ரொஞ்ச்சாம்ப் சிற்றாலயம்
Appearance
ஹாட்டின் நமது அன்னை திருத்தலம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ரொஞ்ச்சாம்ப், Haute-Saône, பிரான்சு |
புவியியல் ஆள்கூறுகள் | 47°42′14″N 6°37′16″E / 47.70389°N 6.62111°E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
நிலை | திருப்பயண சிற்றாலயம் |
ரொஞ்ச்சாம்ப் சிற்றாலயம் (Ronchamp chapel) என வழங்கப்படும், பிரான்ஸின், ரொஞ்ச்சாம்ப் என்னும் இடத்திலுள்ள நொட்ரே டேம் டு ஹோட் (Notre Dame du Haut) என்னும் கிறிஸ்தவ சிற்றாலயம், அதன் கட்டிடக்கலைக்காகப் புகழ் பெற்ற நவீன கட்டிடம் ஆகும். இது 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களில் ஒருவரான, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெ கொபூசியே என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1954 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இது 20 ஆம் நூற்றாண்டின் சமயம் சார்ந்த கட்டிடக்கலைக்கு வெற்றிகரமான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.