பட்டிருந்தாலும், சில காரணங்களின் அடிப்படையில் தான் வலைதளங்கள் தேடல் முடிவுகளில் காண்பிக்கப்படுகின்றன. அவை பிரபலத்தன்மை, பொருத்தம் அடிப்படையில் அமைகின்றன. சிலவை அரசியல், பொருளாதார, சமூக தாக்கங்களுக்கு உட்பட்டு இருக்கும். கூகுல் சேவையில் முதலில் காண்பிக்கப்படும் சில முடிவுகள் வேறொரு சேவையில் கிடைக்காது. இது அந்தந்த சேவையின் படிமுறை படியே அமையும்.

மேற்கோள்

[தொகு]
  1. "Archie", groups.google.com, பார்க்கப்பட்ட நாள் 2018-05-05

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலை_தேடு_பொறி&oldid=3228062" இலிருந்து மீள்விக்கப்பட்டது