ரவுதஹட் மாவட்டம்
ரவுதஹட் மாவட்டம் (Rautahat District) (நேபாளி: रौतहट जिल्लाⓘ, தெற்காசியாவில் அமைந்த நேபாளத்தின், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கௌர் நகரம் ஆகும்.
நாராயணீ மண்டலத்தில் அமைந்த ரௌத்ஹட் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1,126 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 6,86,722 ஆக உள்ளது. பிற மாவட்டங்களை விட இம்மாவட்டத்தில் இசுலாமியர்களின் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. 2001-இல் இசுலாமியர் மக்கள் தொகை 19.465% (1,06,111) ஆக இருந்தது.[1]இம்மாவட்டத்தில் பஜ்ஜிகா மொழி (60%), நேபாள மொழி (21%) மற்றும் இந்தி மொழி-உருது (13%) மற்றும் பிற மொழிகள் (6%) பேசப்படுகிறது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
[தொகு]இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 1,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம் மற்றிம் மேல் வெப்ப மண்டலப் பகுதி என இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. [2]
கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்
[தொகு]ரௌத்ஹட் மாவட்டத்தில் கௌர் நகராட்சியும், நூற்றி நான்கு கிராம வளர்ச்சி மன்றங்களும் செயல்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Population bdistricts n for regions and districts, archived from the original on 2013-01-22, பார்க்கப்பட்ட நாள் 2017-01-09
- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 89 (help)