உள்ளடக்கத்துக்குச் செல்

மைசெசு திறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசெசு திறப்பு
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
d3 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.d3
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் A00
பெயரிடப்பட்டது சாக்குவசு மைசெசு
மூலம் இயல்பற்ற திறப்பு
Chessgames.com opening explorer

சதுரங்க விளையாட்டில் மைசெசு திறப்பு (Mieses Opening ) என்ற திறப்பாட்டம்,

1. d3

என்ற அடையாள நகர்வுடன் ஆரம்பமாகிறது.

இயல்புக்கு மாறான நகர்வுடன் தொடங்கும் இத்திறப்பு செருமானிய – ஆங்கில கிராண்டுமாஸ்டரான சாக்குவசு மைசெசு என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. சதுரங்க திறப்புகளுக்கான கலைக்களஞ்சியத்தில் மைசெசு திறப்பிற்கு A00 என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

விளக்கம்

[தொகு]

வெள்ளை ஆட்டக்காரர், தன் ஆட்டத்தை இருபது நகர்வுகளில் ஏதேனும் ஒன்றுடன் தொடங்குவார். இவற்றில் பிரபலமான நகர்வுகளின் அடிப்படையில் 1.d3 என்ற மைசெசு திறப்பு நகர்வு பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. வெள்ளை ஆட்டக்காரர் 1.d3 என்று நகர்த்துவதால், c1 சதுரத்தில் உள்ள அமைச்சர் வெளிவர வழியேற்படுகிறது. அதே நேரத்தில் மையப்பகுதியை ஆக்கிரமிக்க எடுக்கப்படும் மிதமான நடவடிக்கையாகவும் உள்ளது. ஆனால், 1.d4 விளையாடுவதால் கிடைக்கும் மைய ஆக்கிரமிப்பு அனுகூலம் இந்நகர்வில் குறைவே ஆகும். வெள்ளை தன்னுடைய தொடக்கத்தை எந்த நகர்வைக் கொண்டு ஆரம்பித்தாலும், அதற்கு எதிராக கருப்பு 1...d6 என்ற வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது[1]. எனினும், கருப்பு விளையாட 1...e5, 1...d5, 1...c5, 1...Nf6, மற்றும் 1...g6. என மேலும் பல வாய்ப்புகள் உள்ளன.

1997[2] ஆம் ஆண்டில் காரி காசுபரொவ், டீப்புளு கணிப்பொறி ஆகியோருக்கு இடையிலான மூன்றாவது ஆட்டத்தில், மைசெசு திறப்பாட்டம் விளையாடப்பட்டதுதான் இத்திறப்பாட்டத்தின் பிரபலமான பயனாகும். இயல்புக்கு மாறான நகர்வு என்பதால் கணிப்பொறி சுயமாக சிந்தித்து ஆடுவது சிரமமாக இருக்குமென்று காசுபொரோவ் சிந்தித்தார். அந்த ஆட்டம் இறுதியில் சமநிலையில் முடிந்தது[3]. அதற்கு முன்னதாக டேவிட் லெவி மற்றும் கிரே பிளிட்சு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டு அந்த ஆட்டத்தில் வெள்ளை வெற்றி கண்டுள்ளார்[4].

மாதிரி ஆட்டம்

[தொகு]
abcdefgh
8
a8 black rook
b8 black rook
d8 black bishop
h8 black king
f7 black pawn
g7 black pawn
h7 black bishop
a6 black pawn
c6 black knight
d6 black pawn
f6 black knight
h6 black pawn
c5 black pawn
d5 white knight
f5 white pawn
c4 white pawn
e4 white pawn
c3 white knight
d3 white pawn
a2 white rook
d2 white bishop
h2 white pawn
d1 white bishop
f1 white rook
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
29...Nc6 பின்னரான நிலை

காரி காசுபரொவ்டீப் புளூ, ஆட்டம் 3, மே 1997[5]

1.d3 e5 2.Nf3 Nc6 3.c4 Nf6 4.a3 d6 5.Nc3 Be7 6.g3 0-0 7.Bg2 Be6 8.0-0 Qd7 9.Ng5 Bf5 10.e4 Bg4 11.f3 Bh5 12.Nh3 Nd4 13.Nf2 h6 14.Be3 c5 15.b4 b6 16.Rb1 Kh8 17.Rb2 a6 18.bxc5 bxc5 19.Bh3 Qc7 20.Bg4 Bg6 21.f4 exf4 22.gxf4 Qa5 23.Bd2 Qxa3 24.Ra2 Qb3 25.f5 Qxd1 26.Bxd1 Bh7 27.Nh3 Rfb8 28.Nf4 Bd8 29.Nfd5 Nc6 (படத்தைப் பார்க்க) 30.Bf4 Ne5 31.Ba4 Nxd5 32.Nxd5 a5 33.Bb5 Ra7 34.Kg2 g5 35.Bxe5+ dxe5 36.f6 Bg6 37.h4 gxh4 38.Kh3 Kg8 39.Kxh4 Kh7 40.Kg4 Bc7 41.Nxc7 Rxc7 42.Rxa5 Rd8 43.Rf3 Kh8 44.Kh4 Kg8 45.Ra3 Kh8 46.Ra6 Kh7 47.Ra3 Kh8 48.Ra6 ½–½

மேற்கோள்கள்

[தொகு]
  1. The book An Explosive Chess Opening Repertoire for Black is devoted to giving "Black a complete opening repertoire with the opening move 1...d6." Jouni Yrjola and Jussi Tella, An Explosive Chess Opening Repertoire for Black, Gambit Publications Ltd., 2001, p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-901983-50-1.
  2. Kasparov vs. Deep Blue rematch, Game 3 பரணிடப்பட்டது 2007-04-09 at the வந்தவழி இயந்திரம் (www.chessbase.com)
  3. Chess Life, Special Summer Issue 1997.
  4. Need 4 games Cray Blitz-Levy 1984 Computer Chess Club archives at stmintz.com
  5. Kasparov Vs Deep Blue, Game 3, May 6, 1997 (www.chesscorner.com)

இவற்றையும் காண்க

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசெசு_திறப்பு&oldid=3849732" இலிருந்து மீள்விக்கப்பட்டது