மைக்கேல் சாட்டா
மைக்கேல் சாட்டா | |
---|---|
சாம்பியாவின் ஐந்தாவது குடியரசுத்தலைவர் | |
பதவியில் செப்டம்பர் 23 2011 – 28 அக்டோபர் 2014 | |
துணை அதிபர் | கை ஸ்காட் |
முன்னையவர் | ரூப்பையா பண்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 ஜூலை 1937 எம்பிகா, வடக்கு ரொடீசியா (தற்போது சாம்பியா) |
இறப்பு | 28 அக்டோபர் 2014 |
அரசியல் கட்சி | நாட்டுப்பற்றுமிக்க முன்னணி |
சமயம் | கத்தோலிக்கத் திருச்சபை[மேற்கோள் தேவை] |
மைக்கேல் சிலுஃப்யா சாட்டா (Michael Chilufya Sata, 6 ஜூலை 1937 - 28 அக்டோபர் 2014 [1]) செப்டம்பர் 23, 2011 முதல் 28 அக்டோபர் 2014 [2], தன் இறப்பு வரை சாம்பியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். சாம்பியாவின் முதன்மை அரசியல் கட்சிகளில் ஒன்றான "நாட்டுப்பற்றுமிக்க முன்னணி" (Patriotic Front) தலைவராகவும் விளங்கினாறார். 1990களில் குடியரசுத்தலைவர் பிரெடெரிக் சிலுபாவின் பலகட்சி சனநாயகத்திற்கான இயக்கத்தின் ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். 2001ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து விலகி தமது கட்சியான நாட்டுப்பற்றுமிக்க முன்னணியை நிறுவினார். 2006ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சித் தலைவராக அப்போதைய குடியரசுத் தலைவரான லெவி முவனவாசாவிற்குப் பெரும் மாற்றாக "கிங் கோப்ரா" என ஊடகங்களால் விவரிக்கப்பட்டார். இருப்பினும் அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார். முவனவாசாவின் இறப்பிற்குப் பிறகு 2008ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட சாட்டா ரூப்பையா பண்டாவிடம் தோல்வியுற்றார்.
பத்தாண்டுகளாக எதிர்கட்சியில் இருந்தபிறகு தற்போதைய குடியரசுத் தலைவரான பந்தாவை 2011 தேர்தல்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "China's stake in Zambia's election", BBC, 19 September 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.
வெளியிணைப்புகள்
[தொகு]- Presidency of Zambia (State House) பரணிடப்பட்டது 2005-06-19 at the வந்தவழி இயந்திரம் Official Website
- Patriotic Front website பரணிடப்பட்டது 2006-10-19 at the வந்தவழி இயந்திரம்